தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Top 12 Benefits Of Henna : நரைக்கு திரை! உடலுக்கு குளுமை! மருதாணி இலை பேஸ்ட் ஹேர் மாஸ்கின் நன்மைகள் என்ன?

Top 12 Benefits of Henna : நரைக்கு திரை! உடலுக்கு குளுமை! மருதாணி இலை பேஸ்ட் ஹேர் மாஸ்கின் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil

Sep 23, 2024, 09:51 AM IST

google News
Top 12 Benefits of Henna : நரைக்கு திரை, உடலுக்கு குளுமை, மருதாணி இலை பேஸ்டில் ஹேர் மாஸ்க் போடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
Top 12 Benefits of Henna : நரைக்கு திரை, உடலுக்கு குளுமை, மருதாணி இலை பேஸ்டில் ஹேர் மாஸ்க் போடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

Top 12 Benefits of Henna : நரைக்கு திரை, உடலுக்கு குளுமை, மருதாணி இலை பேஸ்டில் ஹேர் மாஸ்க் போடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

மருதாணியை நாம் விழாக்காலங்களில் கைகளில் போட்டு அழகு பார்த்துக்கொள்கிறோம். இவை உடல் மற்றும் அழகு இரண்டையும் பராமரிக்க உதவுகிறது. இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பலன் தருவது. மருதாணியின் பயன்பாடு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. இந்த தாவரம் தலைமுடியில் ஏற்படும் நரைக்கு இயற்கை திரை அமைக்கிறது. மருந்துகளுக்கும், கலாச்சார நிகழ்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பசுமையான நிற இலைகளும், சிவப்பு நிற பூக்களும் கொண்டதாக இதன் தோற்றம் இருக்கும். மணம் நிறைந்ததாகவும், கிளைகள் முறிக்கும் அளவிலும் இருக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுதான் மருதாணியின் முக்கிய மருத்துவ குணமாகும். உடல் சூட்டை தணிக்க மக்கள் மருதாணி இலைகளை அரைத்து கைகளில் பூசும் பழக்கம் எகிப்து நாகரீகத்தில் இருந்தது. இதை தலைமுடி மற்றும் முடியின் வேர்க்கால் சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தும் முறையும் இருந்தது. இதில் புற்றுநோய்க்கு எதிரான குணங்களும் உள்ளது. மருதாணி பயிரிடுவது லாபகரமானதாகவும் பார்க்கப்பட்டது.

மருதாணி சிறந்த ஹேர் டையாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்திவாய்ந்த திறன், சருமம், தலைமுடி, நகங்கள், பாதங்கள் என அனைத்தையும் பாதுகாக்கிறது. இதனால் மருதாணி ஹேர் டைகள் பிரபலமாகி வருகின்றன. மருதாணியை மருந்தாகவும், அழகுசாதன பொருளாகவும் பயன்படுத்துகிறோம். மருதாணியை தலையில் பூசுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

தலைமுடி வளர்ச்சி

மருதாணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. மருதாணி ஹேர் டைகள், ஷாம்பூக்கள், கண்டிஷ்னர்கள் என அனைத்தும் நீண்ட, அடர்த்தியான கருகரு தலைமுடி வளர உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தலைமுடி உதிர்வைக் குறைக்கின்றன. தலைமுடியை பாதுகாக்கின்றன. சூரியனின் புறஊதாக்கதிர்களிடம் இருந்து தலைமுடியைக் காக்கின்றன. சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு சிறப்பாக உதவுகிறது.

முடி சேதத்தைப் போக்குகிறது

மருதாணி, சேதமடைந்த, கட்டுப்படுத்த முடியாத, உதிரும் முடிக்கும் சிறப்பான தீர்வைத் தருகிறது. இதன் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கும் திறன், நமது உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃப்ரிராடிக்கல்கள் சமமின்மையை குறைக்கிறது. மருதாணி சேதமடைந்த முடிகளை பாதுகாக்கிறது. ஆரோக்கியமான தலைமுடியை பராமரிக்க உதவுகிறது.

ஆழ்ந்த சுத்தம் மற்றும் டீப் கண்டிஷன்ஸ்

தலைமுடி மற்றும் தலைமுடியின் கால்களை, ஆழ்ந்து சுத்தம் செய்வது மருதாணியின் முக்கிய பலன்களுள் ஒன்று. இது உங்கள் தலைமுடியை கண்டிஷன் செய்கிறது. தலைமுடிக்கு பளபளப்பையும், நறுமணத்தையும் தருகிறது. எனவே வறண்ட மற்றும் பிசுபிசுப்பான தலைமுடியை விரட்டுகிறது.

