ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செய்ங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செய்ங்க!

ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செய்ங்க!

Priyadarshini R HT Tamil
Nov 08, 2024 04:09 PM IST

ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு ஒரு பிடி கறிவேப்பிலை போதும். அதை இப்படி செய்து பாருங்கள்.

ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செய்ங்க!
ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா? இதோ ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை இப்படி செய்ங்க!

நமது சாப்பாட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். ஆனால் நாம் அதை வேண்டாம் என்று வீசிவிடுவோம். ஆனால் அதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. சாப்பாட்டில் சேர்க்கும்போதுதான் நாம் அதை தூக்கி வீசிவிடுகிறோம். இதுபோல் செய்து பருகுவது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு

நல்ல சூடான தண்ணீர் – ஒரு டம்ளர்

எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

நல்ல சூடான தண்ணீரில் ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலையை சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். அரை மணி நேரம் ஊறிய பின்னர் அதை எடுத்து, வடிகட்டி, அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகிவிடவேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகிவரவேண்டும்.

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், அது ரத்தத்தைத் சுத்தப்படுத்தும். செரிமானத்தை சீராக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலை முடி வளர்ச்சிக்கு உதவும்.

உடல் எடையைக் குறைக்க உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றும். கறிவேப்பிலையில் உள்ள பிற எண்ணற்ற நன்மைகளும் இதுபோல் செய்யும்போது உங்கள் உடலுக்கு கிடைத்துவிடும், இதனால் உங்கள் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

குறிப்புகள்

கறிவேப்பிலையை தண்ணீரை மட்டும் பருகும்போது, அது குடல்லி உள்ள நீர்ச்சத்துக்களை உறிஞ்சி குடலை வறண்டுபோகச்செய்யும். எனவே இதை பருகிய பின்னர் வெண்ணெய் அல்லது நெய் சாப்பிட்டுவிடவேண்டும். கறிவேப்பிலை உறிஞ்சும் நீர்ச்சத்துக்களை இந்த வெண்ணெய் அல்லது நெய் குடலில் தக்கவைத்துவிடும்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்படுபவை. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.