தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Horse Gram Thuvayal : கொள்ளு துவையல்! எல்லா சாப்பாட்டுக்கும் அட்டகாசமான காம்போ! கொழுப்பும் குறையும்!

Horse Gram Thuvayal : கொள்ளு துவையல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கொள்ளு – கால் கப்

ட்ரெண்டிங் செய்திகள்

Cucumber Water: உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முதல் எடை குறைப்பு வரை..!கோடை காலத்தில் மாயாஜாலம் நிகழ்த்தும் வெள்ளரி நீர்

Thyroid Function: உங்கள் டயட்டில் இந்த உணவுகளை தவறாமல் சேருங்கள்..! தைராய்டு செயல்பாட்டை சீராக்கி நலம் பெறலாம்

ICMR: தேநீர், காபி பருகுவதைத் தவிர்க்கனுமா.. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உணவு வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

Rice For Long Time : அரிசிக்குள் பூச்சிகள் வண்டுகள் விழுகாமல் இருக்க இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்!

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 15

புளி – சிறிதளவு

துருவிய தேங்காய் – அரை மூடி

கல் உப்பு – ஒரு ஸ்பூன்

பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 3 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை –

ஒரு கடாயில் கொள்ளை தனியாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய்விட்டு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பூண்டு, புளி, துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, அந்த சூட்டிலே கொள்ளையும் சேர்க்க வேண்டும். அந்த சூட்டிலே கொள்ளும் இவற்றுடன் சேர்ந்து ஒன்றாக வதங்கும். அனைத்தையும், ஆறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்துக்கொள்ள வேண்டும். இதை துவையலில் சேர்த்த கலந்துவிடவேண்டும்.

சூப்பர் சுவையில் கொள்ளு துவையல் தயார். இதை சாதத்தில் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம் அல்லது அனைத்து வகை சாதத்துடன் தொட்டுக்கொண்டும் சாப்பிட சுவை அள்ளும்.

கொள்ளு பருப்பின் நன்மைகள்

பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது

ஆஸ்துமா, சிறுநீர் பிரச்னைகள், மூச்சுக்குழாய் வீக்கம், மஞ்சள் காமாலை, அல்சர், ரத்தக்கட்டி, மாதவிடாய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. இது சளியை வெளியேற்றுகிறது மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும பளபளப்பு

கொள்ளில் உள்ள ஆஸ்டிரின்ஜென்ட் குணங்கள் சரும நோய்களுக்கு சிகிச்சை கொடுக்க உதவுகிறது. லியூக்கோடெர்மா போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. இதை ஃபேசியல் பேக்குகளிலும் பயன்படுத்தி, சரும பிரச்னைகளை தடுத்து, தெளிவான சருமத்தை கொடுக்கிறது.

நீரிழிவை கட்டுப்படுத்துகிறது

இந்திய வேதியல் தொழில்நுட்ப கல்வி மையத்தின் அறிவியலாளர்கள், பச்சை கொள்ளை சாப்பிடும்போது, அது அடுத்து சாப்பிடும் உணவை மெதுவாக ரத்தத்தில் கலக்கச்செய்வதை கண்டு பிடித்துள்ளனர். கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைக்கிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்கிறது.

எடையிழப்பை அதிகரிக்கிறது

கொள்ளு பருப்பில் உள்ள இயற்கையான குணங்கள் கொழுப்பை கரைக்கின்றன. இது எல்டிஎல் கொழுப்பை குறைத்து ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது. கொள்ளு, நேரடியாக கொழுப்பு திசுக்களை தாக்குகிறது. கொழுப்பை கரைத்து, நல்ல ஒரு உடலை கட்டுக்கோப்புடன் கொண்டுவருகிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது

இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. 

இந்த மினரல்கள், ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் நேர்மறையாக செயல்பட்டு, அந்த உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதில் உள்ள அமினோ அமிலங்கள், போதிய எண்சைம்கள் நடவடிக்கையை அதிகரித்து, ஸ்பெர்ம்கள் உற்பத்திக்கு உறுதியளிக்கிறது.

கல்லீரல் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது

பச்சை கொள்ளில் எண்ணற்ற தாவர உட்பொருட்கள் உள்ளது. அவை ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப்பொருட்கள், கல்லீரல் மற்றும் பித்தப்பையை காக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடலில் உள்ள வேதி கழிவுகளை வெளியேற்றுகிறது.

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்கிறது

உடலில் கால்சியம் பாஸ்பேட் உப்புகள் சேர்வதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கொள்ளு பருப்பில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சிறுநீரக கற்கள் கடினமாவதை தடுக்கிறது. இது ஆரோக்கியமான சிறுநீரகத்தை பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நல்ல முறையில் வெளியேற்கிறது. சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி