Stomach Bloating : மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்களால் வயிறு உப்புசமா? பெண்களை காக்கும் அருமருந்து என்ன தெரியுமா?
Jul 19, 2024, 05:59 AM IST
Stomach Bloating : மாதவிடாய் கால ஹார்மோன் மாற்றங்களால் வயிறு உப்புசத்தால் அவதிப்படும் பெண்கள். அவர்களைக் காக்கும் அருமருந்தாக இந்த தேநீர் உள்ளது.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மாதவிடாய் வருவதற்கு முன்னர் பசியின்மை, வாந்தி உணர்வு, தலைச்சுற்றல், மயக்கம், வயிறு உப்புசம் ஏற்பட்டு அவதிப்படும் பெண்கள் என்னசெய்யவேண்டும் தெரியுமா?
பொதுவாக மனஅழுத்தம், ஹார்மோன் பிரச்னைகள் மற்றும் உணவு இந்த மூன்று காரணங்களே பெண்களுக்கு ஏற்படும் அல்சருக்கு முக்கிய காரணகளாகின்றன.
அல்சரின் அறிகுறிகள்
வயிறு எரிச்சல்
வயிறு வலி
வயிறு உப்புசம், வயிறு நிறைந்த உணர்வு
கொழுப்பு உணவுகளை ஏற்காமை
நெஞ்செரிச்சல் மற்றும் குமட்டல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்.
தீவிர அல்சர் பிரச்னைகள் ஏற்பட்டால்
வாந்தி
ரத்த வாந்தி,
கருப்பாக மலம் கழித்தல்,
மூச்சுத்திணறல்
மயக்கம்
சோர்வு
வாந்தி
உடல் எடையிழப்பு
பசியின்மை
பசியில் மாற்றம்
எப்போது மருத்துவரை அணுகவேண்டும்?
உங்களுக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகும்போது, உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே அல்சருக்கு நல்லது. நீங்களாகவே செரிமான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.
வயிற்றின் வலது புறத்தில் வலி இருந்தால், மேல்புறம் வலி இருந்தால், ஃபேட்டி லிவர் அல்லது பித்தப்பை கற்களால் ஏற்படலாம். அடிவயிறு வலி இருந்தால், பெண்களுக்கு கருப்பை பிரச்னைகளாகவும், ஆண்களுக்கு ப்ராஸ்டேட் பிரச்னைகளாகவும் இருக்கலாம்.
அல்சர் இருப்பவர்களுக்கு மேல் வயிற்றில் நடுப்பகுதியில் வலி இருக்கும். கடும் அல்சராக இருந்தால், வயிற்றுக்குள் இருக்கக்கூடிய புண் கடுமையாகி உள்ளே ரத்தக்கசிவு ஏற்பட்டு, மலம் கருப்பாகிவிடும்.
ஆனால் நாம் வயிறு வலித்தாலே அதை ஒட்டுமொத்தமாக வயிறு வலி என்றே குறிப்பிடுகிறோம். இந்த அல்சரை குணப்படுத்த நமக்கு ஏலக்காய் உதவும். அல்சர் உள்ளவர்கள் ஏலக்காயை என்ன செய்து சாப்பிடவேண்டும்.
அல்சரால் அவதிப்படும் பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தால் மாதவிடாய் காலங்கள் மற்றும் மத்திய மாதவிடாய் காலங்கள் என இரு காலங்களில் வயிறு உப்புசம் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் அவர்கள் கீழ்கண்ட தேநீரை எடுத்துக்கொண்டு தீர்வு பெறலாம்.
தேவையான பொருட்கள்
பட்டை – 1
கிராம்பு – 2
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
புதினா – ஒரு கைப்பிடியளவு
கருப்பட்டி – தேவையான அளவு
செய்முறை
பட்டை, கிராம்பு, மிளகு, மஞ்சள், புதினா இவையனைத்தையும் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, அது ஒரு டம்ளராகும் வரை கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் வடிகட்டி, அதில் கருப்பட்டியை பொடித்து சேர்த்து இந்த தேநீரை மாதவிடாய் வருவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே துவங்கி மாதவிடாய் வரும் வரை பருகிவரவேண்டும்.
பட்டை மற்றும் கிராம்பு உங்களுக்கு வயிற்றில் ஏற்படக்கூடிய வலி மற்றும் அசவுகர்யங்களைப்போக்கும்.
புதினா, மஞ்சள் மற்றும் மிளகு ஹார்மோன் சமமின்மையை முறைப்படுத்தும். இளம் பெண்களுக்கு இது வயிறு உப்புசத்தை குறைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்