எந்த உச்ச நடிகருக்கும் இல்லாத தனி சிறப்பு விஜய்யிடம் மட்டுமே உள்ளது! அது என்ன தெரியுமா?
- தன்னுடைய ஆரம்ப கால கரியரிலும் சரி தன்னுடைய உச்சத்திலும் சரி, தான் பணிபுரிந்த படங்களின் உதவி இயக்குனரை நம்பி இயக்குனராக அறிமுகப்படுத்தியதில் கில்லாடி விஜய் !
- தன்னுடைய ஆரம்ப கால கரியரிலும் சரி தன்னுடைய உச்சத்திலும் சரி, தான் பணிபுரிந்த படங்களின் உதவி இயக்குனரை நம்பி இயக்குனராக அறிமுகப்படுத்தியதில் கில்லாடி விஜய் !
(1 / 8)
விஜயின் ஒட்டுமொத்த கேரியரை எடுத்துக் கொண்டால் அவர் அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் நடித்ததும் அதைத் தொடர்ந்து அதே இயக்குனர்களின் படங்களில் நடித்ததுமே பாதிக்கும் மேல் அடங்கும். அப்படி விஜய் அறிமுகப்படுத்திய இயக்குனர்களில் சிலரை இங்கு காணலாம்.
(2 / 8)
பேரரசு : திருப்பாச்சி & சிவகாசிவிஜய்யை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த படங்கள் என்றால் திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகும். அறிமுக இயக்குனர் பேரரசுக்கு வாய்ப்பு கொடுத்தது மட்டுமன்றி அந்தப் படம் ரிலீஸ் க்கு முன்பே அடுத்த படமான சிவகாசியை கமிட் செய்யும் தில்லு விஜய்க்கு மட்டுமே உண்டு
(3 / 8)
ரமணா : திருமலை & ஆதி விஜயின் ஒட்டுமொத்த கெரியரையே மாற்றிப் போட்டதும் அவரை ஒரு மாஸ் ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்டதும் திருமலை திரைப்படத்தில் தான். விஜயின் ஹேர் ஸ்டைலும் ட்ரிம் தாடியும் இன்றுவரை தொடர்வதற்கு இப்படத்தின் வெற்றியே காரணம்.
(4 / 8)
பரதன் : அழகிய தமிழ் மகன் & பைரவா தில், தூள், கில்லி போன்ற திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்த பரதன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் அழகிய தமிழ் மகன். படத்தின் வெற்றி தோல்வி கணக்குகளை தாண்டி மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்த திரைப்படம் தான் பைரவா.
(5 / 8)
S.எழில் : துள்ளாத மனமும் துள்ளும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டராகி இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் ஹிட்டடித்தது. இந்த கூட்டணி மீண்டும் இணையவில்லை என்றாலும் எழில் அவர்கள் அஜித், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் படம் இயக்கி வருகிறார். சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் இயக்குனர் கரு பழனியப்பன் பகிர்ந்த எழில் அவர்களுடன் தான் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலத்தைப் பற்றிய விஜய் பற்றிய நிகழ்வுகள் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
(6 / 8)
வின்சென்ட் செல்வா : பிரியமுடன் & யூத் தி கோட் திரைப்படத்தில் விஜய் அவர்கள் செய்த வில்லத்தனத்தை அன்றே அவரை வைத்து சம்பவம் செய்தவர்தான் வின்சென்ட் செல்வா. ஒரு வளர்ந்து வரும் நடிகர் வில்லனாக நடிப்பது என்பது யாரும் கற்பனை செய்ய முடியாத அதே சமயத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் பிரியமுடன். மேலும் அவர் இயக்கத்தில் யூத் படத்திலும் விஜய் நடித்துள்ளார். இயக்குனர்கள் மிஷ்கின் மற்றும் எஸ் பி ஜனநாதன் வின்சென்ட் செல்வா அவர்களிடம் உதவி இயக்குனவர்களாக பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
(7 / 8)
K செல்வபரதி - நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே & வசீகரா ஓர் எழுத்தாளர் & வசனகர்த்தாவை இயக்குனராக அறிமுகப்படுத்தி அவரது இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்து கமர்சியலாக ஹிட் அடிக்கவும் வைத்துள்ளார் விஜய்.
மற்ற கேலரிக்கள்