ஹீமோகுளோபினை அதிகரிக்க வேண்டுமா? இரும்புச்சத்துக்கள் நிறைந்த இந்த 10 பழங்கள் உணவில் கட்டாயம்!
Dec 16, 2024, 10:05 AM IST
இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்கள் எவை?
இரும்புச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டுமெனில் நீங்கள் எவற்றை சாப்பிடவேண்டும். அவற்றால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அதற்கு என்னென்ன பழங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் பாருங்கள். அதிகம் இரும்பு எடுத்துக்கொள்வதால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது. உடலுக்கு தேவையான சத்துக்களுள் இரும்புச் சத்துக்கள் மிகவும் முக்கியமானது. இது ஆக்ஸிஜனை கடத்த உதவுகிறது. ஆற்றலை உற்பத்தி செய்கிறது. ஒட்டுமொத்த செல்களின் இயக்கத்துக்கும் உதவுகிறது. அனீமியாவைத் தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. நீங்கள் சில பழங்களை அன்றாடம் எடுக்கவேண்டும். அவற்றில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் இவை உங்கள் உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும்.
தர்ப்பூசணி
100 கிராம் தர்ப்பூசணியில் 0.4 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது அதிக அளவு இல்லையென்றாலும், உங்களக்கு புத்துணர்வு தரும் சுவையுடன் உங்களின் அன்றாட இரும்புச் சத்துக்கள் தேவையை பூர்த்தி செய்யும்.
மாதுளை
100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடல் இரும்புச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
மல்பெரிகள்
100 கிராம் மல்பெரிகளில் 2.6 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது இரும்புச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.
பேரிட்சை பழம்
100 கிராம் பேரிட்சை பழத்தில் 0.9 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்துக்கள் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். இது உங்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் ஸ்னாக்ஸ் ஆகும்.
உலர் திராட்சை
100 கிராம் உலர்ந்த திராட்சையில் 1.9 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனே வழங்கக்கூடிய எளிய ஸ்னாக்ஸ்கள் ஆகும்.
அத்திப்பழம்
100 கிராம் அத்திப்பழத்தில் 0.2 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். அது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்துக்கள் உட்கொள்ளும் அளவையும் அதிகரிக்கிறது.
ஆப்ரிகாட்
100 கிராம் உலர்ந்த ஆப்ரிகாட்களில், 2.7 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இது உங்கள் உடல் இரும்புச்சத்தைப் பெறவும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
கிவி
100 கிராம் கிவியில் 0.3 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதில் அதிகளவில் இரும்புச்சத்துக்கள் இல்லையென்றாலும், அதிகளவில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்கள் உடல் இரும்புச்சத்துக்களை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது.
ஆப்பிள்
100 கிராம் ஆப்பிளில் 0.5 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இதுவும் அதிக அளவு இல்லையென்றாலும், இவை ஒட்டுமொத்த இரும்பு உட்கொள்ளும் அளவை அதிகரித்து, உங்களின் முழு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ப்ரூன்
100 கிராம் ப்ரூன்களில் 0.93 மில்லிகிராம் இரும்புச்சத்துக்கள் உள்ளது. உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க இது ஒரு சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். இது உங்கள் உடலில் இரும்புச்சத்துக்களை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்