ரிவியூக்கு முன்னரே ட்ரோல்.. எனக்காக உருவாக்கிய கதை கங்குவா! “நான் வீட்டில் இல்லை” - ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
கங்குவா பட ரிவியூக்கு முன்னரே ட்ரோல் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன், கங்குவா கதை தனக்காக சிவா உருவாக்கியிருந்ததாக ரஜினி பேசியதை நினைவுகூர்த்து அவரையும் “நான் வீட்டில் இல்லை. கேட் பூட்டை ஆட்டாதீர்” கலாய்த்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா படம் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க 980 நாள்கள் கழித்து சூர்யாவை திரையில் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தில் சூர்யாவின் நடிப்பு, விஷுவல் எபெக்ட்ஸ், பிரமாண்ட காட்சி அமைப்பு, தேவி ஸ்ரீ பிரசாத் பின்னணி இசை என அனைத்தும் சிறப்பாக இருப்பதாக சிலாகித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் சினிமா விமர்சகர்கள் பலரும் கங்குவா படத்தை காய்ச்சி எடுக்க தொடங்கியுள்ளனர். என்னதான்
டெக்னிக்கல் விஷயங்கள் நன்றாக இருந்தாலும், படத்தின் கதை கனெக்ட் ஆகும் விதமாக இல்லை எனவும், எமோஷனலான விஷயங்கள் இல்லாமல் இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.
ரஜினியை வம்புக்கு இழுத்த ப்ளூசட்டை மாறன்
இதையடுத்து பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூசட்டை மாறன் கங்குவா படம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "அண்ணாத்த ஷூட்டிங் சமயத்தில் எனக்காக ஒரு ஹிஸ்டாரிகல் படம் பண்ணித்தாங்க என்று சிறுத்தை சிவாவிடம் கேட்டேன். அதனால் உருவான கதைதான் கங்குவா. ஆனால் அது சூர்யாவிடம் சென்று விட்டது - தலைவர் during Kanguva Promo
தலைவர் நவ்: நான் வீட்டில் இல்லை. கேட் பூட்டை ஆட்டாதீர்" என குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் விமர்சனத்தை யூடியூப்பில் வெளியிடுவதற்கு முன்னரே கங்குவாவை, ரஜினியை வைத்து ட்ரோல் செய்ய தொடங்கியுள்ளார். இவரது இந்த பதிவுக்கு பலரும் "சூர்யா மீது ஏன் இவ்வளவு வன்மம்", "ரஜினி தப்பித்துவிட்டார்", "சீக்கிரம் ரிவியூ போடுங்க" போன்ற கருத்துகளை பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.
அத்துடன் கங்குவா படத்துக்கு இவரது விமர்சனம் எப்படி இருக்க போகிறது என்பதை படம் பார்க்காதவர்கள் மட்டுமின்றி, பார்த்தவர்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
கங்குவா மெமரீஸ்
மற்றொரு பதிவில் கங்குவா படம் ரிலீஸுக்கு முன்னர் நடிகர் சூர்யா, படத்தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் புரொமோஷன் போது பேசிய பல்வேறு விஷயங்களையும் தொகுத்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்
"Memories:
* 2,000 கோடி. தமிழின் முதல் பான் இண்டியா ஹிட் இதுதான - ஞானவேல்.
* கட்டுப்படுத்த முடியாத காட்டாறு - சிறுத்தை.
* இந்தியாவே வாயை பிளந்து பார்க்கும் - சூர்யா.
* திரை தீப்பிடிக்கும் - வெற்றி, DOP.
* 100 தடவை பாத்துட்டேன் - மதன் கார்க்கி.
* சூர்யா அரசியலுக்கு வரனும் - போஸ் வெங்கட்.
* உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யாதான் - கருணாஸ்
* 38 மொழிகள். 11,500 ஸ்க்ரீன்கள் - ஞானவேல்
* 2 hrs 10 mnts Goosebumps ஆக இருக்கும் - ஞானவேல்
- மரத்துல ஏற சொன்னா உடனே சூர்யா சார் சரசரன்னு ஏறிடுவார் - சிறுத்தை.
* இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை சீன் இதுல இருக்கு - சிறுத்தை.
* X லைக் பட்டனை கங்குவா ஐகான் போல மாற்றினார் எலன் மஸ்க் - சூர்யா ஃபேன்ஸ்
* பாகுபலி எடுக்க எனக்கு இன்ஸ்பிரேசனே சூர்யாதான் - ராஜமௌலி." என குறிப்பிட்டுள்ளார்.
ஓவர் பில்ட்ப் படுதோல்வி தான்
அத்துடன், "தேவையான அளவுக்கு மட்டும் ப்ரமோசன்பண்ணிட்டு அமைதியா இருந்தா சுமார் படம் நல்ல வசூலாகும். நல்ல படம் பெரிய ஹிட்டாகும். உதாரணம்: லப்பர் பந்து, அமரன்.
ஓவர் பில்ட்ப் தந்த பல தமிழ்ப்படங்கள் படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு. உதாரணம்: இந்தியன் 2.
கங்குவா நிலை என்னவாகும் என்பது இனிதான் தெரியும். இனியாவது ஹாலிவுட் ரேஞ்ச் என்று சொல்வதை நிறுத்துங்கள்.
ஜூராசிக் பார்க், அவதார், டைட்டானிக், லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற படங்களின் பொருட்செலவு, தொழில்நுட்ப நேர்த்தியை தொடுவது மிகக்கடினம். அதை நாம் தொடும்போது.. அவர்கள் மேலும் பலமடங்கு முன்னேறி இருப்பார்கள்.
அட்லீஸ்ட்.. அந்த வாயை வச்சிட்டாவது சும்மா இருங்க.
Waiting for..200, 500,1000,2000 cr Vadai" எனவும் தெரிவித்துள்ளார்.
கங்குவா கதை
நிகழ்காலத்தில் இருக்கும் பிரான்சிஸிக்கு ஜூடா மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கே ஆரம்பிக்கிறது கங்குவாவின் கதை. ஐந்து தீவுகளில், பெருமாச்சி தீவின் ஆதர்ச நாயகனாக வலம் வரும் கங்குவாவுக்கும் அவனது குழுவுக்கும், போர்தான் குலத்தொழில்.
வீரமும், இயற்கையும் விளைந்த அந்த மண்ணை தன் வசப்படுத்த நினைக்கிறது ரோமானிய அரசு. அவர்கள் அதற்காக கொடுவாவிற்கு பணத்தாசைக் காட்டி அவனை தங்களது வலைக்குள் கொண்டு வருகின்றனர். அவனும் ஆசைகொண்டு, பெருமாச்சி இன மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கிறான். இதைக்கண்டு பொங்கிய கங்குவாவும், அவனது இனமும் அவனை தீ வைத்து கொழுத்த, அவன் மனைவி மற்றும் மகனையும் கொல்ல வேண்டும் என்று இன மக்கள் கூறுகின்றனர்.
அதற்கு கங்குவா எதிராக நிற்க, என் மகன் இனி உன் மகன் என்று சொல்லி, கங்குவன் கையில் மகனை ஒப்படைத்து விட்டு உடன் கட்டை ஏறுகிறார் கொடுவாவின் மனைவி.. அதன் பின்னர் என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? அப்பாவை கொன்ற கங்குவாவை கொல்ல துடிக்கும் கொடுவாவின் பகை என்ன ஆனது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே படத்தின் கதை.