தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ரத்த சோகையை குணமாக்கும் கருப்பு உளுந்து! மருத்துவ பலன்கள்!

ரத்த சோகையை குணமாக்கும் கருப்பு உளுந்து! மருத்துவ பலன்கள்!

Suguna Devi P HT Tamil

Oct 17, 2024, 12:55 PM IST

google News
நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி தோசை மாவில் இருக்கும் வெள்ளை உளுத்தம் பருப்பை விட கருப்பு உளுந்து பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி தோசை மாவில் இருக்கும் வெள்ளை உளுத்தம் பருப்பை விட கருப்பு உளுந்து பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி தோசை மாவில் இருக்கும் வெள்ளை உளுத்தம் பருப்பை விட கருப்பு உளுந்து பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருளாக உளுத்தம் பருப்பு இருந்து வருகிறது. இதன் சாகுபடியும் விவசாயிகளுக்கு லாபத்தை ஈட்டித் தரும் ஒரு விளைச்சலாக உள்ளது. இந்த உளுந்து முதலி வரும் போது அதன் தோலுடன் வரும். அந்த தோலை நீக்கிய பருப்பையே நாம் பயன்படுத்தி வருகிறோம். இதுவே கடைகளிலும் விற்பனை செய்யபடுகிறது. இருப்பினும் உடைக்காத, தோல் நீக்கப்படாத உளுந்து கருப்பு உளுந்து என வழங்கப்படுகிறது. சமீபத்தில் பலர் இந்த தோல் நீக்கப்படாத உளுந்து சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.  நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லி தோசை மாவில் இருக்கும் வெள்ளை உளுத்தம் பருப்பை விட கருப்பு உளுந்து பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. மருத்துவர்களும் கருப்பு உளுந்தை சாப்பிடவே பரிந்துரை செய்கின்றனர். கருப்பு உளுந்தில் உள்ள மருத்துவ பலன்களை இங்கு தெரிந்துக் கொள்வோம். 

அனைத்து சத்துக்களும் ஒரு சேர 

கருப்பு உளுந்தில் உடலுக்குத் தேவையான பல கனிம பொருட்கள் உள்ளன. இவை உடலின் பாகங்களை வலிமையாக்க உதவும் எனக் கூறப்படுகிறது. இதில் உள்ள  கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை  உடலின் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்க உதவுகின்றன. 

கருப்பு உளுந்தில் அதிகமான அளவில் நார்ச்சத்து உள்ளது. மேலும் உடைக்கப்படாத கருப்பு உளுந்தை சாப்பிடுவதால் உடலின் ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு செரிமானத்தை சீராக்க உதவும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுபவர்கள் இந்த கருப்பு உளுந்தை சாப்பிட்டு வர அந்த தொலையில் இருந்து விடுபடுவார்கள். இரத்த சோகை ஏற்படும் குழந்தைகளுக்கு இந்த கருப்பு உளுந்தை தொடர்ந்து உணவாக கொடுத்து வர இரத்த சோகை குறைந்து சரியான அளவிலான இரத்தம் உற்பத்தியாகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளின் உணவில் அடிக்கடி இதனை சேர்ப்பது நல்லதாகும். 

கருப்பு உளுந்தில் இருக்கும் நார்ச்சத்து உடலின் சர்க்கரை அளவை மிதமான அளவில் வைக்க உதவுகிறது. கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ளன. 

கருப்பு உளுந்தில் கஞ்சி வைத்து தினமும் குடித்து வரலாம். மேலும் இதையும் ஊற வைத்து அரைத்து வடையாக சுட்டு சாப்பிடலாம். மேலும் இதனை அரிசியோடு கலந்து சமைத்து சாப்பிடலாம். களி செய்து சாப்பிடலாம். மேலும் இதில் இனிப்பு லட்டுக்கள் செய்யலாம். இட்லி மற்றும் தோசை மாவிலும் வெள்ளை உளுந்துக்கு பதில் இந்த கருப்பு உளுந்தை பயன்படுத்தலாம்.  

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

ஆரோக்கியம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி