தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  அரக்க பறக்க அல்லாமல், உணவை மெதுவாக சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

அரக்க பறக்க அல்லாமல், உணவை மெதுவாக சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil

Nov 05, 2024, 07:00 AM IST

google News
அரக்க பறக்க அல்லாமல், உணவை மெதுவாக, மென்று, சுவைத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
அரக்க பறக்க அல்லாமல், உணவை மெதுவாக, மென்று, சுவைத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

அரக்க பறக்க அல்லாமல், உணவை மெதுவாக, மென்று, சுவைத்து சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உணவை நாம் எப்போது அரக்க பறக்க அடித்துக்கொண்டு சாப்பிடாமல் பொறுமையாக, மெதுவாக, மென்று சாப்பிடவேண்டும். அது ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உணவை மெதுவாக மென்று சாப்பிடும்போது அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இன்று நாம் பரபரப்பான உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதில் உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் என்பது கடும் பரபரப்பானதாகிறது. எனவே நீங்கள் உணவை வேகவேகமாக சாப்பிட நேரிடுகிறது. இதனால் உணவை சவித்து சாப்பிட முடியவில்லை. உணவை பொறுமையாக மென்று, உமிழ்நீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போதுதான் உணவு செரிப்பது எளிதாகிறது. ஆனால் நீங்கள் பரபரப்பாக உணவு உட்கொள்ளும்போது அது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உணவை மெதுவாக சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள் என்னவென்று பாருங்கள்.

செரிமானத்தை அதிகரிக்கிறது

நீங்கள் மெதுவாக சாப்பிடும்போது, உங்கள் உடல் சரியாக உணவை உடைக்கிறது. நீங்கள் உணவை மென்று சாப்பிடும்போது அது செரிமானத்துக்கு வழிவகுக்கிறது. இதனால் நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் வாயில் உள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. இதில் உணலை செரிக்க வைக்கக்கூடிய எண்சைம்கள் உள்ளன. இதனால் உங்கள் உடலில் ஊட்டச்சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்படுகின்றன. இது உங்களுக்கு செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

வயிறு நிறைந்த உணர்வு

உணவை நீங்கள் மெதுவாக மென்று சாப்பிடும்போது, அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. மெதுவாக சாப்பிடும்போது உங்கள் மூளை வயிறு நிறைந்த உணர்வை பதிந்துகொள்கிறது. இதனால் நீங்கள் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது. நீங்கள் மெதுவாக சாப்பிடும்போது, நீங்கள் குறைவான கலோரிகளே எடுத்துக்கொள்கிறீர்கள். இது உங்களுக்கு உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.

சாப்பிடும் பழக்கம்

நீங்கள் மெதுவாக சாப்பிடுவதால், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? எப்படி சாப்பிடுகிறீர்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துவதால், உங்களுக்கு உணவின் அளவு, சுவை தெரிந்து உங்களால் ரசித்து, ருசித்து சாப்பிட முடிகிறது. இதனால் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கிறது. நீங்கள் சாப்பிடும்போது மகிழ்வையும் கொடுக்கிறது. இது உங்களுக்கு உணவுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது.

உணவு தேர்வுகளில் சிறந்த கட்டுப்பாடு

உங்கள் உணவு தேர்வுகளில் நல்ல கட்டுப்பாடு வைத்துக்கொள்ள உதவுகிறது. நீங்கள் இதனால் உங்களுக்குத் தேவையான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்கிறீர்கள். இது உங்களின் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது. இது உங்களுக்கு உங்கள் தட்டில் என்ன உண்கிறீர்கள் என்பதை காட்டுகிறது.

மனஅழுத்தத்தை குறைக்கிறது

நீங்கள் உணவை மெதுவாகவும், பொறுமையாகவும் உட்கொள்ளும்போது, அது உங்களுக்கு அமைதியான பழக்கமாக உள்ளது. நீங்கள் பல்வேறு வேலைகளை விடுத்து, உங்கள் உணவில் மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள். இதனால் அமைதியான சூழலை உருவாக்க முடியும். அது உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கும். நீங்கள் உணவு உண்ட பின்னர் உங்களுக்கு அது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது.

அதிகம் சாப்பிடும் ஆபத்தைக் குறைக்கிறது

நீங்கள் விரைவாக சாப்பிடும்போது, அதிகளவில் உணவை எடுத்துக்கொள்கிறீர்கள். அது உங்களுக்கு தேவையான அளவைவிட அதிக உணவை உங்களை உட்கொள்ளச் செய்யும். உங்களுக்கு உண்மையாகவே நீங்கள் உணவை மெதுவாக சாப்பிடும்போது, அது உங்களுக்கு போதிய திருப்தியைக் கொடுக்கிறது. இதனால் சாப்பிட்டவுடன் உங்களுக்கு ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.

உணவை மகிழ்வுடன் உட்கொள்ள முடிகிறது

நீங்கள் மெதுவாக உணவை சாப்பிடும்போது, அது உங்கள் ஒட்டுமொத்த சாப்பிடும் உணர்வையும் மேம்படுத்துகிறது. இதனால் நீங்கள் ஒவ்வொரு வாய் உணவையும் மகிழ்வுடன் எடுத்துக்கொள்கிறீர்கள். அதன் சுவையை ரசித்து, ருசித்து சாப்பிட முடியும். உங்கள் உணவு நேரத்தையும், உணவையும் மகிழ்வுடனும், திருப்தியுடனும் சாப்பிட முடிகிறது.

உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது

மெதுவாக உணவு சாப்பிடுபவர்கள், ஆரோக்கியமாக உடல் எடையை போடுகிறார்கள். இது அவர்களுக்கு சிறந்த செரிமானத்தைக் கொடுக்கிறது. கலோரிகள் அதிகம் உட்கொள்வது தடுக்கப்படுகிறது. திருப்தி அதிகரிக்கிறது. மெதுவாக உணவை உட்கொள்ளும்போது, அது நீண்ட காலம் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி