Astro Tips : கையில் மருதாணி வைக்க நல்ல நேரம் எது தெரியுமா.. எந்த நேரத்தில் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும் பாருங்க!
Astro Tips : மருதாணி மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்து வளர்ப்பதால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பரவும் என்ற நம்பிக்கை உள்ளது. மருதாணி மரத்தை நம் வீட்டில் எந்த ஒரு திசையிலும் நட்டு வைத்து வளர்க்கலாம். ஆன்மீக ரீதியாகவும் சிறப்பு மிக்கது.
Astro Tips : மருதாணி என்றாலே சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் மிகவும் பிடிக்கும். பெண்களுக்கு கைகளில் மருதாணி வைத்தாலே ஒரு தனி அழகுதான். மருதாணி இலையை அரைத்து தலையில் பூசூம் போது தலையில் உள்ள நரை முடி கருமை நிறத்தில் மாற ஆரம்பிக்கும். இது இயற்கையான ஹேர்டை ஆக பலரும் பயன்படுத்துகின்றனர். உடலுக்கு குளிர்ச்சி, நகங்களுக்கு ஆரோக்கியம் தருகிறது. மருதாணி முற்றிய இலையை விட இளம் கொளுந்தாக உள்ள இலைகளை அரைத்து பூசும் போது கைகள் நன்றாக சிவக்கும். ஒரு காலத்தில் மருதாணி இலையில் உள்ள குச்சிகள் மற்றும் பழுத்த இலைகளை நீக்கிவிட்டு அம்மியில் அரைத்தனர். அதை அரைக்கும் போதே பெண்களுக்கு தனி சந்தோஷம்தான். ஆனால் இன்று பெண்கள் மிக்ஸியில் அரைத்து போட ஆரம்பித்து விட்டனர். மருதாணி இலையை அரைக்கும் போது ஓரிரு கொட்டாம்பாக்கு அல்லது சிறிதளவு அரை எலுமிச்சை சாறு அல்லது ஐந்தாறு கிராம்புகள் என்று ஏதாவது ஒன்றை மட்டும் சேர்த்து அரைத்து பூசினால் நிறம் நன்றாக பிடித்துக் கொள்ளும். இன்றைய கால கட்டத்தில் மருதாணி வைக்கும் பழக்கம் படிப்படியாக மாறி மெஹந்தி, நெயில் பாலிஷ் என மாறி உள்ளது. ஆனால் மருதாணி வைப்பது அழகுக்கு மட்டும் இல்லை. ஆன்மீக ரீதியிலும் தொடர்ப்பு உள்ளது.
மகாலட்சுமியின் அம்சம்
மருதாணி மகாலட்சுமியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. இதை வீட்டில் வைத்து வளர்ப்பதால் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பரவும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் வீட்டில் அதிர்ஷ்டம் பெரும்.
மருதாணி மரத்தை நம் வீட்டில் எந்த ஒரு திசையிலும் நட்டு வைத்து வளர்க்கலாம். ஆன்மீக ரீதியாகவும் சிறப்பு மிக்கது. மருதாணியை செடியில் இருந்து பறிப்பதற்கும், கையில் வைப்பதற்கும் நேரம் என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக மாலையில் விளக்கு வைத்த பின்னர் மருதாணியை செடிகளில் இருந்து பறிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் மருதாணி வைக்க கூடாது.
பொதுவாக நம் வீட்டில் திருமணம், தீபாவளி, பொங்கல் போன்ற எந்த விசேஷ விழாக்களிலும் முதல் நாளே பெண்களின் கைகளிலும் கால்களிலும் மருதாணி வைத்து தங்களை அழகு படுத்திக் கொள்வார்கள்.
இன்று திருமணங்களில் மெஹந்தி விழாவிற்கு முக்கிய இடம் உள்ளது. அன்றைய நாட்களில் திருமணம் நடக்கப்போகும் பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மருதாணியால் தங்கள் கை கால்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர்.
இப்போது மெஹந்தி போடுவதற்காக பல டிசைனர்கள் இருக்கிறார்கள். பல பெண்கள் இதை தங்கள் தொழிலாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். இன்று அது ஒரு பெரிய சந்தையாக மாறி வருகிறது.
குறிப்பாக ராகுகாலம், எமகண்டம் போன்ற நேரங்களில் மருதாணி வைக்க கூடாது. சந்திராஷ்டம் போன்ற நேரத்தில் நாம் மருதாணி வைப்பதை தவிர்க்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்