தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Rahul Gandhi: ’வயநாடா? ரேபரேலியா?’ ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகும் தொகுதி எது! காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்!

Rahul Gandhi: ’வயநாடா? ரேபரேலியா?’ ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகும் தொகுதி எது! காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்!

Kathiravan V HT Tamil
Jun 08, 2024 04:15 PM IST

Rahul Gandhi: வரும் ஜூன் 15ஆம் தேதி 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் முடிவை வரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்

Rahul Gandhi: ’வயநாடா? ரேபரேலியா?’ ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகும் தொகுதி எது! காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்! (File Photo/Bloomberg)
Rahul Gandhi: ’வயநாடா? ரேபரேலியா?’ ராகுல் காந்தி ராஜினாமா செய்யப்போகும் தொகுதி எது! காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்! (File Photo/Bloomberg)

ட்ரெண்டிங் செய்திகள்

3 அல்லது 4 நாட்களில் முடிவு 

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வரும் 18-வது மக்களவையில் எந்த தொகுதியை பிரதிநிதிப்படுத்துவது என்பது குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வரும் ஜூன் 15ஆம் தேதி 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி ராஜினாமா செய்யும் முடிவை வரும் ஜூன் 17ஆம் தேதிக்குள் எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்த்ற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "நிச்சயமாக, அந்த முடிவு 17 ஆம் தேதிக்கு முன் எடுக்கப்பட வேண்டும். அது மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் வரும்" என்று  கூறினார்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் 

கடந்த 2019ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் தோல்வியையும், வயநாடு தொகுதியில் வெற்றியையும் பெற்றார். 

அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வயநாடு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார். 

வயநாடு தொகுதியில் மொத்தம் பதிவான மொத்த வாக்குகளில் 647,445 வாக்குகளை ராகுல் காந்தி பெற்றார். அதே சமயம் அவரது இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) அன்னி ராஜா 283,023 (26% வாக்குகள்) பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்துள்ளது. 

மறுபுறம், உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 687,649 (66%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தினேஷ் பிரதாப் சிங் 297,619 (29%) வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 

ரேபரேலி தொகுதியில் போட்டி ஏன்?

ராகுல் காந்தியின் தாயும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, 5 முறை ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி கடந்த பிப்ரவரி மாதம் ராஜ்யசபாவுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டியிட்டார். 

இந்தியாவில் நாடாளுமன்றம் அல்லது சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஒருவர், அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் இருந்து போட்டியிடலாம். இரண்டு தொகுதிகளிலும் வென்றால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதியாக உள்ளது. இதனால் காலியாக உள்ள உள்ள பதவிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, டிகே சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் எம்பி குமாரி செல்ஜா கூறுகையில், ”மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது காங்கிரஸ் காரிய கமிட்டியின் விருப்பம்” என்று கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க ஒருமனதாக கோரிக்கை

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆலப்புழாவில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் கூறுகையில், “லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாகக் கேட்டுக் கொண்டது” என்றார்.

டி20 உலகக் கோப்பை 2024