நாள்தோறும் க்ரீன் டீ பருகுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 31, 2024

Hindustan Times
Tamil

எடைகுறைப்புக்கு உதவும் பானமாக க்ரீன் டீ இருந்து வருவது பொதுவான கருத்தாக உள்ளது. அதையும் தாண்டி பல்வேறு விதமான நன்மைகளை கொண்டதாக உள்ளது

புற்று நோய்களில் எதிரியாக இருந்து வரும் க்ரீன் டீ பல்வேறு புற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது

பெண்கள் நாள்தோறும் மூன்று முதல் நான்கு கப்கள் க்ரீன் டீ பருகினால் வாய் தொடர்பான புற்றுநோய் பாதிப்பு அபாயம் குறைவதாக ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது

ஆண்கள் நாள்தோறும் நான்கு முதல் ஐந்து கப்கள் க்ரீன் டீ பருகினால் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பின் ஆபத்தை தடுக்கலாம் என கூறப்படுகிறது

மற்றொரு ஆய்வில் பெண்கள் 5 அல்லது அதற்கு அதிகமாக க்ரீன் டீ பருகினால் வயிற்று புற்றுநோய் பாதிப்பை தடுக்கலாம் என தெரியவந்துள்ளது

பெண்களுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மார்பக புற்று நோய் ஏற்படும் அபாயத்தை தடுக்க நாள்தோறும் குறைந்தது மூன்று கப்களுக்கு அதிகமாக க்ரீன் டீ பருக வேண்டும் என ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கணைய புற்று நோய் பாதிப்பையும் தடுக்கும் குணம் க்ரீன் டீயில் இருப்பதாக கூறப்படுகிறது 

Enter text Here

மூன்று கப்கள் வரை க்ரீன் டீ குடிப்பதால் இதய நோய் பாதிப்பு, பக்கவாதத்தை தடுக்கலாம்  

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock