“13 வயசு பொண்ண அவர் மாமாவே.. நானே சாட்சி.. வீடுகளில் உச்சக்கட்ட பாலியல் தொந்தரவு! - அதிர்ச்சிக்கொடுத்த சின்மயி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “13 வயசு பொண்ண அவர் மாமாவே.. நானே சாட்சி.. வீடுகளில் உச்சக்கட்ட பாலியல் தொந்தரவு! - அதிர்ச்சிக்கொடுத்த சின்மயி

“13 வயசு பொண்ண அவர் மாமாவே.. நானே சாட்சி.. வீடுகளில் உச்சக்கட்ட பாலியல் தொந்தரவு! - அதிர்ச்சிக்கொடுத்த சின்மயி

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 20, 2024 07:00 AM IST

சின்மயி மீடூ மூவ்மெண்டில் 13 வயது குழந்தைக்கு நடந்த கொடுமை குறித்தும், வீடுகளில் நடக்கும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசி இருக்கிறார்.

“13 வயசு பொண்ண அவர் மாமாவே.. நானே சாட்சி.. வீடுகளில் உச்சக்கட்ட பாலியல் தொந்தரவு! - அதிர்ச்சிக்கொடுத்த சின்மயி
“13 வயசு பொண்ண அவர் மாமாவே.. நானே சாட்சி.. வீடுகளில் உச்சக்கட்ட பாலியல் தொந்தரவு! - அதிர்ச்சிக்கொடுத்த சின்மயி

இது குறித்து அவர் பேசும் போது, “முற்போக்கு பேசும் தமிழ்நாட்டில்தான் பாலியல் வன்கொடுமை பற்றி பேசிய என்னை, தொழில் செய்யவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் வேறெங்கும் இந்த அவல நிலை கிடையாது. இதை உலகெங்கும் நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். நான் பொய் கூறினேன் என்று கூறிய எல்லோரும் என் கண் முன்னாலேயே அதற்காக மிகப்பெரிய விலையை கொடுத்தார்கள்.

கண்கூடாக பார்த்தேன்

அதை நான் கண்கூடாக பார்த்தேன்; அது அனைத்தும் பொதுவெளியில் நடந்தது. ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர் முன்வந்து பேசியவர்களிடம், இதை சின்மயி அப்போதே வெளிக்கொண்டு வந்தாரே, அப்போதெல்லாம் நீங்கள் எங்கு சென்றீர்கள் என்ற கமெண்ட்கள் மக்கள் பதிவிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களையும் குறை சொல்ல முடியாது.

காரணம் என்னவென்றால், சிறு வயதில் இருந்து அவர்களையும் அப்படியே சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள். பிரான்சில் 70 வயது பெண்மணி ஒருவரின் கணவர், கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக அவருக்கு மயக்கம் மருந்து கொடுத்து, பல ஆண்களை வெப்சைட்டில் இருந்து வரவழைத்து, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோ எடுத்து இருக்கிறார்.

எனக்கென்ன மானபங்கம்

ஆனால், அந்தப் பெண் இதில் எனக்கென்ன மானபங்கம், அதை எடுத்த நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும் என்று, அவர் மீது நியாயத்தை முன் வைத்து விட்டார். ஆபாச வீடியோக்களை லீக் செய்கிறவர்களை விட, அதை பார்க்கிறார்கள் இல்லையா அவர்கள் தான் இருப்பதிலேயே கேவலமானவர்கள்.

அந்த வீடியோ உனக்காகவா வெளியிடப்பட்டது. அது உனக்காக வெளியிடப்படவில்லை என்றால், அதை ஏன் நீ பார்க்கிறாய். பார்ப்பதால் உனக்கு என்ன கிடைக்கப் போகிறது. செல்போன் வந்த புதிதில், ஆபாச வீடியோக்களில் இருந்த பல பெண்கள் இறந்து போய்விட்டனர். சிலர், இந்தியாவில்தான் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குறைவு என்று வாதிடுவார்கள் ஆனால், உண்மை அது அல்ல; இங்கு நடக்கிறது; ஆனால் முறையாக ஆவணப்படுத்தப்படுவதில்லை

வீடுகளில் நடக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல்கள்

தொழில் ரீதியாக நடக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல்களை விட வீடுகளில் நடக்கக்கூடிய பாலியல் துன்புறுத்தல்கள் அட்டூழியத்தின் உச்சம். பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட குழந்தை ஒன்று என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமையை என்னிடம் கூறினாள். அதில் நான் சாட்சியாக மாறிவிட்டேன். அந்தச் சிறுமியின் சொந்த மாமாவே அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார். அதன் பின்னர் நான் அவரை தொடர்பு கொண்டு, அவரது அப்பாவை தொடர்பு கொண்டு, அந்த சிறுமியிடம் பேசி பேசி உண்மையை வெளியே கொண்டு வந்தேன். இங்கு போலீசால் கூட சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது. காரணம் என்னவென்றால், இங்கு சிஸ்டம் அப்படியான ஒரு கட்டமைப்பிற்குள் இருக்கிறது.” என்று பேசினார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.