தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pfi Arrested: கர்நாடகா, அஸ்ஸாமில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 75 பேர் கைது

PFI arrested: கர்நாடகா, அஸ்ஸாமில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 75 பேர் கைது

Karthikeyan S HT Tamil

Sep 27, 2022, 05:02 PM IST

இந்தியாவின் 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: கர்நாடகாவில் நடத்தப்பட்ட சோதனையில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 50 பேரும் அஸ்ஸாமின் 8 மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 25 பேரையும் அந்தந்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

HBD Karl Marx: ‘புரட்சிகளுக்கு வித்திட்ட கலகக்காரன்!’ கம்யூனிச மேதை காரல் மார்க்ஸின் தத்துவங்கள் நடைமுறைக்கு சாத்தியமா?

Paytm President Bhavesh Gupta: பேடிஎம் தலைவர் பவேஷ் குப்தா ராஜினாமா.. திடீர் முடிவின் பின்னணி என்ன? முழு தகவல்!

Revanna: ’பாலியல் வீடியோ விவகாரம்! முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ஹெச்.டி.ரேவண்ணா கைது!’ கர்நாடக அரசியலில் பரபரப்பு!

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில், என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து நடத்திய சோதனையில் 106 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து பிஎஃப்ஐ கட்சி தொண்டர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் நடந்தப்பட்ட என்ஐஏ சோதனை எனக்கூறி, எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக கேரளாவில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில் சட்டவிரோதமான செயல்களுக்காக நிதியுதவி திரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், அஸ்ஸாம், குஜராத், மகாராஷ்டிரா, தில்லி தெலங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் அந்தந்த மாநில காவல் துறையினர் இன்று (செப்.27) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில், அஸ்ஸாமில் மட்டும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அம்மாநில காவல்துறை தீவிர சோதனை நடத்தி இதுவரை 50 பேரை கைது செய்துள்ளது. ஏற்கனவே என்ஐஏ சோதனை நடத்தி, கைது நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் தற்போது அந்தந்த மாநில காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டாபிக்ஸ்