குளுகுளு குளிர் காலத்தில் மாடியிலே வளர்க்கலாம் ஸ்ட்ராபெரி; எப்படி என்று பார்க்கலாமா?
Nov 15, 2024, 07:00 AM IST
குளிர் காலத்தில் மாடியிலே ஸ்ட்ராபெரிகளை வளர்க்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.
குளிர் காலத்தில் மாடித்தோட்டத்திலோ அல்லது பால்கனியிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ ஸ்ட்ராபெரிகளை வளர்க்கலாம். அவை எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலே ஸ்ட்ராபெரிகளை வளர்ப்பது எப்படி என்று பாருங்கள். ஸ்ட்ராபெரிகள் மிகவும் சுவை நிறைந்த பழமாகும். இதன் சுண்டியிழுக்கும் சிவப்பு வண்ணம், புளிப்பும், இனிப்பும் கலந்த சுவை, இதை பல்வேறு உணவுகளிலும், ஸ்மூத்திகளிலும், பழச்சாறுகளில் கலக்கப்படுவதற்கு காரணமாகிறது. இந்தியாவில் குளிர்க்காலத்தில் வீட்டிலேயே வளர்க்க முடியும். இந்தப்பழத்துக்கு குளிரான ஒரு சூழல்தான் கட்டாயம் வேண்டும். குளிர்க் காலங்களில் இந்தப்பழங்களை எப்படி வீட்டிலே வளர்க்கலாம் என்று ஒவ்வொரு படியாக இங்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று பாருங்கள். இந்தக் குளிர் காலத்தில் வீட்டிலேயே ஸ்ட்ராபெரிகளை வளர்த்து பலன்பெறுங்கள்.
ஸ்ட்ராபெரிகளை வீட்டிலே வளர்ப்பது எப்படி?
வீட்டில் ஸ்ட்ராபெரிகளை வளர்ப்பதில் இரண்டு வழிகள் கடைபிடிக்கப்படுகிறது. அவற்றை விதைகள் மற்றும் நாற்றுக்கள் என இரண்டின் வழியாகவும் வீட்டில் வளர்க்கலாம். ஸ்ட்ராபெரி நாற்றுகளை அருகில் உள்ள நர்சரிகளிலும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் நல்ல ஸ்ட்ராபெரிகளை அறுவடை செய்ய விரும்பினால் அதற்கு ஏற்றது விதைகள் தான். அவைதான் நன்றாக செழித்து வளரும் தன்மைகொண்டவை.
விதைகள்
விதைகளை வைத்து நீங்கள் ஸ்ட்ராபெரிகளை வளர்க்க விரும்பினால், ஒரு பாக்கெட் ஸ்ட்ராபெரிகளை வாங்கவேண்டும். அதன் வெண்ணிறம் மற்றும் மஞ்சள் நிறம் கலந்த விதைகளை வெளியே எடுக்கவேண்டும். அதன் தோலை நீக்க வேண்டும். இந்த விதைகளை டிஷ்யூ பேப்பரில் வைக்கவேண்டும். இருளான மற்றும் சூரிய ஒளி கிடைக்கும் ஒரு இடத்தில் அந்த டிஷ்யூக்களை வைக்கவேண்டும்.
முளைவிடுதல்
டிஷ்யூ பேப்பர் நன்றாக காய்ந்தவுடன், விதைகள் அதில் இருந்து வெளியேறும், அப்போது தண்ணீர் ஊற்றி விதைகளை நன்றாக ஈரமாக்கவேண்டும். இந்த ஈரமான டிஷ்யூ பேப்பரை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைக்கவேண்டும். அதை இருளில் வைத்துவிடவேண்டும். இதை நீங்கள் அந்த விதைகள் இலை விடும் வரை மீண்டும், மீண்டும் செய்யவேண்டும்.
பின்னர் தொட்டிக்கு மாற்றவேண்டும்
டிஷ்யூ பேப்பரில் உள்ள 10 – 15 விதைகளுள், 6 முதல் 8 முளைத்திருக்கும். முளைத்த விதைகளை டிஷ்யூ பேப்பரில் இருந்து எடுத்து, ஒரு தொட்டியில் வைக்கவேண்டும். மண்ணில் 2 முதல் 4 சென்டிமீட்டர் ஆழத்திற்கு குழிகள் தோண்டி, விதைகளை விதைக்கவேண்டும். மண்போட்டு விதைகளை கொஞ்சம் மூடிவிடவேண்டும்.
மண் கலவை
ஸ்ட்ராபெரிக்கு தேவையான மண் கலவை கொஞ்சம் இயற்கை அமிலத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும். எனவே மண், வேப்பம்புண்ணாக்கு, தேங்காய் நார், ஆர்கானிக் உரம் உள்ளிட்டவை கலந்ததாக இருக்கவேண்டும் அல்லது நீங்கள் நர்சரி தோட்டத்திலே கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.
இடம்
ஸ்ட்ராபெரிச் செடிகளுக்கு தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை சூரிய வெளிச்சம் கிடைக்கவேண்டும். எனவே கொஞ்சம், கொஞ்சமாக சூரிய ஒளியை கிடைக்கச்செய்யவேண்டும். நீங்கள் விதைகளில் இருந்து ஸ்ட்ராபெரிகளை வளர்த்தால், முளைத்தல் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கும். எனவே தினமும் ஒரு மணி நேரம் வெயிலில், அதுவும் கொஞ்சமான வெயிலில் வைக்கலாம்.
நாற்றுக்கு சூரிய ஒளி
நீங்கள் நர்சரி தோட்டத்தில் இருந்து நாற்றுக்களை வாங்கி வந்தால், அதில் சில இலைகள் ஆரோக்கியமான இருந்தால், அதை நீங்கள் தினமும் 4 மணி நேரம் சூரிய ஒளியில் வைத்தால் போதும். முதலில் 2 அல்லது 3 மணி நேரங்கள் சூரிய ஒளியில் வைத்தால் செடி வளரத்துவங்கிவிடும். செடி வளரவளர அதை சூரிய ஒளியில் வைக்கும் நேரத்தை அதிகரிக்கலாம்.
வளர்ச்சி
நீங்கள் செடிக்கு போதிய தண்ணீர் ஊற்றி, சூரிய ஒளியில் வைத்தால், அது விதையில் இருந்து இலைகள் விட்டு முளைக்கத் துவங்கும். இரண்டு மாதங்களில் நன்றாக முளைத்து வரும். இதற்கு நீங்கள் சரியான உரமிட்டால், 90 நாட்களில் செடியில் இருந்து ஸ்ட்ராபெரிகள் முளைத்து வரும்.
பழம்
ஆனால் பழங்களை மிக விரைவிலே பறித்துவிடாதீர்கள். அவை சிவக்கும் அளவுக்கு நேரம் கொடுங்கள். அவை பசுமை நிறத்தில் இருந்து ரத்த சிவப்பு நிறத்திற்கு மாறவேண்டும். பின்னர் அதை பறித்துக்கொள்ளுங்கள். பழுக்கப்பழுக்க நன்றாக தொங்கும். எனவே அந்த நிலையில் நீங்கள் பழங்களை அறுவடை செய்துகொள்ளலாம்.
டாபிக்ஸ்