Deworming at Home : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்! பசியின்மைக்கு வயிற்றில் பூச்சிகள் காரணமாகலாம்! இதோ தீர்வு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Deworming At Home : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்! பசியின்மைக்கு வயிற்றில் பூச்சிகள் காரணமாகலாம்! இதோ தீர்வு!

Deworming at Home : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்! பசியின்மைக்கு வயிற்றில் பூச்சிகள் காரணமாகலாம்! இதோ தீர்வு!

Priyadarshini R HT Tamil
Jul 13, 2024 08:46 AM IST

Deworming at Home : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள். பசியின்மைக்கு வயிற்றில் பூச்சிகள் காரணமாக இருக்ககலாம். இதோ வீட்டிலேயே பூச்சிகளை அகற்ற தீர்வுகள்.

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்! பசியின்மைக்கு வயிற்றில் பூச்சிகள் காரணமாகலாம்! இதோ தீர்வு!
சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்! பசியின்மைக்கு வயிற்றில் பூச்சிகள் காரணமாகலாம்! இதோ தீர்வு!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்களை விரட்டி, பசியை அதிகரிக்கும் இயற்கையான வழி இதுதான்.

உங்களுக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டால், வயிற்றில் பூச்சிகள் உள்ளது என்று பொருள். குறிப்பாக குழந்தைகள் வயிற்றில் நாடாப்புழு மற்றும் கொக்கிக்புழு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு வயிற்றில் புழுக்களை நீக்கும் மருந்துகள் வழங்கப்படும்.

ஆனால், அவை அவர்களுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதுபோன்ற தருணங்களில் நாம் இயற்கை முறையிலேயே நாம் வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்ற முடியும். அதற்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் நமது வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.

இந்த ரெசிபியை பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவரும் பயன்படுத்தலாம். இது வயிற்றில் உள்ள அமீபாக்கள் மற்றும் பூச்சிகளைக் கொல்லும். உங்கள் முழு உடலையும் சுத்தம் செய்யும்.

வயிற்றில் பூச்சி இருந்தால், உங்களுக்கு மலம் கழிக்கும் இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். அதுதான் உங்கள் வயிற்றில் பூச்சிகள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள். அதற்கு உங்கள் வயிற்றை கீழ்கண்ட முறையில் சுத்தப்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்

பால் – அரை டம்ளர்

பூண்டு – 6 பல் (பெரியது என்றால் 3 பல்)

செய்முறை

காய்ச்சிய அரை டம்ளர் பாலில், நறுக்கிய பூண்டை சேர்த்து மிக்ஸி ஜாரில் அடித்து அதை காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இப்படி செய்யும்போது உங்கள் உடலில் உள்ள பூச்சிகள், புழுக்கள் என அனைத்தும் அடித்து வெளியேற்றப்படும். இது இயற்கை முறை வீட்டு தீர்வு ஆகும்.

ஆனால், இதை சில குழந்தைகள் விரும்பி பருகமாட்டார்கள் ஏனெனில் இந்தப்பால் சுவை நிறைந்ததாக இருக்காது. எனவே அவர்களுக்கு பாலில் பூண்டை கொதிக்க வைத்தும் இரவு உறங்கச் செல்லும் முன் பருகலாம். அந்தப்பூண்டை கடித்து சாப்பிடலாம். இதற்கும் பலன் கிடைக்கும். ஆனால் பச்சையான பூண்டு அடித்து பருகும்போது கூடுதல் பலன் கிட்டும்.

இதை ஆண்டில் இருமுறை செய்யவேண்டும். அப்போதுதான் குடலில் உள்ள பூச்சி, புழுக்கள் அகற்றப்பட்டு, குடல் நன்றாக இருக்கும்போதுதான் உங்களுக்கு பசி ஏற்படும். எனவே இதை கட்டாயம் பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.