ஜீரணத்துக்கு ஏற்ற இஞ்சி குழம்பு; வயிறு உபாதைகளுக்கு விடை கொடுங்கள்! இதோ ரெசிபி!
ஜீரணத்துக்கு ஏற்ற இஞ்சி குழம்பு, வயிறு உபாதைகளுக்கு விடை கொடுங்கள். இதோ இதுபோல் செய்து பாருங்கள்.
மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். மேலும் இன்றைய மாசுபாட்டால் நமக்கு சரும தொற்றுகள் முதல் புற்றுநோய்கள் வரை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. முடி உதிர்வு என நம் அழகையும் பல்வேறு காரணிகள் பாதிக்கின்றன. அதற்கும் வீட்டிலிருந்தே நாம் சில தீர்வுகளை பின்பற்ற முடியும். எனவே நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில மருத்துவகுறிப்புக்களையும் அழகு குறிப்புக்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 2 ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
சாம்பார் பொடி – 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 3 (பெரிய வெங்காய்ம்)
புளி – சிறிதளவு
பூண்டு – 20 பல்
இஞ்சி – 25 கிராம்
வறுத்து பொடித்த வெந்தயம் – ஒரு ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - சிறிதளவு
செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவேண்டும். புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக்கொள்ளவேண்டும்.
கடாயில் நல்லெண்ணெய்விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் அரைத்த விழுதை போட்டு வதக்கவேண்டும். நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவேண்டும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவேண்டும். அடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தயப் பொடி, உப்பு எல்லாம் சேர்க்கவேண்டும்.
நன்றாக கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவேண்டும். இஞ்சி குழம்பு தயார். இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.
இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக் குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்