தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Maharashtra: மகாராஷ்டிரா விபத்தில் சிக்கி 13 பேர் பலி - கர்நாடகாவில் 4 பேர் பலி

Maharashtra: மகாராஷ்டிரா விபத்தில் சிக்கி 13 பேர் பலி - கர்நாடகாவில் 4 பேர் பலி

Apr 15, 2023, 12:23 PM IST

உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்து விழுந்த வேகத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்து விழுந்த வேகத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்து விழுந்த வேகத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்று தன் ஊழியர்களை புனேயில் நடந்த நிகழ்ச்சிக்கு பேருந்து ஒன்றில் அழைத்துச் சென்றிருந்தது. அவர்கள் புனே நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை புறப்பட்டு தனியார் பேருந்தில் மூலம் மும்பைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Sam Pitroda row: ‘நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்’: பிரதமர் மோடி

Google Wallet for Android users in India: இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலட் இனி கிடைக்கும்!

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு-சுப்ரீம் கோர்ட் கூறியது என்ன?

Microsoft: ‘ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்’

அந்த பேருந்தில் 45 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து லோனவாலாவை தாண்டி கொபோலி மலைப்பகுதியில் வந்த போது போர்கட் என்ற இடத்தில் வளைவு ஒன்றில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பேருந்தில் சிக்கிக்கொண்டவர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். இது குறித்து உடனே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினரும், போலீஸாரும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீட்பு குழுவினருடன் இணைந்து உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பேருந்து விழுந்த வேகத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்து மீட்கப்பட்டு கொபோலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து அதிகாலை 4 மணிக்கு நடந்ததால் மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. பலர் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மீட்புக்குழுவினர் காலை வரை தேடி மீட்டனர். 25 பேர் காயம் அடைந்திருக்கின்றனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்தது.

இந்தச் சம்பவத்தால் விபத்து நடந்த இடத்தில் காவல்துறை வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் சாலையின் இரு பக்கமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் புனே-மும்பை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையாக நின்றது. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் தனியார் பேருந்து மீது கார் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்