Burn Belly Fat : தொப்பை தரும் தொல்லை! தட்டை வயிறு தவம்! உடல் எடையை அடித்து விரட்ட இந்த ஒரு ஸ்மூத்தி போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Burn Belly Fat : தொப்பை தரும் தொல்லை! தட்டை வயிறு தவம்! உடல் எடையை அடித்து விரட்ட இந்த ஒரு ஸ்மூத்தி போதும்!

Burn Belly Fat : தொப்பை தரும் தொல்லை! தட்டை வயிறு தவம்! உடல் எடையை அடித்து விரட்ட இந்த ஒரு ஸ்மூத்தி போதும்!

Priyadarshini R HT Tamil
Jul 14, 2024 01:46 PM IST

Burn Belly Fat : தொப்பை தரும் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? தட்டையான வயிறு என்பது தவமாக உள்ளதா? உடல் எடையை அடித்து விரட்ட இந்த ஒரு ஸ்மூத்தி போதும்!

Burn Belly Fat : தொப்பை தரும் தொல்லை! தட்டை வயிறு தவம்! உடல் எடையை அடித்து விரட்ட இந்த ஒரு ஸ்மூத்தி போதும்!
Burn Belly Fat : தொப்பை தரும் தொல்லை! தட்டை வயிறு தவம்! உடல் எடையை அடித்து விரட்ட இந்த ஒரு ஸ்மூத்தி போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடல் பருமன்

உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.

இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.

சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன.

ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

வாழைப்பழம் – 1

வெள்ளரி – அரை

பாலக்கீரை – ஒரு கப்

செய்முறை

வாழைப்பழத்தை உரித்து நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும். அதனுடன், வெள்ளரி மற்றும் பாலக்கீரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும்.

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இதுவே வயிறு நிறைந்த உணர்வைத்தரும் என்பதால், காலையில் உணவு எடுக்க வேண்டாம். நேரடியாக மதிய உணவை சீக்கிரம் சாப்பிட்டாலே போதும்.

உங்கள் உடல் எடை மளமளவென குறைத்து, உங்களின் தட்டை வயிறு கனவும் நனவாகும். இந்த பானத்தை முதலில் ஒரு மாதம் முயற்சி செய்து பாருங்கள் பின்னர் இதை தொடர்ந்து எடுப்பது குறித்து முடிவெடுக்க அது உதவும்.

மேலும் இந்த பானத்துடன், நீங்கள் மற்ற வேளைகளில் சாப்பிடும் உணவு ஆரோக்கியத் நிறைந்ததாகவும் இருக்கவேண்டும். முறையான உடற்பயிற்சிகள் என செய்வதும் அவசியம். இந்த குறிப்புக்களைப் பின்பற்றி உங்கள் உடல் எடையை குறைத்து மகிழ்ந்திருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.