தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Robbery: யப்பா சாமி பெரிய குரூப்பா இருக்கும் போல - சிக்கிய கொள்ளை கும்பல்!

Robbery: யப்பா சாமி பெரிய குரூப்பா இருக்கும் போல - சிக்கிய கொள்ளை கும்பல்!

Mar 26, 2023, 04:48 PM IST

தமிழ்நாட்டைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிக்கினர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிக்கினர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிக்கினர்.

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ஆளில்லா வீடுகளின் நோட்டமிட்டு அடையாளம் தெரியாத கும்பல் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்வதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Poonch attack: பூஞ்ச் தாக்குதல் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்-பென்சில் ஸ்கெட்ச் ரிலீஸ்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு மே 15-ல் விசாரிக்கப்படும் - உச்ச நீதிமன்றம்!

CBSE Board Exam Result 2024: DigiLocker மூலம் பள்ளிகளுக்கு சேதி.. சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

NEET 2024: நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு.. மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன..?

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆர் எஸ் புறத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் கொள்ளை கும்பல் புகுந்து பீரோவை உடைத்து அதிலிருந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர். வீட்டின் வாசலில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரையும் திருடிச் சென்றுள்ளனர்.

காரில் இருந்த நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு அந்த வாகனத்திலேயே பல கொள்ளை சம்பவங்களை நடத்தியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பலமனேரியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம் படும்படி கார் ஒன்று நின்றுள்ளது.

அப்போது காரில் இருந்தவர்களிடம் ரோந்து பணிக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லிய அவர்கள் திடீரென காரை விட்டுத் தப்பி ஓடி உள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலை உடனடியாக பிடிக்கும் படி சித்தூர் எஸ்பி ரிஷாந்த் உத்தரவிட்டார். இந்நிலையில் பலமனேரு டிஎஸ்பி சுதாகர் ரெட்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளை கும்பலைத் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த தனிப்படை காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ஏழு பேரைக் கைது செய்தனர். விசாரணையில், திருப்பத்தூர் சந்தோஷ், சுதாகர், அரவிந்த், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சந்திர பிரகாஷ், திருவண்ணாமலையைச் சேர்ந்த கலைச்செல்வன், சிவன், சின்ன சாமி என தெரிய வந்துள்ளது.

சிவன் மீது ஐந்து கொலை வழக்குகளும், தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரோடு மாவட்டத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளை இவர்கள் திருடியுள்ளனர்.

திருடிய பொருட்களை வச்ச பணத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலங்களை வாங்கி சொத்து சேர்த்துள்ளனர். கொள்ளையடித்து வாங்கப்பட்ட நிலங்களின் ஆவணங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஈரோடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கொள்ளை கும்பலிடம் இருந்து மொத்தம் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்