Heart Detox Drink : சே குட் பை டூ ஹார்ட் அட்டாக்! உங்கள் தமனிகளில் உள்ள ஒட்டுமொத்த அழுக்கையும் உறிஞ்சும் பானம் இதோ!
Heart Detox : உங்கள் தமனிகளில் உள்ள ஒட்டுமொத்த அழுக்கையும் உறிஞ்சும் பானம் இது. இதயத்தில் உள்ள அழுக்கைப் போக்கும். இதை கட்டாயம் பருகி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.
இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்போதோ அல்லது தடைபடும்போதோ ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்புகள் இதயத் தமனிகளில் கொழுப்பு அல்லது மற்ற உட்பொருட்கள் சேர்வதால் ஏற்படுகிறது. கொழுப்பு நிறைந்த படிமங்கள் ப்ளேகுகள் என்று அழைக்கப்படுகின்றன. இது அதிரோசிலோரிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. பிளேக்குகள் ரத்த ஓட்டத்தை தடுக்கின்றன. ரத்த ஓட்டம் தடைபடுவது இதய தசைகளை சேதப்படுத்துகிறது. இதயத்துக்கு அக்ஸிஜன் மற்றும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனி அடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. நாள்பட்ட கொழுப்பு இதயத்தமனிகளில் பிளேக் உருவாக காரணமாகிறது. இது ரத்தத்தை உறையச் செய்கிறது. இந்த உறைதலால் தமனிகளில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு வருகிறது. மாரடைப்பில், ரத்த ஓட்டம் குறைவது இதய தசைகளில் உள்ள திசுக்களை இறக்கச் செய்கிறது. மாரடைப்பால் மரணத்தை தடுக்க உடனடி சிகிச்சை தேவை.
மாரடைப்பின் அறிகுறிகள்
மாரடைப்பு நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு அறிகுறிகள் மென்மையாக இருக்கும். சிலருக்கு கடுமையாக இருக்கும். சிலருக்கு அறிகுறிகளே தெரியாது.
நெஞ்சு வலி, நெஞ்சில் அழுத்தம், கடும் வலி, இறுக்கம், நெரிசல் என ஏற்படும்.
நெஞ்சு வலி தோள்பட்டைகள், கைகள், முதுகு, பற்கள் மற்றும் தாடை என விரிவடையும்.
குளிர் வியர்வை
சோர்வு
நெஞ்செரிச்சல், செரிமானமின்மை
மயக்கம்
வாந்தி
மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படும்.
மாரடைப்புகளுக்கு குட்பை கூறுங்கள். உங்கள் தமனிகளில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் இந்த ஒரு பானம் அகற்றிவிடும். இதில் சேர்க்கப்படும் உட்பொருட்கள் உங்கள் தமனிகளை சுத்தப்படுத்தி, மாரடைப்பை தடுக்கும்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
பீட்ரூட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் உட்பொருட்கள் உள்ளன. இது உங்கள் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தசைகளை வலுப்படுத்தும்.
பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் அது உங்கள் உடலில் வளர்சிதையடைந்து, நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி ரத்த நாளங்களை அமைதிப்படுத்தும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நரம்பில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். நரம்பை சேதங்களில் இருந்து காக்கும். வெரிக்கோஸ் வெயின் பிரச்னையை குணப்படுத்தும்.
பேஷன் ஃப்ரூட் – அதன் தசைகள் ஒரு கப்
இதில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் ஆந்தோசயனின்கள் தமனிகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. இது உடலில் ஃப்ரி ராடிக்கல்களை நீக்குகின்றன.
நாள்பட்ட நோய்களான மாரடைப்பு, எலும்புப்புரை, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. பேஷன் ஃப்ரூடில் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது குடலில் உள்ள கொழுப்புக்களை உறிஞ்சுகிறது. உங்கள் உடலில் கொழுப்பை முறைப்படுத்துகிறது. ரத்தத்தில் சர்க்கரையை முறைப்படுத்துகிறது.
தேன் – ஒரு ஸ்பூன்
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். ரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் தேக்கங்களைக்ப் போக்கும். ரத்த நாளங்களை சீரக்கும். ரத்த அழுத்தத்தை குறைக்கும். இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கும். நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.
பால் – அரை லிட்டர்
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. இது உங்கள் இதயத்துக்கு நேர்மறையான தூண்டுதலைத்தரும். இதில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் பொட்டாசியச் சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இது உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படாமல தடுக்கும்.
செய்முறை
பீட்ரூட், பேஷன் ஃப்ரூட், தேன் மற்றும் பால் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டாமல் 250 மில்லிலிட்டர் பருகவேண்டும். இது உங்கள் இதயத்தில் உள்ள தமனிகளில் இருந்து அனைத்து அழுக்குகளையும் நீக்கும். இதை நீங்கள் பருகுவதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்