தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  11 Year Old Boy Murdered In A Mob Clash

பீகாரின் சூப்பாலில் நிலத்தகராறில் 11 வயது சிறுவன் அடித்துக்கொலை

Priyadarshini R HT Tamil

Mar 25, 2023, 05:15 PM IST

சுக்காசன் கிராமத்தில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 16 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இடையில் வந்த சிறுவன் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

வெள்ளிக்கிழமை பீகாரின் சூபால் மாவட்டத்தில் 11 வயது சிறுவன், இரு குழுக்களுக்கு இடையே நிலத்தகராறு தொடர்பாக நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பியோடிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Cat accidentally sets house on fire: பூனையின் அட்டகாசத்தால் பற்றி எரிந்த வீடு.. ரூ.11 லட்சம் பொருட்கள் நாசம்

Russian woman: தனது டிக்கெட்டில் டெல்லி விமான நிலைய அதிகாரி தொலைபேசி எண்ணை எழுதியதாக ரஷ்ய பெண் புகார்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய விவகாரம்..மன்னிப்பு கேட்ட ED..உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

International Sculpture Day 2024: சர்வதேச சிற்பக் கலை நாளின் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

இந்தச் சம்பவம் சுகாசன் கிராமத்தில் நடைபெற்றது. 16 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பான பிரச்னையில், இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற தகராறில் குறுக்கே சென்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டான்.

ராஜேந்திர ஷா மற்றும் விலாஸ் ஷா ஆகிய இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் அந்த கிராமத்தில் நிலத்தகராறு இருந்துவந்தது. 

இவ்விருவரின் தலைமையில் இரு குழுக்ககளாக அக்கிராம மக்கள் மோதிக்கொண்டனர். ராஜேந்திர ஷாவின் மகன் எதிர்தரப்பினரால் தாக்குதலுக்கு ஆளானார். இதையடுத்து, அந்தச்சிறுவனை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்கள். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இத்தகவலை கிஷீன்கஞ்ஜ் போலீஸ் நிலையத்தில் உள்ள மெஹபூப் ஆலம் கூறினார். 

போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். அவர்கள் சிறுவனை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்