தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தினமும் ஒரு முள்ளங்கியை நீங்கள் ஏன் சாப்பிடவேண்டும்? – அதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

தினமும் ஒரு முள்ளங்கியை நீங்கள் ஏன் சாப்பிடவேண்டும்? – அதில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

Priyadarshini R HT Tamil

Nov 16, 2024, 11:15 AM IST

google News
தினமும் ஒரு முள்ளங்கியை நீங்கள் ஏன் சாப்பிடவேண்டும்? அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தினமும் ஒரு முள்ளங்கியை நீங்கள் ஏன் சாப்பிடவேண்டும்? அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் ஒரு முள்ளங்கியை நீங்கள் ஏன் சாப்பிடவேண்டும்? அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் ஒரு முள்ளங்கியை நீங்கள் ஏன் உங்கள் உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும்? அதில் எத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளது? முள்ளங்கி உங்கள் உடலுக்கு தரும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். முள்ளங்கி என்பது ஒரு நல்ல வேர்க்காய் ஆகும். இது பனிக்காலங்களில் பரவலாகக் கிடைக்கும். இதை நீங்கள் சாலட்கள், பராத்தாக்கள் அல்லது சட்னி என செய்து சாப்பிடலாம். இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலையும் மேம்படுத்துகிறது. உங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொள்வதால் உங்கள் உடலுக்கு 8 நன்மைகள் கிடைக்கிறது. அது என்னவென்று தெரிந்துகொண்டு உங்கள் அன்றாட உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொண்டு உடல் நலம் பெறுங்கள்.

செரிமானத்துக்கு உதவுகிறது

முள்ளங்கியில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை அதிகரிக்கிறது. மலச்சிக்கல் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. முள்ளங்கியில் உள்ள உட்பொருட்கள், பித்த உற்பத்தியை தூண்டுகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பை இரண்டும் நன்றாக இயங்க உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு ஆதரவு

முள்ளங்கியின் இயற்கை முறையில் சுத்தம் செய்யும் குணங்கள், கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இந்தக்காயில் சல்ஃபர் அடிப்படையிலான உட்பொருட்கள் உள்ளது. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. குறிப்பாக கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றி, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

நோய் எதிர்ப்பு

முள்ளங்கியில் அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு ஏற்றது. இதில் உள்ள முக்கிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல்லி நச்சுக்களை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. தொற்றுக்களைப் போக்குகிறது. இதனால் பொதுவான சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்றுக்களில் இருந்து நீங்கள் விரைவில் மீள உதவுகிறது.

உடல் எடை மேலாண்மைக்கு உதவுகிறது

முள்ளங்கியில் கலோரிகள் குறைவு மற்றும் தண்ணீர் சத்து அதிகம். இதனால் உடல் எடையை மேலாண்மை செய்வதில் முள்ளங்கி ஒரு சிறந்த தேர்வாகும். எனவே நீங்கள் தினமும் முள்ளங்கி சாப்பிடுவது உங்கள் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவும். இதை சாப்பிடும்போது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதில் கார்போஹைட்ரேட்கள் குறைவு, கலோரிகளும் குறைவு. இதனால் நீங்கள் உங்கள் சரிவிகித உணவில் முள்ளங்கியை கட்டாயம் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் உங்கள் உணவில் முள்ளங்கியை சேர்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது

முள்ளங்கியில் இயற்கை பொட்டாசியச் சத்துக்கள் உள்ளன. இது உங்கள் உடலின் ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள பொட்டாசியச் சத்துக்கள், ரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இது உங்களுக்கு ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

முள்ளங்கியில் உள்ள தண்ணீர் சத்துக்கள் உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உங்கள் சருமத்தை நெருக்கமாக்குகிறது. முள்ளங்கியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், சரும நோய்கள் மற்றும் வறட்சியைப் போக்குகிறது. இது முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் ஏற்படாமல் காக்கிறது.

வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது

முள்ளங்கியில் ஆந்தோசியானின்கள் மற்றும் மற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தவை. இந்த உட்பொருட்கள் வீக்கத்தை குறைக்கும். நாள் முழுவதும் உங்களுக்கு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளைப் போக்க உதவுகிறது. இது வீக்க பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றலை கொண்டது.

சிறுநீரக இயக்கத்துக்கு வழிவகுக்கிறது

முள்ளங்கியில் உள்ள இயற்கை சிறுநீர் பிரிப்பு குணம், உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீர் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இந்த சிறுநீர் பிரிப்பு குணம், சிறுநீரக ஆரோக்கியத்தைப் போக்குகிறது. இது உங்கள் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது உங்களுக்கு சிறுநீர் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. பொதுவாக சிறுநீரக கோனாறுகள் உள்ளவர்கள் அடிக்கடி முள்ளங்கியை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

உங்கள் உணவில் தினமும் முள்ளங்கியை சேர்த்துக்கொள்வது எப்படி?

உங்கள் உணவில் தினமும் முள்ளங்கியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இதை நீங்கள் வெட்டி சாலட்களில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் முள்ளங்கி ரைத்தா செய்தும் சாப்பிடலாம். அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். இதை நீங்கள் பராத்தாக்களில் சேர்த்து, சாம்பார் வைத்து, கிரேவி செய்து என பல்வேறு வழிகளிலும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தினமும் முள்ளங்கி சாப்பிடுவதை பழக்கமாக்கிக்கொண்டால் அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இது நீங்கள் ஃபிட்டாகவும், நல்ல ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது. இது உங்களுக்கு ஆண்டு முழுவதும் கிடைப்பதால், அன்றாட உணவில் சேர்ப்பதும் எளிது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை