Top 6 Benefits of Mustard oil : கடுகு எண்ணெய் பயன்படுதுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்.. முடி பிரச்சனைக்கு மூட்டு வலி வரை!
Sep 25, 2024, 01:58 PM IST
Top 6 Benefits of Mustard oil : கடுகு எண்ணெய்யை உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலுவான, பளபளப்பான முடியை ஊக்குவிக்கும். முடி உதிர்வை கணிசமாகக் குறைக்கும். முடி வேர்களை வலுப்படுத்தும் என்று டிரைக்காலஜி இன்டர்நேஷனல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Top 6 Benefits of Mustard oil : பண்டைய காலம் முதல் இந்திய சமையலில் கடுகு எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தென் இந்தியாவை காட்டிலும், வட இந்தியா பகுதிகளில் கடுகு எண்ணெய் பயன்பாடானது சற்று அதிகமாகவே உள்ளது. கடுகு விதையிலிருந்துதான் கடுகு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. கடுகு எண்ணெய்யில் போலேட்ஸ், நியாசின், தயமின், பைரிடாக்சின், ரிபோபிளேவின் மற்றும் பி.காம்ப்ளக்ஸ் என நிறைய விட்டமின்கள் உள்ளன. அவற்றால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்நிலையில் கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் 6 நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கடுகு எண்ணெயின் நன்மைகள் என்ன
1. சருமத்திற்கு பளபளப்பு : கடுகு எண்ணெயில் ஒமேகா -3 மற்றும் ஒமேகா -6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வறண்ட சருமத்தை ஹைட்ரேட் செய்யவும், நிறமியைக் குறைக்கவும் மற்றும் சரும அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
2. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
கடுகு எண்ணெய் முடி வளர்ச்சியைத் தூண்டுவதாக மிகவும் உகந்து. இதில் அதிக அளவு வைட்டமின்கள் ஏ மற்றும் ஈ உள்ளது, இவை இரண்டும் முடியின் ஊட்டச்சத்திற்கும் நீரேற்றத்திற்கும் அவசியமானவை. கடுகு எண்ணெய்யை உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து, வலுவான, பளபளப்பான முடியை ஊக்குவிக்கும். முடி உதிர்வை கணிசமாகக் குறைக்கும். முடி வேர்களை வலுப்படுத்தும் என்று டிரைக்காலஜி இன்டர்நேஷனல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
3. வலியைக் குறைக்கிறது
கடுகு எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நமது உடலில் உள்ள தசைகள் மற்றும் மூட்டுகளில் குறைப்பதற்கான சிறந்த தீர்வாக உள்ளது. இதற்கு கடுகு எண்ணெயின் அழற்சி எதிர்ப்புத் தன்மையானது ஆல்ஃபா-லினோலெனிக் அமிலத்தின் (ALA) அதிக உள்ளடக்கம் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சி காப்பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் முடக்கு வாதம் போன்ற நிலைமைகளால் உடலில் ஏற்படும் வீக்கத்தை கணிசமாகக் குறைக்கிறது. பாரம்பரிய ஆயுர்வேதத்தில் உடல் வலியைப் போக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
4. புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கிறது
கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவது சில வகையான புற்றுநோய்களின் வளர்ச்சி மற்றும் பரவலை மெதுவாக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கேன்சர் லெட்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சோள எண்ணெய் அல்லது மீன் எண்ணெயை உண்பதை விட எலிகளுக்கு தூய கடுகு எண்ணெயை ஊட்டுவது பெருங்குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது. மேலும், கடுகு எண்ணெயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவும். மற்ற புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்.
5. இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
கடுகு எண்ணெய் பெரும்பாலும் இந்திய உணவுகளில் பிரபலமானது. இதில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன, அவை நல்ல கொழுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த கொழுப்புகள் கெட்ட கொழுப்பை (எல்.டி.எல்) குறைக்கவும், நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் ட்ரைகிளிசரைடு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. இவை அனைத்தும் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
6. வீக்கத்தைக் குறைக்கிறது
அழற்சியானது பல நாள்பட்ட நோய்களுக்கு மூல காரணமாகும். "கடுகு எண்ணெயில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் உட்பட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்க வேலை செய்கின்றன. இது மூட்டுவலி, ஆஸ்துமா அல்லது தோல் கோளாறுகள் போன்ற நிலைமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது" அழற்சி எதிர்ப்பு விளைவுகளைத் தவிர, கடுகு எண்ணெயில் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளும் உள்ளன, இது மூட்டு வலியைக் குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
ஆரோக்கியம் தொடர்பான பல தகவல்களை பெற எப்போதும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!