தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Joke: ‘மூக்கு பொடப்பா இருந்தா.. இப்படி தான் யோசிக்கத் தோணும்’ இன்றைய ‘கடி’ ஜோக்ஸ்!

Kadi Joke: ‘மூக்கு பொடப்பா இருந்தா.. இப்படி தான் யோசிக்கத் தோணும்’ இன்றைய ‘கடி’ ஜோக்ஸ்!

Aug 10, 2024, 02:00 PM IST

google News
Kadi Joke: கடி ஜோக்ஸ் இல்லாத வாழ்க்கையா? இருந்தாலும், மொக்கை இல்லாமல் எந்த ஜோக் சொல்றது? இன்றைய மொக்கை கடிகள் அணிவகுப்பு இதோ!
Kadi Joke: கடி ஜோக்ஸ் இல்லாத வாழ்க்கையா? இருந்தாலும், மொக்கை இல்லாமல் எந்த ஜோக் சொல்றது? இன்றைய மொக்கை கடிகள் அணிவகுப்பு இதோ!

Kadi Joke: கடி ஜோக்ஸ் இல்லாத வாழ்க்கையா? இருந்தாலும், மொக்கை இல்லாமல் எந்த ஜோக் சொல்றது? இன்றைய மொக்கை கடிகள் அணிவகுப்பு இதோ!

சனிக்கிழமை என்றால், சங்கடமா? எந்த சங்கடமும் வேண்டாம், சந்தோசமா இருங்க, அதுக்காக சில காமெடிகள், அதுவும் ஸ்பெஷல் ‘மொக்க காமெடிகள்’ அடுத்தடுத்து ‘கடி’யாக வருகிறது. இதோ உங்களுக்காக!

‘பேரு வெச்சியே சோறு வெச்சியா?’

அப்பா: என் மகனுக்கு அரிச்சந்திரன்னு பேர் வெச்சது தப்பா போச்சு!

நண்பர்: ஏன் என்ன ஆச்சு!

அப்பா: ‘ட்ரூ’ பிஸ்கட் மட்டும் தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிக்கிறான்!

‘தள்ளு தள்ளு கேஸ்’

ஆசிரியர்: பேருந்தை பின்னால தள்ளினால் என்ன ஆகும்?

மாணவன்: ‘பின்’ வளையும் சார்!

‘ஓஹோ.. இது தான் அழகுல மயங்குறதா?’

ஆசிரியர்: ஒரு யானை ரேஷன் கடைக்கு வேகமா ஓடுச்சாம்.. அங்கே அது என்ன வாங்கும்?

மாணவன்: வேறு என்ன.. மூச்சு தான் சார் வாங்கும்!

‘படிச்ச மாடு போல’

கடைக்காரர்: ஏன் இந்த மாடு, எத்தனை முறை அடிச்சாலும் நம்ம வாசலுக்கே வருது?

லேபர்: நம்ம கதவுல ‘புல்’னு போட்டுருக்காம் சார்!

‘பயங்கரமான ஆளா இருக்கயேடா..’

காதலன்: உங்க அப்பா ஸ்பின் பவுலர் தானே?

காதலி: எப்படிடா கண்டுபிடிச்ச?

காதலன்: அதான், உன் பெயர் ‘திருப்புர’சுந்தரினு வெச்சிருக்காரே!

‘பூவை பூவுனு சொல்லலாம்..’

ஆசிரியர்: சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன்: சுமார்.. ஐந்தாறு மாசம் வித்தியாசம் இருக்கும் சார்!

‘ஓ… சார் அப்படி வர்றாரு’

ஆசிரியர்: மழை மேகம் என்பதற்கு எதிர்பதம் சொல்லுங்க!

மாணவன்: மழை ‘மே நாட் கம்’ சார்!

‘போட்டுக் கொடுத்துட்டான்’

ஆசிரியர்: டேய்.. உன்னோட ஹோம் ஒர்க் பண்ண உன்னோட அக்கா உதவினாளா?

மாணவன்: இல்ல சார்.. அவள் தான் எல்லாத்தையும் செய்தாள்!

‘இன்னும் பச்ச மண்ணாவே இருக்கீயேப்பா’

ஆசிரியர்: இனிமே வீட்டுப்பாடத்தில் தப்பு இல்லாமல் எழுதனும்!

மாணவன்: ஓகே சார்.. எங்க அண்ணனிடம் சொல்லிடுறேன்!

‘இனி இந்த ஊர்ல இருக்க முடியாது’

டாக்டர்: உங்க பையனுக்கு ஒரு மேஜர் ஆப்ரேஷன் பண்ண வேண்டியிருக்கு

தந்தை: ஐயோ சார்.. அவன் மைனர் தான்!

‘சரியா தானே சொல்றான்’

ஆசிரியர்: பயங்கரமான ஐந்து மிருகங்கள் பெயரை சொல்லு!

மாணவன்: 3 சிங்கம், 2 புலி சார்

‘மூக்கு பொடப்பா இருந்தா..’

ஆசிரியர்: எலி எப்போ யானையாகும்?

மாணவன்: பேண்ட் போட்டா, எலிபேண்ட் ஆகும் சார்!

‘பெரிய டாக்டர் போல’

நோயாளி: டாக்டர், நீங்க ஒரு பல் டாக்டர் தானே!

டாக்டர்: இல்ல… நான் 32 பல்லுக்குமே டாக்டர் தான்!

‘செய்யுப்பா.. செய்..’

ஆசிரியர்: கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

மாணவன்: சொறிந்துவிடலாம் சார்!

‘அதாம்லே வர்ஹூசு..’

பயணி 1: கன்டக்டர் உங்க தோளில் அடித்து ஏதோ கேட்டரே?

பயணி 2: ராயப்பேட்டையானு கேட்டாரு.. இல்ல, தோள்பட்டைனு சொன்னேன்!

‘என்னடா இது.. கமலுக்கு வந்த சோதனை’

அப்பா: கமல், மீசை இல்லாமல் நடித்த முதல் படம் எது சொல்லு?

மகன்: களத்தூர் கண்ணம்மா அப்பா!

‘நல்லவேளை பனியன்கடைக்கார் தப்பிச்சாரு’

நண்பர்: வெங்காயக் கடைகாரர்கள் சங்கம் வெச்சா, என்ன பெயர் வைப்பாங்க?

நண்பர் 2: ‘ஆனியன் யூனியன்’

தினமும் இதுபோன்ற கடி ஜோக்குகளை கேட்டு கடுப்பாக, எங்களை பின் தொடருங்கள்!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை