உடல் சோர்வைப்போக்கி உங்களுக்கு புத்துணர்வைத் தரவேண்டுமா? லன்ச் பாக்ஸில் இந்த சாதம் மட்டும் போதும்!
Dec 09, 2024, 02:57 PM IST
கோவக்காய் சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
கோவக்காயை வைத்து சூப்பர் சுவையான குழம்பு செய்யும் முன் அதன் நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. சோர்வை நீக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. சிறுநீரக கற்கள் போக கோவக்காய் உதவும். நோய்களை குணப்படுத்துகிறது. அலர்ஜியை எதிர்த்து போராட உதவுகிறது. கோவக்காய் தொற்றுக்களை குணப்படுத்துகிறது. புற்றுநோயை தடுக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கும் கோவக்காயில் சாதம் செய்வது எப்ப என்று பாருங்கள். இந்த சாதத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களே மீண்டும், மீண்டும் வேண்டும் என்று எண்ணுவீர்கள். அத்தனை சுவையான கோவக்காய் சாதம் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
கடலை – ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய் – 2
வர மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
கோவக்காய் – கால் கிலோ
வடித்த சாதம் – 2 கப்
புளிக்கரைசல் – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கடலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்கவேண்டும்.
அடுத்து பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து பொரிந்தவுடன், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து புளிக்கரைசலை சேர்த்து நன்றாக அது வற்றியவுடன், வடித்து, ஆறிய சாதத்தை சேர்த்துக் கிளறவேண்டும்.
கிளறி இறக்கினால் சூப்பர் சுவையான கோவக்காய் சாதம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள ஒன்றுமே கூட வேண்டாம். அப்பளம், ஊறுகாயே போதுமானது. ஏனெனில் சாதத்திலே காயும் உள்ளது. கோவக்காயை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடை குறைப்பு பயணத்தில் உள்ளவர்கள் என அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு இந்தக்காய் எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும். இந்த சாதத்தையும் நீங்கள் ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். எனவே கட்டாயம் செய்மு சாப்பிட்டுப்பாருங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
டாபிக்ஸ்