Marumagal serial: நிறைவேறுமா ஆதிரை எண்ணம்.. திருமண ஆர்வத்தில் பிரபு - மருமகள் சீரியலின் இன்றைய ப்ரோமோ
Marumagal serial: ஆரையிடம், சொத்தை எழுதி வாங்கி கொண்டு அடமானத்திற்கு கொடுக்க முடியாது என சிவபிரகாசத்தின் மனைவி உறுதியாக இருக்கிறார். இதனால் சிவபிரகாசம் கடுப்பில் தன் மகள் ஆதிரையிடம் இனியும் இப்படியே விட்டுவிட கூடாது என சொல்கிறார்.
Marumagal Serial: தமிழ் பார்வையாளர்கள் சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்களை அதிகம் பிரித்து பார்ப்பதில்லை. இரண்டிற்கும் அதே அளவு அன்பையும், பாராட்டுகளையும் பொழிகிறார்கள்.
தமிழ் தொலைக்காட்சித் துறையானது கிட்டத்தட்ட அனைத்து முக்கிய பிராந்திய சேனல்களிலும் டிவி சோப்புகளுடன் வளர்ந்து வருகிறது. மதியம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை விட இரவில் ஒளிபரப்பபடும் சீரியல்களே இல்லத்தரசிகளை ஈர்க்கின்றன.
டி. ஆர். பியில் மாஸ்
அதே சமயம் ஃபிரைம் டைம் சீரியல்கள் அனைத்து தரப்பு மக்களையும் தங்கள் திரையில் கவர்ந்து. அதிக டி. ஆர். பியில் களுக்கு வழிவகுக்கும். அப்படி டி. ஆர். பியில் மாஸ் காட்டி வரும் புது சீரியல், மருமகள். தினமும் சன் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்றைய ப்ரோமோ
இந்நிலையில் மருமகள் சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 3 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
பிரபுவின் தந்தை, சிவபிரகாசத்தை நேரில் சந்தித்து, நம்முடைய நட்பு ஏன் குடும்பமாக மாற கூடாது. ஏன் மூத்த மகன் பிரபுவிற்கு, ஆதிரையை திருமணம் செய்து கொடு என கேட்கிறார்.
மறுபக்கம் பிரபுவும் அவரின் நண்பரும், ஜோதிடரிடம் சென்று, எப்போது இவனுக்கு திருமணம் நடக்கும் என கேட்க சென்றனர்.
சொந்தம் தான் இந்த உலகத்தில் பெரியது
சொத்தை எழுதி வாங்கி கொண்டு அடமானத்திற்கு கொடுக்க முடியாது என சிவபிரகாசத்தின் மனைவி உறுதியாக இருக்கிறார். இதனால் சிவபிரகாசம் கடுப்பில் தன் மகள் ஆதிரையிடம் இனியும் இப்படியே விட்டுவிட கூடாது என சொல்கிறார். உடனே ஆதிரை சொந்தம் தான் இந்த உலகத்தில் பெரியது என்பதை அம்மா ஒரு நாள் புரிந்து கொள்வார் என நம்புகிறார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.
நேற்றைய எபிசோட்
சிவபிரகாசத்தை பார்த்து பிரபுவிற்கு, ஆதிராயை பெண் கேட்க போகும் விஷயம் பற்றி வேல்விழி தாயிடம் சொல்கிறார். யாரிடம் தாய் போன் பேசுகிறார் என்பதை மறைந்து இருந்த படி பார்த்து கொண்டு இருக்கிறார், வேல்விழி.
வாழ்ந்து காட்ட வேண்டும்
பாட்டியிடம், பிரபு பெண் பார்க்கட்டுமா என கேட்டதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அந்த வேல்விழி முன்பாக தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார் பிரபு.
ஆதிரை தன் அப்பாவிற்கு பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் அம்மாவிடம் கோரிக்கை வைக்கிறார். நிலத்தில் பத்திரத்தை வங்கில் வைத்து அடமானம் வைக்க வேண்டும் என்று கேட்கிறார். ஆனால் தாய்க்கு இதில் விருப்பம் இல்லை. அதனால் தன் பெயரில் இருக்கும் நிலத்தை அடமானமாக வைக்க தான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v