பொடுகை எதிர்க்கிறது

உங்கள் வேர்க்கால்கள் மிகவும் சென்சிட்டிவானது என்றால், நீங்கள் மருதாணி கண்டிஷ்னர்களைப் பயன்படுத்தலாம். சருமத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் இதன் குணங்கள், உங்கள் தலைமுடியில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்குறிது மற்றும் உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதன் பூஞ்ஜை மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள், தலைமுடியில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை போக்குகிறது.

அலர்ஜி

செயற்கை ஹேர் டையில் உள்ள அமோனியா மற்றும் சல்பேட் உள்ளிட்ட ஆபத்துக்களை விளைவிக்கும் செயற்கை வேதிப்பொருட்கள் அற்றது. உங்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களுடன் வேதிப்பொருட்கள் அற்றதாக உள்ளது. நீங்கள் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் கலந்த ஹேர் டைகளை தூக்கி வீசிவிட்டு மருதாணியைப் பயன்படுத்தலாம். இது பாதுகாப்பானது மற்றும் வேதிப்பொருட்கள் ஏற்படுத்தும் அலர்ஜியைப் போக்குகிறது.

அமில அளவு

நீண்ட காலம் உங்கள் கூந்தலில் பொலிவை தக்கவைக்கிறது. இதில் உள்ள உட்பொருட்கள் கூந்தலில் அமில அளவை முறைப்படுத்துகிறது. உங்கள் தலைமுடி ஆரோக்கிய வளர்ச்சிபெற உதவுகிறது.

தாவரம்

இது முற்றிலும் இயற்தையான தாவரம் ஆகும். இது தாவர அடிப்படையிலானது எந்தவித வேதிப்பொருட்களும் கலக்காதது. இது உங்கள் தலைமுடிக்கு மட்டும் ஆரோக்கியத்தைக் கொடுக்கவில்லை, இந்த பூமிக்கும்தான் தருகிறது.

இயற்கை நிறமி

செயற்கை ஹேர் டைகளில் செயற்கை நிறமி இருக்கும். இதில் உள்ள இயற்கை குணம், உங்கள் கூந்தலை சேதப்படுத்தாமல் மறையும். அதேபோல் தலையின் அனைத்து புறங்களிலும் ஒரே மாதிரியாக அது நிறம் மாறும். அதேபோல் தலைமுடி வளர்ச்சியும் அனைத்து புறங்களிலும் ஒரே மாதிரி தோற்றம் தரும். ஆனால் செயற்கை ஹேர் டை போல் ஓரிடத்தில் நிறம் மங்கி, வேறு இடத்தில் அதிகம் இருக்காது.

அனைத்து முடிக்கும் ஏற்றது

வறண்ட கேசம் முதல் பிசுபிசுப்பான தலைமுடி, சுருட்டையான முடி முதல் நேரான கேசம் வரை அனைத்து முடி வகைகளுக்கும் உதவும். இதை நீங்கள் தாடிக்கும் பயன்படுத்தலாம். எண்ணற்ற நன்மைகள் நிறைந்த மருதாணியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

வெள்ளை முடியை மறைக்கும்

வெள்ளை முடியை மறைக்க இயற்கை ஹேர் டையாக இது இருக்கும். மருதாணியுடன், நீங்கள் கூந்தலை வலுப்படுத்தி, நரை முடியை குறைக்கலாம். உங்கள் தலைமுடிக்கு வேர்க்கால்களில் இருந்து பளபளப்பை மருதாணி தருகிறது. நிறம் மற்றும் பாதுகாப்பு என அனைத்தும் தருகிறது. இது உங்களுக்கு இளமை தோற்றத்தை தருகிறது.

நீண்ட காலம் நிறம்

செயற்கை ஹேர் டையை விட நீண்ட காலம் கூந்தலுக்கு நிறத்தை தருகிறது. வழக்கமாக உங்கள் ஹேர் டை 4 முதல் 6 வாரங்கள் வரை நிறத்தை தரும் என்றால், இது அதிக காலம் நிறம் தரும். அதற்கு நீங்கள் மருதாணியில் டீத்தூள் தண்ணீர், காபித்தூள் என இயற்கை நிறமிகளை சேர்த்து பயன்படுத்தவேண்டும்.

உங்களின் தேவைக்கு ஏற்ப நிறங்களை சேர்த்துக்கொள்ளலாம்

மருதாணியில் நீங்கள் கூடுதலாக சேர்க்கும் பொருளுக்கு ஏற்ப அதன் நிறம் மாறும். அவுரி, கரிசலங்கண்ணி, நெல்லிக்காய் பொடி என சேர்த்துக்கொண்டு பயன்படுத்தும்போது தலைமுடி ஆரோக்கியம் மற்றும் நிறம் இரண்டுக்கும் உதவும்.

உங்கள் தலைமுடிக்கு இந்த மருதாணி 12 நன்மைகளைத் தருகிறது. இதை நீங்கள் பயன்படுத்தி, உங்களின் தலைமுடி ஆரோக்கியம், நரை, இளமைதோற்றம் என பயன்பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி