தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  What Your Nails Can Tell You About Your Health

உங்களது நகங்கள் இப்படி இருந்தால் என்ன அர்த்தம் எனத் தெரியுமா?

I Jayachandran HT Tamil

Mar 21, 2023, 09:02 PM IST

Health Tips: உங்களது நகங்களின் தோற்றம் இப்படி இருந்தால் என்ன அர்த்தம் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
Health Tips: உங்களது நகங்களின் தோற்றம் இப்படி இருந்தால் என்ன அர்த்தம் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

Health Tips: உங்களது நகங்களின் தோற்றம் இப்படி இருந்தால் என்ன அர்த்தம் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

நகங்கள் உடலின் தனித்துவமான பகுதியாகும். அவற்றில் உங்களுக்குப் பிடித்த நெயில் பாலிஷை ஃபைல் செய்யவும், பஃப் செய்யவும், நெயில் ஆர்ட் செய்யவும் நீங்கள் விரும்பலாம். ஆனால் உங்கள் நகங்களின் நிறம் மற்றும் அமைப்புகள் உடலில் ஏற்படும் பாதிப்புகளின் அறிகுறிகள் எனத் தெரிந்தால் இனி நெயில் பாலிஷ் போட மாட்டீர்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Mudakathan Keerai Rasam : மூட்டுவலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை ரசம்! எத்தனை ஆரோக்கியம் உள்ளது பாருங்கள்!

Massage Benefits : இப்டி ஒரு மசாஜ் பண்ணினா எப்டி இருக்கும் என்று எண்ணத்தோன்றும்! அத்தனை நன்மைகளை தரும் மசாஜ்!

Small Business Ideas: ‘வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்க வேண்டும்!’ பணம் கொட்டும் சிறு தொழில் ஐடியாக்கள் இதோ!

Horse Gram Thuvayal : கொள்ளு துவையல்! எல்லா சாப்பாட்டுக்கும் அட்டகாசமான காம்போ! கொழுப்பும் குறையும்!

ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்களின் நகங்கள் பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறத்திலும் பளபளப்பாகவும் இருக்கும். நகங்கள்தான் நம் விரல்களுக்கு வலுவைத் தருகின்றன. அவையே நம் உடல்நலத்தை பிரதிபலிக்கும் மாயக்கண்ணாடி ஆகும்.

நகங்கள் மென்மையாகவும், வளையக் கூடியதாகவும் அதேசமயத்தில் வலுவாகவும் இருக்கும். ஆனால் பலவீனமான நகங்கள் அடிக்கடி உடைந்து போகக்கூடும். இதுபோன்ற பிரச்னை இருப்பவர்கள் சரும நோய் சிறப்பு மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுவது நல்லது.

பலவீனமான நகங்கள் ஹைப்போ தைராய்டிசம் அறிகுறியாக இருக்கக் கூடும். பெரும்பாலும் முடி உதிர்தல், எடை அதிகரிப்பு, மனச்சோர்வு, மலச்சிக்கல், ரத்த ஓட்டத்தில் உள்ள சிக்கல்களால் ஏற்படும் ரெய்னாட்ஸ் நோய்க்குறி போன்ற பிரச்னைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின்கள் பி குழுமம், கால்சியம், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்புச்சத்து பற்றாக்குறையினாலும் நகங்களின் நிறம் மாறும்.

உங்கள் நகங்கள் வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை, பழுப்பு, ஊதா, சிவப்பு அல்லது சாம்பல் நிறமாக மாறினால் உடல் ஆரோக்கியத்தில் ஏதோ சிக்கல் உள்ளது எனப் புரிந்து கொள்ளலாம்.

மஞ்சள்காமாலை இருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் மாறும். நீல நிறமாக இருந்தால் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைக் குறிக்கும்.

சிலரது விரல்களில் அரை வட்டம் போன்ற அமைப்பு தெரியும். அது உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

ஒரு அசாதாரண நிறமாற்றம், புள்ளி, கோடு போன்றவை நகத்தில் தோன்றினால் ரத்த ஓட்ட பிரச்சனைகள், புற்றுநோய், நுரையீரல், சிறுநீரகம், இதயம் அல்லது கல்லீரல் பிரச்னைகள், பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று, ஒவ்வாமை அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகள், நிறத்தைப் பொறுத்து இருக்கலாம். எனவே, உங்கள் நகங்களை உங்கள் மருத்துவரிடம் பரிசோதித்து தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

நகத்தைக் கடிக்கும் பழக்கத்தால் நகக்கண்கள் பாதிக்கப்பட்டு சீழ் வைத்து நகங்கள் அழுகி உதிர்ந்து விடும். நகம் கடிக்கும் பழக்கம் பொதுவாக பதின்மபருவத்தினர் மத்தியில் அதிகம் இருக்கும். காரணம் அவர்களது சிந்தனைச் சிதறல், பதற்ற மனப்பான்மையாக இருக்கலாம்.

டாபிக்ஸ்