வெற்றி மீது வெற்றி வந்து சேரவேண்டுமா? உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டி மகிழுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வெற்றி மீது வெற்றி வந்து சேரவேண்டுமா? உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டி மகிழுங்கள்!

வெற்றி மீது வெற்றி வந்து சேரவேண்டுமா? உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டி மகிழுங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 16, 2024 01:02 PM IST

வெற்றி மீது வெற்றி வந்து சேரவேண்டுமா? உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டினால் அவர்கள் வெற்றி வாகை சூடுவார்கள்.

வெற்றி மீது வெற்றி வந்து சேரவேண்டுமா? உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டி மகிழுங்கள்!
வெற்றி மீது வெற்றி வந்து சேரவேண்டுமா? உங்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப்பெயர்களை சூட்டி மகிழுங்கள்!

ஆராத்யா

ஆராத்யா என்றால் வணங்கத்தக்க அல்லது ஆசிர்வதிக்கப்பட்ட என்று பொருள். இந்தப்பெயர் வெற்றி மற்றும் தெய்வத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட, போற்றுதலுக்குரிய மற்றும் பயபக்தி கொண்ட ஆகிய அர்த்தங்களை குறிப்பிடுகிறது. இது நேர்மறை எண்ணங்களை கவர்ந்திழுக்கும் என்றும், ஆன்மீக பாதுகாப்பு தரும் பெயர் என்றும் நம்பப்படுகிறது. இந்த பெயர் ஒளிமயமான பாதையைக் காட்டும் என்று பொருள்.

லட்சுமி

இந்து கடவுளின் பெயர். செல்வம், செல்வச்செழிப்பு என்பதைக் குறிக்கும். லட்சுமி வெற்றியின் கடவுள். தேவைக்கு அதிகமாக பொன்னையும், பொருளையும் அள்ளிக் கொடுப்பவர் என்று பொருள். இந்தப்பெயர் பொருளாதாரம் மற்றும் வெற்றியின் அடையாளமாகும். இந்தப்பெயரை உங்கள் குழந்தைகளுக்கு வைத்தால் அது அவர்களுக்கு வெற்றியைத்தரும். அவர்களின் எதிர்காலத்தை நிறைக்கும்.

சிருஷ்டி

சிருஷ்டி என்றால் உருவாக்குபவர் அல்லது பிரபஞ்சம் என்று பொருள். சிருஷ்டி, புதிய துவக்கத்தைக் குறிக்கிறது. இது கிரியேட்டிவிட்டி மற்றும் முடிவில்லா சாத்தியங்களைக் கூறுகிறது. இது ஒருவரின் இலக்கை அடைய சக்தியைக் கொடுக்கிறது. கட்டுப்பாட்டு உணர்வை வளர்த்தெடுக்கிறது. வெற்றி மற்றும் சாதிக்கும் ஆற்றல், முன்னற்றம் ஆகியவற்றைக் கொடுக்கிறது என்பது இந்தப்பெயரின் அர்த்தமாகும்.

சாச்சி

சாச்சி என்றால் உண்மை, கடவுள் லட்சுமி என்று பொருள். செல்வம் மற்றும் அறம் என்ற பொருள்களைத் தருகிறது. இது வாழ்ப்கை நேர்மை மற்றும் ஒற்றுமையுடன் வேரூன்றியுள்ளது என்பதை குறிப்பிடுகிறது. இந்த திறன்கள்தான் வெற்றி மற்றும் நேர்மறை உறவுகளுக்கான அடித்தளம் ஆகும். இது வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்வு இரண்டிலும் வெற்றி பெறுவதை குறிக்கும்.

இஷானி

பார்வதிதேவியின் பெயர். சிவனின் மனைவி ஆவார். பெண் தெய்வம் மற்றும் ஆசை என்று பொருள். இந்தப்பெயர் ஆன்மீகம் மற்றும் வெற்றியை கவர்ந்திழுக்கும். பாதுகாப்புத் தரும், பலம் மற்றும் நிறைவைத்தருகிறது. ஒருவரின் இலக்கு மற்றும் கனவு, தெய்வீக நம்பிக்கையைத் தருகிறது.

ரிதிமா

ரிதிமா என்றால் அன்பு நிறைந்தவள் மற்றும் செல்வம் தருபவர். இது மகிழ்ச் மற்றும் செல்வத்தைக் குறிக்கிறது. இரக்கம், இசை மற்றும் அதிகப்படியான போன்ற எண்ணற்ற அர்த்தங்களைக் கொண்டது. இது வாழ்க்கையின் முழுமையைக் குறிக்கும். உறவு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைத் தரும்.

வேதிகா

வேதிகா என்றால் அறிவு மற்றும் தெளிவு ஆகியவற்றைக் குறிக்கிறது. அறிவு என்பது வெற்றிக்கான பாதையாகும். இது ஞானம் மற்றும் அறிவொளி என்பதைக்குறிக்கிறது. வேதிகா என்றால் வெற்றி மற்றும் உற்சாகத்தைத் தருபவர். கற்றல், ஆர்வம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி வழியான வெற்றியடைபவர் என்று பொருள்.

ஐஸ்வர்யா

செல்வம் மற்றும் செல்வச்செழிப்பு என்பதை இந்தப்பெயர் குறிக்கிறது. இது சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றிய பெயர் ஆகும். ஐஸ்வர்யா என்றால் அதிகப்படியான வாழ்வைத் தருகிறது. அதிக சாதனையைக் குறிக்கிறது. சமூக வெற்றி மற்றும் பொருளாதார வெற்றியைக் குறிக்கிறது. தன்னம்பிக்கை மற்றும் கருணையைக் குறிக்கிறது.

பிரிஷா

பிரிஷா என்றால் அன்பானவர் அல்லது கடவுளிடம் இருந்து வந்த பரிசு, உறவில் வெற்றி மற்றும் தனிப்பட்ட சாதனைகளை குறிக்கிறது. உணர்வு ரீதியான செழிப்பு ஆகியவற்றையும் குறிக்கிறது. இந்த பெயருடன் செல்வச்செழிப்பு எப்போதும் உடனிருக்கும்.

யாஷாஷ்வி

யாஷாஷ்வி, வெற்றியாளர், வெற்றி பெறுபவர் என்று பொருள். வெற்றியை நேரடியாகப் பெறுபவர் என்று பொருள். இது முயற்சி, தொடர்சி மற்றும் செய்யக்கூடிய திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது. செல்வத்தை நோக்கிய பயணத்தை குறிக்கிறது.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.