நம் உடலுக்கு மெக்னீசியச் சத்துக்கள் ஏன் தேவை? அது இந்த 9 காய்கறிகளில் உள்ளது? தினமும் எடுத்து வலுப்பெறுங்கள்!
Dec 20, 2024, 09:52 AM IST
நமது உடலுக்கு மெக்னீசியச் சத்துக்கள் ஏன் தேவை? அது அதிகம் உள்ள காய்கறிகள் என்ன?
உங்கள் உடலுக்கு மெக்னீசியச் சத்துக்கள் ஏன் தேவை. அது எந்த காய்கறிகளில் எவ்வளவு உள்ளது? உங்கள் உடலுக்கு மெக்னீசியச்சத்துக்கள் ஏன் தேவை, அவற்றை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். நரம்புகள் மற்றும் தசைகளை வேலை செய்யவைக்க தேவையானது மெக்னீசியம் என்ற முக்கியமான மினரல். இது இதயத்தின் ஆரோக்கியத்தையும் காக்கிறது. ஒரு சராசரியான மனிதருக்கு தினமும் 350 முதல் 400 கிராம் வரை மெக்னீசியச் சத்துக்கள் தேவை. இங்கு கொடுக்கப்பட்டுள்ள 9 காய்கறிகளில் மெக்னீசியச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அவற்றை 100 கிராம் சாப்பிட உங்களுக்கு எவ்வளவு மெக்னிசியச் சத்துக்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பாலக்கீரை
பாலக் என்பது இந்தியாவில் பிரபலமாக உள்ள ஒரு கீரையாகும். இதில் அதிககளவில் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. 100 கிராம் சமைத்த பாலக்கீரையில் 87 மில்லிகிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. எனவே கட்டாயம் தினமும் இந்தக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் நலனுக்கு நல்லது.
வெந்தயக் கீரை
இந்திய உணவுகளில் வெந்தயக் கீரை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் சுவைக்காக இந்தக்கீரையை அதிகம் சாப்பிடுகிறார்கள். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. 100 கிராம் வெந்தயக் கீரையில் 51 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது.
முருங்கைக்கீரை
முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 100 கிராம் முருங்கைக்கீரையில் 45 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்கள் உடல் நலனுக்கு நல்லது.
கடுகு கீரை
கடுகு கீரையும் இந்திய உணவுகளில் அதிகளவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது வட இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 100 கிராம் கடுகு கீரையில் 32 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது.
பாகற்காய்
பாகற்காய் அதன் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக மிகவும் பிரபலமான ஒரு காய் ஆகும். கசக்கும் என்பதால் பலருக்கும் பிடிக்காது. ஆனால் அந்த கசப்பு சுவைதான் உடலுக்கு நல்லது. 100 கிராம் பாகற்காயில் 17 மில்லி கிராம் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது.
வெண்டைக்காய்
ஓக்ரா, பிண்டி, லேடிஸ் ஃபிங்கர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. 100 கிராம் வெண்டைக்காயில் 57 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன.
பச்சைப்பட்டாணி
100 கிராம் பச்சை பட்டாணியில் 33 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஒரு காய் ஆகும். பல்வேறு இந்திய உணவுகளில் இந்தக்காய் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஸ்வீட் கார்ன்
ஸ்வீட் கார்னும் பல்வேறு உணவுகளில் சேர்த்துக்கொள்ளப்படும் ஒன்றாகும், சாலட்கள், சூப்கள், பாஸ்தா என எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட எண்ணற்ற சுவையைத்தரும் ஒரு உணவுதான் ஸ்வீட் கார்ன். 100 கிராம் ஸ்வீட் கார்னில், 27 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு பிடிக்காது என்று சொல்பவர்களே இருக்க முடியாது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது அன்றாட பயன்பாட்டில் உள்ள ஒரு காய் ஆகும். ஒரு மீடியம் அளவு உள்ள உருளைக்கிழங்கில், 48 மில்லி கிராம் மெக்னீசியச்சத்துக்கள் உள்ளது. இதை நீங்கள் தோலுடன் சாப்பிடுவது மிகவும் நல்லது. தோலை நீக்கிவிட்டும் சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்