Morning Quotes: உணவே மருந்து..சதி செய்யும் கார்ப்ரேட் சந்தை..இட்லியில இவ்வளவு இருக்கா? - டாக்டர் பேட்டி!-doctor ku sivaraman explained what is the best breakfast for morning - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Morning Quotes: உணவே மருந்து..சதி செய்யும் கார்ப்ரேட் சந்தை..இட்லியில இவ்வளவு இருக்கா? - டாக்டர் பேட்டி!

Morning Quotes: உணவே மருந்து..சதி செய்யும் கார்ப்ரேட் சந்தை..இட்லியில இவ்வளவு இருக்கா? - டாக்டர் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 06, 2024 07:53 AM IST

Morning Quotes: காலை உணவு ஏன் அவ்வளவு முக்கியம் என்றால், இரவு நீங்கள் 9 மணி அளவில் சாப்பிடுகிறீர்கள். அதன் பின்னர் தூங்கச் செல்கிறீர்கள். அதனால் பல மணி நேரங்களாக வயிற்றில் எந்த உணவும் இல்லாமல் இருக்கும் - டாக்டர் பேட்டி!

Morning Quotes: உணவே மருந்து..சதி செய்யும் கார்ப்ரேட் சந்தை..இட்லியில இவ்வளவு இருக்கா? - டாக்டர் பேட்டி!
Morning Quotes: உணவே மருந்து..சதி செய்யும் கார்ப்ரேட் சந்தை..இட்லியில இவ்வளவு இருக்கா? - டாக்டர் பேட்டி!

முட்டாள்தனமான விஷயமாகும்.

இதுகுறித்து அவர் பேசும் பொழுது," இன்றைய பரபரப்பான உலகில் குழந்தைகளும் சரி, வேலைக்குச் செல்பவர்களும் சரி, காலை உணவை மிகவும் அவசர அவசரமாக சாப்பிட்டுக் கொண்டு கிளம்புகிறார்கள். ஆனால் உண்மையில் பார்த்தீர்கள் என்றால், காலை உணவுஅப்படி எடுக்கக் கூடிய உணவு கிடையாது. இன்னும் சில பேர் எடையை குறைக்கிறேன் என்று கூறிக்கொண்டு, காலை உணவை வேண்டும் என்றே முற்றிலுமாக தவிர்ப்பார்கள். அது உண்மையில் ஒரு முட்டாள்தனமான விஷயமாகும்.

காலை உணவு ஏன் அவ்வளவு முக்கியம் என்றால், இரவு நீங்கள் 9 மணி அளவில் சாப்பிடுகிறீர்கள். அதன் பின்னர் தூங்கச் செல்கிறீர்கள். அதனால் பல மணி நேரங்களாக வயிற்றில் எந்த உணவும் இல்லாமல் இருக்கும். அப்படி இருக்கும் பொழுது வயிற்றில் அமிலமானது சொட்டு சொட்டாக வந்து தேங்கி நிற்கும். அப்படி இருக்கக்கூடிய அமிலத்தை நாம் காலை உணவை சாப்பிட்டு செயல்முறைக்கு உள்ளாக்க வேண்டும். அப்பொழுது மட்டும்தான் வயிற்றுப் புண்கள், அசிடிட்டி, குடல் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளிட்டவை வராமல் இருக்கும். காலை உணவை குழந்தைகள் தவிர்க்கும் பொழுது, மூளை சார்ந்த, படிப்பு சார்ந்த செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நம்மால் பார்க்க முடியும்.

 

சத்து குறைபாடு பிரச்சினை உருவாகும்

பெரியவர்கள் ஏதோ ஒரு சிற்றுண்டியை அவசர அவசரமாக சாப்பிட்டு செல்லும் பொழுதும், அவர்களுக்கும் பிரச்சினைகள் கண்டிப்பாக உருவாகும். பெரும்பான்மையானவருக்கு காலை சிற்றுண்டி சாப்பிடுவதில் நேரம் போதாமை இருப்பதை குறி வைத்து, பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு விதமான உணவுப் பொருட்களை, அதில் சத்துக்கள் இருக்கிறது என்று சொல்லி, சந்தையில் விற்பனை செய்கிறார்கள். அதையும் மக்கள் அவசர காலகட்டத்திற்கு வாங்கி சமைத்து, காலை உணவை உட்கொள்கிறார்கள். இதனை நீங்கள் தொடர்ச்சியாக உட்கொள்ளும் பொழுது, உங்களுக்கு பிரச்சினைகள் வருவதை தவிர்க்கவே முடியாது. காலை சிற்றுண்டியில் மிக மிக சிறப்பான உணவுகள் நம் தமிழ் மரபிலேயே இருக்கிறது.

இட்லியில் இவ்வளவு இருக்கிறதா?

காலை உணவைப் பொறுத்தவரை, மிகவும் கடினமான உணவுகளை நம் உடலுக்கு கொடுக்கக் கூடாது. எளிதாக ஜீரணிக்க கூடிய உணவுகளை மட்டுமே காலை சிற்றுண்டியாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். இது காலைக்கு மிக மிக சிறப்பான உணவு. சில பேர் இட்லியில் என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். உலகத்தில் மிகவும் பிரபலமான உணவில் நிபுணர் ஒருவர், பல உணவுகளை ஆராய்ந்து, காலை உணவாக இட்லியை எடுத்துக் கொள்வது மிக சிறப்பான ஒன்று என்று கூறியிருக்கிறார்.

அதாவது, இட்லி நம்முடைய காலைச் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளும் பொழுது உணவோடு சேர்த்து அதில் நம் குடலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களும் கிடைக்கின்றன என்று அவர் கூறியிருக்கிறார். அதேபோல பொங்கலும் மிகச்சிறந்த உணவாக பார்க்கப்படுகிறது. காரணம் என்னவென்றால் பொங்கல் ஒரு சமச்சீர் உணவு அதில் அரிசி இருக்கிறது. புரதத்திற்கு பருப்பு இருக்கிறது. கொழுப்பிற்கு நெய்யை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி இருக்கும் பொழுது அந்த உணவும் நம்முடைய காலை உணவுக்கு, ஆகச்சிறந்த உணவாக இருக்கிறது. இதனுடன் நாள் வாரியாக நாம் திணை உணவுகளை இட்லி தோசை போன்ற வடிவில் எடுத்துக் கொள்ளும் பொழுதுநம்முடைய உடலானது நல்ல நிலையில் இருக்கும்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.