இது ஒரு சுவாரஸ்ய தகவல்! உலகத்தில் சில நாடுகளில் இந்தப்பெயர்களை குழந்தைகளுக்கு வைக்க தடை உள்ளதாம்!
Dec 03, 2024, 12:21 PM IST
உலக நாடுகளில் குழந்தைகளுக்கு வைக்க தடை செய்யப்பட்ட பெயர்கள்.
இது ஒரு சுவாரஸ்யமான தகவல்தான். உலகத்தில் உள்ள சில நாடுகளில் இந்தப் பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பதற்கு தடை உள்ளதாம். அது எந்தப்பெயர்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். இந்தப் பெயர்கள் சட்ட விரோதமான பெயர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. நமது நாட்டில் பிரபாகரன் என்ற பெயருக்கு நேரடி தடை இல்லாவிட்டாலும், அந்தப்பெயரை வைப்பதில் சில சிக்கல்கள் உள்ளது. அதுபோல் உலக நாடுகளில் என்ன உள்ளது என்று பார்க்கலாம். சில குழந்தைகளின் பெயர்கள் சட்ட ரீதியாக பல்வேறு நாடுகளில் கலாச்சாரம், மதம் மற்றும் சமூக கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற பெயர்கள் என்னவென்று பார்க்கலாம். இந்த பெயர்களுக்கு அர்த்தம் என்றால் அது சர்ச்சை மட்டும்தான். வரலாற்று ரீதியான தொடர்புடைய பெயர்கள், சில அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவை. அவை என்ன தெரியுமா?
அடால்ஃப் ஹிட்லர்
ஜெர்மனி, மலேசியா, மெக்சிகோ மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்தப்பெயரை வைக்க கட்டாயத் தடை உள்ளது. இந்தப்பெயர் வரலாற்றில் சர்ச்சையான பெயர் மற்றும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயருக்கு தடை உள்ளது.
அனுமா
அனுமா என்றால் அதற்கு பேய் என்று பொருள். இதனால் இந்தப்பெயர் ஜப்பானில் தடை செய்யப்பட்டுள்ள பெயர். இந்தப்பெயர் எதிர்மறையான விஷயங்களுடன் தொடர்புகொண்டது. எனவே இங்கு சமூகம் மற்றும் கலாச்சாரத்துக்கு ஏற்ற பெயர்களை மட்டும் வைக்கவேண்டும் விதியாக உள்ளது.
அமீர்
அமீர் என்றால் இளவரசன் என்று பொருள். இந்தப்பெயர் சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அங்கு அரசர்களை மட்டுமே இப்படி அழைக்கவேண்டும் என்பதால் இந்தப்பெயர் தடை செய்யப்பட்ட பெயராக உள்ளது.
அனல்
அனல் என்ற பெயர் நியூசிலாந்தில் தடை செய்யப்பட்ட பெயராகும். இந்தப்பெயருக்கு ஆசனவாய், மலம் கழிக்கும் இடம் என்ற பொருள் இருப்பதால் இந்தப்பெயருக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப்பெயரை அலுவல் ரீதியான பதிவுகளுக்கு உபயோகிப்பதில்லை,
ஏனஸ்
ஏனஸ் என்ற பெயருக்கு டென்மார்க்கில் தடை உள்ளது. இந்தப்பெயரும் உடலின் ஒரு அங்கத்தைக் குறிக்கும் பெயராகும். இது பொருந்தாத மற்றும் புண்படுத்தும் பொருள் கொண்டது என்பதால் இந்தப்பெயரை அலுவல் ரீதியாக பதிவு செய்ய முடியாது.
அஷாந்தி
அஷாந்தி என்ற பெயர் போர்ச்சுக்கல்லில் தடை செய்யப்பட்ட பெயராகும். இந்த நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள், கலாச்சாரத்துடன் தொடர்புடைய பெயர்களை அனுமதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். சில சர்ச்சைக்குரிய பெயர்களை அவர்கள் தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சோடோ
மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் விக்டோரியாவில் சோடோ என்ற பெயர் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தப்பெயருக்கு துர்நாற்றம் வீசக்கூடிய தலை என்பது பொருளாகும் என்பதால், இந்தப்பெயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சைனைட்
பிரிட்டனில் இந்தப்பெயருக்கு தடை உள்ளது. ஏனெனில் சைனைட் என்றால் கொல்லக்கூடிய விஷம் என்று பொருள் என்பதால், அந்த நாட்டில் இந்தப்பெயருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்ரிக்
என்ரிக் என்ற பெயர் அயர்லாந்தில் தடை செய்யப்பட்டுள்ள பெயராகும். இந்த பெயரை வைப்பது அந்த நாட்டில் சட்ட விரோதமானது. இங்கு பாரம்பரியமான, கலாச்சாரமான பெயர்களை மட்டுமே வைக்கவேண்டும். எனவே உங்கள் உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட பெயர்களை தெரிந்துகொண்டீர்கள். இவற்றை பயன்படுத்தாதீர்கள்.
டாபிக்ஸ்