அன்றாட உணவில் அவகேடோ; ஆரோக்கியத்தை அள்ளித்தரும் வைட்டமின்கள் நிறைந்தது! அதன் 9 நன்மைகள்!
அவகேடோவின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் அன்றாட உணவில் அவகேடோ பழங்களை சேர்த்துக்கொள்வதால், அது உங்களுக்கு உச்சி முதல் பாதம் வரை எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத்தரும். அதில் இந்த 9 நன்மைகள் மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் உடலுக்கு கூடுதல் நன்மைகள் கிடைப்பதற்கு அவகேடோ பழங்களை உங்கள் அன்றா உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இந்த உணவுச்சந்தையில் அண்மையில் இணைந்த பழங்கள்தான் அவகேடோக்கள். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்களுக்கு சிறந்த காலை உணவு ஆகும். இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இது உங்களின் நாளை ஆற்றலுடனும், திறனுடனும் செயல்படவைக்கிறது. இதில் உள்ள நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.
ஆரோக்கிய கொழுப்புக்களின் மூலம் அவகேடோ பழங்கள்
அவகேடோ பழங்களில் மோனோசாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக இதில் உள்ள ஓலியின் அமிலம் (100கிராமில் 15 கிராம் உள்ளது) இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த கொழுப்புகள், உங்களுக்கு ஆற்றலைத் தரும். இதனால் நீங்கள் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்தது அவகேடோ பழங்கள்
100 கிராம் அவகேடோ பழங்களில் 7 கிராம் நார்ச்சத்துக்கள் இருக்கும். இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் குடல் இயங்குவதை சீராக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவும். இதனால் உங்களுக்கு நாள் முழுவதும் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். எனவே உங்கள் உடல் எடையை பராமரிக்க ஏற்றதாக அவகேடோ பழங்கள் உள்ளது.