தினமும் நீங்கள் குறைந்தது 3 வால்நட்களாவது எடுக்கவேண்டும், ஓ இதுதான் காரணமா? எத்தனை நன்மைகள் பாருங்க!
Nov 17, 2024, 09:57 AM IST
தினமும் 3 வால்நட்கள் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் தினமும் 3 வால்நட்களை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதை தெரிந்துகொண்டால் நீங்கள் உடனே கடைக்குச் சென்று ஒரு வால்நட் மூட்டையை வாங்கி வந்துவிடுவீர்கள். உங்களின் பழக்கம் கட்டாயம் மாறவேண்டுமெனில் கட்டாயம் படியுங்கள். உங்கள் அன்றாட உணவில் நீங்கள் வால்நட்களை சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளும் வழிகளுள் முக்கியமானது. இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த வால்நட்டை நீங்கள் எடுத்துக்கொள்வதால், அது உங்கள் உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆசிட்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்களைத் தருகிறது. உங்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட வேறு என்னவேண்டும்? என்ன 3 வால்நட்களை கையில் எடுத்துவிட்டீர்களா?
இதய ஆரோக்கியம்
வால்நட்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது. இது உங்கள் தமனிகளை சிறப்பாக செயல்படவைக்கிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரித்து இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
மூளைக்கு டானிக்
வால்நட்களில் அதிகளவில் டிஹெச்ஏ உள்ளது. இது ஒருவகை ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் ஆகும். வால்நட்கள், மூளை செயல்திறனை அதிகரிக்கின்றன. நினைவாற்றலை மேம்படுத்துகின்றன. வயோதிகத்தால் ஏற்படும் மூளை செயலிழப்பை தடுக்கிறது. இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களின் கவனிக்கும் திறனை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தைக்கும் பங்களிக்கிறது.
உடல் எடை மேலாண்மை
வால்நட்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது. உங்களின் பசியைப் போக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள அதிக கலோரிகள், உடல் எடையை பராமரிப்பதில் உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகிறது. வயிறு நிறைந்த உணர்வு தருவதன் மூலம் இதைச் செய்கிறது. இது ஒட்டுமொத்த கலோரிகள் உட்கொள்ளும் அளவைக் குறைக்கிறது.
செரிமானத்தை தூண்டுகிறது
வால்நட்களில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது. இதனால் குடல் இயக்கம் சீராகிறது. இது குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு நன்மை தருகிறது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனுக்கு நல்லது. ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது.
ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது
வால்நட்கள் லோகிளைசமிக் இண்டக்ஸ் உணவுகளுள் ஒன்று. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இது ஒரு நல்ல ஸ்னாக்ஸ் ஆகும். நீரிழிவு நோயாளிகள் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு ஏற்றது.
எலும்பு ஆரோக்கியம்
வால்நட்களில் அதிகளவில் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற மினரல்கள் உள்ளது. இது வலுவான எலும்பை உருவாக்க மிகவும் தேவையானது. எனவே நீங்கள் வால்நட்களை அன்றாடம் உட்கொள்ளும்போது அது உங்களின் எலும்பு அடர்த்தியைக் காக்க உதவுகிறது. வயோதிக காலத்தில் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது
வால்நட்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் இ மற்றும் பி காம்ப்ளக்ஸ் ஆகியவைஇ ஆரோக்கியமான மற்றும் பளபளக்கும் சருமத்தைக் கொடுக்கின்றன. இது ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. வீக்கத்தைக் குறைக்கிறது. சருமத்தில் நீர்ச்சத்தை தக்கவைக்கிறது. வயோதிகத்தை மெதுவாக்குகிறது மற்றும் சருமப் பொலிவை அதிகரிக்கிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
வால்நட்களில் பாலிஃபினால்கள் மற்றும் ஒமேகா 3 ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை வீக்கத்துக்கு எதிராக ஆற்றல் கொண்டவை. இந்த உட்பொருட்கள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இது ஆர்த்ரிட்டிஸ் போன்றவற்றை தடுத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உறக்க சுழற்சி
வால்நட்களில் இயற்கை மெலோட்டனின் உள்ளது. இந்த ஹார்மோன்தான் உறக்கத்தை முறைப்படுத்துகிறது. தினமும் உறங்கச் செல்லும் முன் வால்நட்களை சாப்பிட்டால் அது உங்களின் உறக்க தரத்தை அதிகரிக்கும். உறக்கம் – விழிப்பு சுழற்சியை முறைப்படுத்தும். இது நீங்கள் நிம்மதியாக உறங்கவும், ஆழமாக உறங்கவும் வழிவகுக்கிறது.
டாபிக்ஸ்