Top 6 Pregnancy Tips: பெண்களே கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களில் 6 தவறுகளை செய்யாதீங்க.. தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து!
Sep 12, 2024, 06:10 AM IST
Top 6 Pregnancy Tips : பெண்களை பொறுத்தவரை கர்ப்பத்தின் 1 முதல் 3 மாதங்கள் மிக மிக மென்மையானவை. அத்தகைய சூழ்நிலையில், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சில தவறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யக்கூடாது என்பதை இங்கு பார்க்கலாம்.
Top 6 Pregnancy Tips : ஒவ்வொரு பெண்ணிற்கும் கர்ப்பம் என்பது மிகவும் உற்சாகமான காலம். ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால், அது அவளுடைய வாழ்க்கையில் மிக அழகான தருணம். கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களுக்கு பிறக்க போகும் குழந்தையைப் பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், இந்த காலகட்டத்தில், பெண்கள் மன அழுத்தம் மற்றும் பல உடல் நலப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, பெண்களை பொறுத்தவரை கர்ப்பத்தின் 1 முதல் 3 மாதங்கள் மிக மிக மென்மையானவை. அத்தகைய சூழ்நிலையில், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் சில தவறுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யக்கூடாது என்பதை இங்கு பார்க்கலாம்.
1) அதிக எடை தூக்குவதை தவிர்க்கவும்
கர்ப்பத்தின் 1 முதல் 3 மாதங்களில் அதிக எடை தூக்குவதைத் தவிர்க்க வேண்டும். கனமான பொருட்களை தூக்குவது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்களும் முதல் மூன்று மாதங்களில் இருந்தால், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர்ந்திரும் வேலையைச் செய்யாதீர்கள். மேலும் தண்ணீர் வாளி, குடம் போன்ற கனமான பொருட்களை தூக்குவதை தவிர்ப்பது நல்லது.
2) அதிகப்படியான உடற்பயிற்சியை தவிர்க்கவும்
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் அதிகப்படியான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும். உண்மையில், முதல் மூன்று மாதங்களில் அதிகப்படியான உடற்பயிற்சி சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். இது கருச்சிதைவு அபாயத்தையும் அதிகரிக்கலாம். எனவே, கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் லேசான உடற்பயிற்சியை மட்டும் செய்யுங்கள். மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் நல்லது. இல்லையெனில், உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கலாம்.
3) மன அழுத்தம் அல்லது கவலையைத் தவிர்க்கவும்
கர்ப்ப காலத்தில் பெண்கள் மன அழுத்தம் அல்லது கவலை படுவதை தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில், மன அழுத்தம் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். உண்மையில், கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். மன அழுத்தம் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு எளிதில் தீங்கு விளைவிக்கும்.
4) போதுமான அளவு தூங்குங்கள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு முழுமையாக தூங்க வேண்டியது அவசியம். தூக்கமின்மை உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இது தவிர, கர்ப்ப காலத்தில் நீங்கள் சோர்வாக உணரலாம். எனவே போதுமான தூக்கம் உங்களுக்கு மிகவும் முக்கியமானது.
5) மது மற்றும் புகையை தவிர்த்திடுங்கள்
ஓடும் உலகில் பதற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாக ஆண்களும் சில பெண்களும் புகைபிடிப்பார்கள். மது அருந்துகிறார்கள். ஆனால் கர்ப்ப காலத்தில் மது அருந்துவது மற்றும் புகைபிடிப்பது மிகவும் தீங்கு விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் நீங்கள் மது அருந்தினால் அல்லது புகைபிடித்தால், அது பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் மது அல்லது புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
6) சத்தான உணவுகள்
கர்ப்பகாலத்தின் முதல் 3 மாதங்களில் காலை நேரங்களில் வாந்தி மயக்கம், போன்ற பிரச்சனைகள் அதிகம் இருக்கும். இதனால் பெரும்பாலான பெண்கள் சத்தான உணவுகளை தவிர்க்க நினைக்கின்றனர். ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்கள் போதுமான அளவு உணவுகளை தவிர்ப்பது குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கியம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!