வேறு வழியில்லை; இதைத்தான் செய்யணும்; நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு; காத்துக்கொள்ள டிப்ஸ்கள்!
Nov 04, 2024, 11:06 AM IST
நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு, அதில் இருந்து உங்களை காத்துக்கொள்ள வேறு வழியில்லை நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றித்தான் ஆகவேண்டும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், தொழிற்சாலைகள் என அவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நீங்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் உங்களுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்படுகிறது. காற்றின் மாசுபாடுகளில் இருந்து உங்களை காத்துக்கொள்ளும் வழிமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வது எப்படி என்றும் கற்றுக்கொள்ளுங்கள். நமது நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தீபாவளி முடிந்து அடுத்த நாள் டெல்லியில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. நச்சுப்புனை டெல்லி முழுவதையும் சுற்றி சூழ்ந்திருந்தது. டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமாக உள்ளது என்றும், காற்று மாசைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும் மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கு காற்று மாசில் இருந்து உங்களை காத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
வீடுகளின் உள்ளே இருப்பது
காலையில், மாலையில் காற்றின் மாசு அதிகரித்து காணப்படும். இதனால் அந்த வேளைகளில் வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும். அந்த நேரத்தில் வீட்டுக்குள்ளே இருந்து கொள்ளுங்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் இருந்து கொள்ளுங்கள். சுத்திகரிக்கப்பட்ட காற்று உள்ள இடத்தை தேர்வு செய்து அங்கு அமர்ந்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் காற்று மாசில் இருந்து சிறிதளவு தப்பிக்க முடியும்.
ஏர் ப்யூரிஃபையர்கள்
நல்ல தராமான காற்று ப்யூரிஃபையர்களை வாங்கி வீடுகளில் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக படுக்கை அறை, ஹார் என அனைத்து இடங்களிலும் நல்ல காற்று வடிப்பான்கள் இருக்கட்டும். நல்ல தரமான வடிப்பான்கள் காற்றில் உள்ள மாசு துகள்களை வடித்துவிட்டு, உங்களுக்கு சுவாசிக்க நல்ல காற்றைத் தரும். இதனால் உங்கள் வீடுகளுக்குள் மாசு இருக்காது.
வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து செல்லுங்கள்
நீங்கள் எப்போது வெளியே சென்றாலும், என் 95 அல்லது என் 99 மாஸ்க் அணிந்து செல்லுங்கள். இந்த மாஸ்குகள் காற்றில் உள்ள கிருமிகளை வடிகட்டிக்கொடுக்கும். இதனால் நீங்கள் ஆபத்து நிறைந்த மாசுப்பொருட்களை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படாது. உங்கள் சுவாச ஆரோக்கியம் பாதிக்கப்படாது.
காற்றோட்டம்
மாசு அதிகம் உள்ள நேரத்தில் கதவுகளை திறந்து வைத்திருக்காதீர்கள். மதிய வேளையில் மட்டும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போது காற்று மாசு சற்று குறைவாக இருக்கும். உங்களுக்கு கொஞ்சம் சுத்தமான காற்று கிடைக்கும்.
வீட்டுக்குள் தாவரங்கள்
வீட்டுக்குள்ளே வளர்க்கப்படும் சில தாவரங்கள் உங்கள் வீட்டில உள்ள காற்றை இயற்கை முறையில் சுத்திகரித்துத் தரும். அவை காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் வீட்டுக்குள் புதிய காற்றைத் தரும். இது மெல்லமாக நடக்கும் ஒரு செயல். ஆனால், இதனால் உங்களுக்கு நல்ல பலன் கிட்டும். நீங்கள் அதுவரை பொறுமை காக்கவேண்டும். ஏர் ப்யூரியஃபையர்களுடன் சேர்ந்து வீட்டுக்குள் வளர்க்கும் இந்த தாவரங்களும் உங்களுக்கு நன்மையைத் தரும்.
நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்துக்கொள்ளுங்கள்
ஆன்டி ஆக்டிஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். இதில் சிட்ரஸ் பழங்கள் நிறைந்த உணவுகள், கீரைகள் இடம்பெறவேண்டும். இது உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இது மாசு ஏற்படும் சேதத்தை தடுக்கிறது. இது உங்கள் சுவாசம் மற்றும் இதய ஆரோக்கியத்தை குலைக்கும் சக்திகளை அழிக்கிறது.
நீர்ச்சத்து
அதிகளவு தண்ணீர் பருகுங்கள், இதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுகிறது. மேலும் மூலிகை தேநீர்கள், இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் தேநீர்கள் உங்கள் நுரையீரலுக்கு குளுமை தரும். வீக்கத்தைக் குறைக்கும். பழச்சாறுகளை பருகியும் உங்கள் உடலில் நீர்ச்சத்துக்களை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.
வெளியில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும்
காற்று மாசு உள்ள காலங்களில் வெளிப்புறத்தில் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும். அதிக மாசு இருக்கும் வேளையில் நீங்கள் வெளியில் உடற்பயிற்சியின்போது சுவாசித்தால், அது எண்ணற்ற நச்சுக்களை உங்கள் உடலுக்குள் கொண்டு சென்றுவிடும். எனவே வீட்டுக்குள் உடற்பயிற்சி செய்வதுதான் சிறந்தது. வீட்டுக்குள் யோகா செய்யுங்கள். இதனால் உங்களுக் பாதுகாப்பு கிடைக்கும்.
மூக்கில் ஸ்பிரே அடித்துக்கொள்ளுங்கள்
மூக்கில் ஸ்பிரே அடித்துக்கொள்வதால் காற்றில் உள்ள நச்சுக்கள் உள்ளே செல்லாமல் அடுத்து தடுக்கும். சுவாசப்பாதையில் சிக்கியுள்ள நச்சுக்களையும் அகற்றிவிடும். இதனால் சுவாசிக்கும்போது, எரிச்சல் ஏற்படாது. இது மாசை குறைக்க உதவும்.
ஆப்
உங்கள் பகுதியில் காற்றின் மாசு எவ்வளவு உள்ளது என்பதை காட்டும் ஆப்களை உங்கள் ஃபோனில் இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள காற்றின் தரம் குறித்த தகவல் உங்களுக்கு கிடைக்கும். இந்த அடிப்படையில் நீங்கள் வெளியே செல்லும் நேரத்தை தீர்மானித்துக்கொள்ளலாம். மேலும் காற்று மாசுக்கு நாம்தான் காரணம் என்பதை உணர்ந்து, மரங்களை நடுவது, தேவையற்ற புகையை தவிர்ப்பது என சுற்றுச்சூழலை காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்.
டாபிக்ஸ்