Stay Hydrated : இந்த 8 வழிகள் போதும்! கோடை காலத்தில் நீங்கள் தண்ணீர் எடுக்கும் அளவை அதிகரிக்க உதவும்!
Mar 24, 2024, 04:05 PM IST
Stay Hydrated : இவற்றை பின்பற்றி தினமும் நீங்கள் தண்ணீர் உட்கொள்ளும் அளவை அதிகரிக்க முடியும்.
நீங்கள் தண்ணீர் எடுக்கும் அளவை அதிகரிக்கும் 8 வழிகள்
வாழ்க்கையில் தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்று. தண்ணீர் இல்லாமல் நம்மால் வாழவே முடியாது. உங்கள் உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்துக்கொள்ளவும், உடல் இயக்கத்துக்கும் முக்கியம். இது உடலின் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே நீங்கள் தண்ணீர் பருகும் அளவை அதிகரிக்கவும், உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளவும், உங்களுக்கு இந்த 8 வழிகள் உதவும். எனவே இவற்றை பின்பற்றி உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
எழுந்தவுடன் நீர்ச்சத்து எடுப்பது
காலை எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுங்கள். உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வதற்கு காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது. இது உங்கள் உடல் தண்ணீர் இழப்பதை தடுக்கும். இதற்குப்பின்னர் நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் டீ மற்றும் காபியை எடுத்துக்கொள்ளலாம்.
எப்போதும் வாட்டர் பாட்டில் எடுத்துச்செல்லுங்கள்
ஒரு நல்ல வாட்டர் பாட்டிலை வாங்கிவைத்துக்கொண்டு, எங்கு சென்றாலும் அதில் தண்ணீர் எடுத்துச்செல்லுங்கள். தேவைப்படும்போது தண்ணீரை பருகுங்கள். தண்ணீர் கையில் இருந்தால் நீங்கள் தேவைப்படும்போது பருகுவீர்கள். அது உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைக்கும். நீங்கள் பள்ளி, பணி என்று எங்கு செல்லும்போதும், அது உங்களுக்கு உதவும்.
தண்ணீர் பருக நினைவூட்டிகளை இட்டுக்கொள்ளுங்கள்
நாம் அன்றாட கடும் பணிகளில் தினமும் மாட்டிக்கொள்கிறோம், அதனால் நமக்கு தேவையானபோது கூட நம்மால் தண்ணீர் பருகமுடியாமல் போகிறது. எனவே நீங்கள் கட்டாயம் தண்ணீர் எடுப்பதை உறுதிசெய்ய, அதற்கு அவ்வப்போது நினைவூட்டும் நினைவூட்டிகள் அல்லது அலாரம் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு நினைவு வரும்போது, அவ்வப்போது தண்ணீர் பருகவேண்டும். அதற்கு தற்போது ஆப்களும் உதவுகின்றன.
சுவையான தண்ணீர்
சுவையான மற்றும் புத்துணர்ச்சி தரும் பானங்கள் பருகவேண்டுமென்றால், நீங்கள் பருகும் தண்ணீரில் எலுமிச்சை, வெள்ளரி மற்றும் புதினா ஆகியவற்றை ஊறவைத்து பருகினால் உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குவதுடன், உங்களுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. தண்ணீரில் ஊறவைக்கும் பொருட்களை மாற்றிக்கொள்வது நல்லது. துளசி, சீரகம், வெந்தயம், சப்ஜா விதை என எதை வேண்டுமானாலும் சேர்த்து ஊறவைத்து பருகலாம்.
தண்ணீர் சத்து நிறைந்த உணவுகள்
உங்கள் உணவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். மதிய உணவாகவோ அல்லது ஸ்னாக்ஸ்களிலோ நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆரஞ்ச், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, தர்ப்பூசணி என நீர்ச்சத்து தரும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு உடலுக்கு தேவையான வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகிறது.
அதிக இனிப்புச்சுவை நிறைந்த தண்ணீர் பருகுவதை நிறுத்த வேண்டும்
சர்க்கரை நிறைந்த பானங்கள், சோடா, கூல் டிரிங்குகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பானங்கள் ஆகியவற்றை பருகுவதற்கு பதில் தண்ணீரே குடித்துவிடலாம். இது உங்கள் உடலில் சேரும் சர்க்கரை அளவை குறைக்கும். கலோரிகளை குறைத்து உங்கள் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்க உதவுகிறது. இயற்கையில் உங்கள் உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகரிக்கிறது. இதனால் செயற்கையாக எதையும் சேர்க்கத் தேவையில்லை.
உணவுக்கு முன்
உணவு உட்கொள்ளும் அரைமணி நேரத்துக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவதை உறுதியாக்குங்கள். இது வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். அது நீங்கள் அதிக உணவு உட்கொள்வதை தடுப்பதோடு, செரிமானத்தையும் அதிகரித்து, உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் உறுதிப்படுத்துகிறது.
உங்கள் முன்னேற்றத்தை டிராக் செய்யுங்கள்
ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள ஆப்களைப் பயன்படுத்தி, தினசரி நீங்கள் தண்ணீர் பருகும் அளவை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நீர்ச்சத்து நோட்டு வைத்து நீங்கள் தண்ணீர் பருகும் அளவை கணக்கெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீங்கள் தண்ணீர் பருகும் அளவை கண்காணித்து, நீங்கள் அதிக தண்ணீர் பருகவேண்டுமா அல்லது என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்தும்.
அன்றாடம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நீர்ச்சத்துடன் இருக்கவும், நீங்கள் அடிக்கடி தண்ணீர் பருகவேண்டும். உலக தண்ணீர் தினம் போன்ற நாட்களை நாம் அங்கீகரிக்க வேண்டும். அந்த நாளில், நீங்கள் தண்ணீர் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் ஒரு பகுதியாக தண்ணீருடன் உங்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அதுபோன்ற நாட்களில் உங்கள் உடல் நலனுக்காக தண்ணீர் தொடர்ந்து பருகும் பழக்கங்களை தொடங்குவதை உறுதிப்படுத்துங்கள்.
இதுதான் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கான வழிகள். உங்களுக்கு உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இரண்டையும் நாம் கொடுத்தால்தான் உங்கள் உடல் சரியான முறையில் இயங்கும். ஒவ்வொரு முறை நீங்கள் பருகும்போதும், நீங்கள் நல்ல வாழ்க்கை முறைக்கு ஒருபடி அருகில் செல்கிறீர்கள். நல்ல ஆரோக்கிய வாழ்வை வாழ்கிறீர்கள்.
டாபிக்ஸ்