"தடை.. அதை உடை.. புது சரித்திரம் படை.. நாளை நமதே".. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்..
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  "தடை.. அதை உடை.. புது சரித்திரம் படை.. நாளை நமதே".. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்..

"தடை.. அதை உடை.. புது சரித்திரம் படை.. நாளை நமதே".. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்..

Malavica Natarajan HT Tamil
Dec 03, 2024 08:09 AM IST

நம் சமூகத்தில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து, மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்தால், அவர்களும் பிறரின் உதவி இன்றி சமூகத்தில் முன்னேற முடியும்.

"தடை.. அதை உடை.. பது சரித்திரம் படை.. நாளை நமதே".. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்..
"தடை.. அதை உடை.. பது சரித்திரம் படை.. நாளை நமதே".. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்..

இது ஒரு உலகளாவிய சுகாதார நிகழ்வு ஆகும். இந்த நாளில், சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கின்றன. முன்னதாக, 1981ஆம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக பொருளாத வாழ்க்கை

இவர்கள், மாற்றுத் திறனாளிகள் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பங்கு பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த நாளில் நாம் அனைவரும், மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை பொது வெளியில் ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கும் சம உரிமையை வழங்க நாம் ஒன்றிணைந்து சில முயற்சிகளை செய்ய வேண்டும்.

இந்நாளின் நோக்கம்

குறிப்பாக, இந்த நாள் இந்த உலகளவில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட நபர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் சமத்துவம் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி சமூகத்திற்கு எடுத்துக் கூறும் நாளாக இருக்கிறது.

2024ம் ஆண்டின் கருப்பொருள்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் 2024ன் கருப்பொருள் என்னவென்றால் " உள்ளடக்கமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்துதல் " என்பதே ஆகும்.

அதாவது மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிலையான உலகத்தை உருவாக்குவதில் மாற்றுத்திறன் உள்ளவர்களின் பங்கும் இருக்க வேண்டும். அதற்கு அவர்களை தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்பதே.

வசதிகளுடன் வாழ உரிமை

மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த உலகில் எல்லா வசதிகளுடனும் வாழ உரிமை உள்ளது. அவர்களும் இந்த சமூகத்தில் எல்லா மரியாதையுடனும், கண்ணியத்துடனும் வாழ உரிமை பெற்றவர்கள் தான். நாம் அவர்களுக்கு வழங்க வேண்டியது சம வாய்ப்புகளும், அவர்களின் நலவாழ்வுக்கான உரிமைகளையும் மட்டுமே. நாம் அவர்களின் பிரச்சனைகளை புரிந்துகொண்டு, அவர்களுக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

130 கோடி மாற்றுத் திறனாளிகள்

இன்றைய காலகட்டத்தில், வெளியான அறிக்கையின் படி பார்த்தால், உலகில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 16% மாற்றுத் திறனாளிகள் அதாவது மொத்த மக்கள் தொகையில் 130 கோடி பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், உலகில் பிறக்கும் 6க்கு ஒருவர் மாற்றுத்திறனாளியாக உள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் தங்களின் வாழ்நாளைக் கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். அத்துடன் சமீக காலங்களில் அதிகரித்து வரும் நோய் தொற்றுகள் இவர்களை மேலும் அச்சுறுத்துகிறது.

மாற்று சிந்தனை

மாற்றுத் திறனாளிகளில் பெரும்பாலானோர் போதிய உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதில்லை. அத்துடன் அவர்கள் தங்களது அடிபப்டை தேவைக்கே பிறரை எதிர்பார்த்து காத்திருப்பதால் இவர்கள் எளிதில் உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் வேறு சில உடல் உபாதைகளுக்கும் ஆளாகின்றனர்.

எனவே, இவர்களின் உடல் நலனைப் பேணும் வகையில் சில உடற்பயிற்சிகள் அல்லது உடற் பயிற்சி கூடங்களையும் அமைக்கலாம். மேலும், அவர்கள் பொது இடங்களில் பிறரின் உதவியை நாடாமல், அர்களே சென்றுவர ஏதுவாக கட்டங்களையும் சாலைகளையும் வடிவமைக்கலாம்.

சின்ன சின்ன மாற்றங்கள்

இவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள், சேவைகளை பெற தனியாக விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுவும் அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இருக்க வேண்டும்.

இப்படி சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே அவர்கள் எளிதில் சாதாரண மக்களாக தங்களை உணர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடைவர். அதற்கு நம் அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.