தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  16 Dead Nearly 50 Missing In Massive Ecuador Landslide

Ecuador Landslide : ஈக்வடாரில் நிலச்சரிவு - 16 பேர் உயிரிழப்பு..23 பேர் காயம்!

Divya Sekar HT Tamil

Mar 28, 2023, 09:09 AM IST

ஈக்வடாரில் உள்ள சிம்போரோசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
ஈக்வடாரில் உள்ள சிம்போரோசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

ஈக்வடாரில் உள்ள சிம்போரோசா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

ஈக்வடாரின் தெற்கு மாகாணங்களில் பல மாதங்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, ஏராளனமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து வருகிறது. இந்நிலையில் ஈக்வடார் நாட்டின் சிம்போராசோ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Cat accidentally sets house on fire: பூனையின் அட்டகாசத்தால் பற்றி எரிந்த வீடு.. ரூ.11 லட்சம் பொருட்கள் நாசம்

Russian woman: தனது டிக்கெட்டில் டெல்லி விமான நிலைய அதிகாரி தொலைபேசி எண்ணை எழுதியதாக ரஷ்ய பெண் புகார்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

அலவுசி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல்வேறு வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்து 16 பேர் உயிரிழந்தனர். மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 23 பேர் காயமடைந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோரை தேடும்பணி தீவிரமாக்கியுள்ளனர்.

மேலும் சுமார் 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை செயலகம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட சிம்போராசோ மாகாணத்தில் உள்ள அலாசி கிராமத்திற்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மீட்புப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக ஈக்வடார் அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இந்த மண்சரிவு நிகழ்ந்தது, குயிட்டோவிற்கு தெற்கே சுமார் 300 கிலோமீட்டர் (180 மைல்) தொலைவில் உள்ள சிம்போராசோ மாகாணத்தில் உள்ள அலௌசி கிராமத்தில் டஜன் கணக்கான வீடுகள் புதைந்து 23 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெய்த கனமழையால் 72 வீடுகள் இடிந்து 6,900க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்