Summer Cool Natural Drink : கூல்கூல் சம்மர் வேண்டுமா? இதோ நுங்கு, இளநீர், நன்னாரி சர்பத்! வேறலெவல் டேஸ்டில் அசத்தும்!
May 10, 2024, 12:44 PM IST
Summer Cool Natural Drink : உடலை குளுமையாக்கும் நுங்கு, இளநீர், நன்னாரி மூன்றும் சேர்த்த சர்பத் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இளநீர் – 250 மிலி
இளம் நுங்கு – 2
நன்னாரி சிரப் – 50 மிலி
சப்ஜா விதை – கால் ஸ்பூன் (கால் மணி நேரம் ஊறவைக்கவேண்டும்)
ஊற வைத்த பாதாம் பிசின் – 2 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
செய்முறை
முதல் நாள் இரவே பாதாம் பிசினை ஊறவைத்துவிடவேண்டும்.
நுங்கை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக ஸ்மாஷ் செய்துகொள்ளவேண்டும்.
அதில் இளநீரை சேர்க்கவேண்டும். பின்னர் நன்னாரி சர்பத்தை ஊற்றவேண்டும்.
அதில் எலுமிச்சை பழச்சாறு, பாதாம் பிசின், சப்ஜா விதை என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
தேவைப்பட்டால் ஐஸ் க்யூப்கள் சேர்த்து பரிமாறலாம் அல்லது சேர்க்காமலும் பரிமாறலாம்.
இதில் தர்ப்பூசணியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சேர்த்து பரிமாற இன்னும் சுவையும், குளுமையும் அதிகரிக்கும். இவையெல்லாம் உங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
நுங்கு, நன்னாரி, இளநீர் மூன்றுமே உங்கள் உடலுக்கு தேவையான குளிர்ச்சியைத் தரக்கூடியவைதான். கோடையில் உங்கள் உடலை மேலும் காக்கும்.
நுங்கின் நன்மைகள்
உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்கிறது. கோடை காலத்தில் உடல் இழக்கும் தண்ணீரை அது சரிசெய்கிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. குடல் இயக்கத்தை சரிசெய்து செரிமானத்தை போக்குகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. சரும ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. உடல் சோர்வை போக்குகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
வாந்தி, மயக்கத்தைப்போக்கி, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இருமலைக்கட்டுப்படுத்த உதவுகிறது.
சிறுநீர் கழிப்பதில் உள்ள அசவுகர்யங்களைப் போக்குகிறது. ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டை எதிர்த்து போராடுகிறது.
100 கிராம் நுங்கில் 38 கலோரிகள் உள்ளது. கார்போஹைட்ரேட்கள் 9.2 கிராம், நார்ச்சத்துக்கள் 1.1 கிராம், புரதம் 0.6 கிராம், கொழுப்பு 0.1 கிராம், பொட்டாசியம் 150 மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம், மெக்னீசியம் 10 மில்லி கிராம், கால்சியம் 8 மில்லி கிராம், வைட்டமின் சி 6.4 மில்லிகிராம், இரும்புச்சத்து 0.6 மில்லிகிராம் உள்ளது.
ஆனால் நுங்கை அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் அல்லது முற்றிய நுங்கை எடுத்துக்கொள்ளும்போதும் அது வயிறு உபாதைகள், கல்லீரல் பாதிப்பு, ரத்த அழுத்த பாதிப்பு, நரம்பு பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
இளநீரின் நன்மைகள்
நுங்கைப்போலவே உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் செரிமானத்துக்கு உதவுகிறது. உடலில் எலக்ரோலைட் அளவுகளை அதிகரிக்கிறது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்துக்கு நல்லது. ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது. சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நல்லது.
ஆனால் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது கவனமுடன் இருக்கவேண்டும். உடல் எடையை அதிகரிக்கும். சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தும்.
எனவே கவனத்துடன் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிகம் பருகினால், வயிற்றுப்போக்கு ஏற்படும். எனவே அளவாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
நன்னாரியின் நன்மைகள்
நன்னாரி உடலில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அது உடலில் கோடை கால நோய் தொற்றுகளை எதிர்த்துபோராட உதவுகிறது. மூட்டு வலியைப் போக்குகிறது. எடையை இழக்கச் செய்கிறது. சருமத்தை பாதுகாக்கிறது.
உடலில் உள்ள எண்ணற்ற நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. சிறுநீர் பாதை தொற்றுக்களை சரிசெய்கிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மேலும் கோடையை குளுமையாக்குகிறது. கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் இழப்பை ஈடுகட்டுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்