பூரி நன்றாக உப்ப வேண்டுமா? இப்படி செஞ்சு பாருங்க! காலை உணவுக்கு கரக்கெட் சாய்ஸ்!
வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு காலை உணவு தான் பூரி. ஆனால் சில சமயங்களில் பூரி செய்யும் போது அது சரியாக உப்பாமல் வரும். அந்த உப்பாத பூரியை யாரும் விரும்புவதில்லை. மாறாக வீட்டிலேயே எளிமையான பூரியில் சூப்பராக உப்பும் பூரியை செய்யலாம். அதன் எளிய ரெசிபியை இங்கு காணலாம்.
தினமும் காலை எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவருக்கும் காலை உணவை செய்து தருவதே பெரிய சிரமமான ஒரு வேலையாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த காலை உணவை தருவது மிகவும் குழப்பமான செயல் தான். ஏனென்றால் காலை உணவு சுவையானதாகவும் அதே நேரத்தில் சத்தானதாகவும் இருக்க வேண்டும். நாம் வீட்டில் எப்போதும் செய்து கொடுக்கும் காலை உணவுகள் அவர்களுக்கு போர் அடித்து விடும். எனவே வீட்டில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு காலை உணவு தான் பூரி. ஆனால் சில சமயங்களில் பூரி செய்யும் போது அது சரியாக உப்பாமல் வரும். அந்த உப்பாத பூரியை யாரும் விரும்புவதில்லை. மாறாக வீட்டிலேயே எளிமையான பூரியில் சூப்பராக உப்பும் பூரியை செய்யலாம். அதன் எளிய ரெசிபியை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் கோதுமை மாவு
2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு தண்ணீர்
பூரி பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். மாவை அதிக தண்ணீர் ஊற்றி மென்மையாக பிசைந்து விட கூடாது. சற்று கடினமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் பூரி நன்றாக உப்பி வரும். இந்த மாவை தொடர்ந்து 5 நிமிடங்கள் பிசைய வேண்டும். பின்னர் மாவின் மீது எண்ணெய் தடவி மூடி வைத்து ஊற விட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து அதனை துண்டு துண்டுகளாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த துண்டுகளை விரிசல் விழாமல் உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு உருண்டைகளையும் எண்ணெய் தடவி தேய்த்துக் கொள்ள வேண்டும். பூரி செய்வதற்கு மிகவும் மெல்லியதாக தேக்க தேவையில்லை. சற்று தடிமனாக தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறே அனைத்து உருண்டைகளையும் தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது அடுப்பில் கடயாயை வைத்து பூரி பொரிக்கத் தேவையான எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடான பின்னர் அதில் மெதுவாக தேய்த்த வைத்த மாவை போட வேண்டும். மேல் பக்கம் உள்ள பூரி பொரிய வில்லை என்றால் அதன் மீது கரண்டியை வைத்து சிறிது அளவு எண்ணெய் ஊற்றி விட வேண்டும். பூரியின் மறுபக்கமும் பொரியும் அளவிற்கு பூரியை திருப்பி போட வேண்டும். இரு பக்கமும் நன்றாக வெந்த பின்னர் உடையாமல் மெதுவாக எடுக்க வேண்டும். இதே போல மற்ற பூரியையும் பொரிக்க வேண்டும். சுவையான, உப்பலான பூரி ரெடி. இதற்கு உருளைக் கிழங்கு மசாலா அல்லது ஏதேனும் கிரேவி என பல வற்றை தொட்டு சாப்பிடலாம். வீட்டில் அணைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
.
டாபிக்ஸ்