Benefits of Jeera Water: காலை வெறும் வயிற்றில், இந்த இரண்டும் கலந்த தண்ணீர்! தினமும் பருக உங்கள் உடலில் மாயங்களை பாருங்க
Benefits of Jeera and Ajwain Water : சீரகம் மற்றும் ஓமம் கலந்த தண்ணீரி பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் பருகினால் பலன் கிட்டும்.
சீரகம் மற்றும் ஓமம் கலந்து தண்ணீரில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்
பல்வேறு வீட்டு தீர்வுகளில், காலை வெறும் வயிற்றில் சிலவற்றை செய்வது நன்மையைக் கொடுக்கிறது. அந்த வகையில், இந்த காலை பானம் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இது பல்வேறு உடல் உபாதைகளுக்கும் தீர்வாகிறது. இது உங்கள் உடலுக்கு அளிக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.
உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது
சீரகம் மற்றும் ஓமம் கலந்த தண்ணீரை பருகும்போது, அது உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இது ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அமுதம். உடலை இயற்கையாக சுத்திகரிக்கிறது. இது உடலில் உள்ள கழிவுகளை தொடர்ந்து வெளியேற்றுகிறது. இதனால் இது கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. உடல் உள்புறத்தை முழுமையாக சுத்தம் செய்கிறது.
வீக்கத்து எதிராக செயல்படுகிறது
இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடலில் வீக்கத்தை குறைக்கிறது. இது மனிர்களுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது. இதனால் ஆர்த்ரடிஸ் போன்ற நோய்கள் குணமடைகிறது.
மாதவிடாய் வலியை குணப்படுத்துகிறது
சீரகம் மற்றும் ஓமத்தில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் ஆன்டிஸ்பாஷ்மோடிக் குணங்கள், மாதவிடாயால் ஏற்படும் உடல் சோர்வுகளை குணப்படுத்துகிறது. இந்த பானத்தை வழக்கமாக காலையில் பருகும்போது, பெண்களின் ஒட்டுமொத்த உடல் நலன் காக்கப்படுகிறது. அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் அவர்களின் அசௌகர்யங்கள் குணமாகிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
சீரகம் மற்றும் ஓமம் உடலின் வளர்சிதையை அதிகரித்து, பசியை குறைத்து, செரிமானத்துக்கு உதவி செய்து, அனைத்தும் சேர்ந்து உடல் எடை குறைப்புக்கு காரணமாகிறது. செரிமானத்துக்கு உதவுவதால் உடலில் வயிறு உப்புசம் குறைகிறது. உடலில் உள்ள கழிவுகள் நீங்குகிறது. இந்த கலவை உடல் ஆரோக்கியத்துடனும், ஒல்லியாகவும் இருக்க உதவுகிறது.
அடர்த்தியாக முடி வளர உதவுகிறது
இந்த தண்ணீர் பருகுவதால் தலைமுடி அடர்த்தியாக வளர்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள், இதன் ஃபாலிக்கில்களை வலுப்படுத்துகிறது. இதனால் தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பொடுகை எதிர்த்து போராடுகிறது. முகப்பருக்களை நீக்குகிறது. சருமத்தை பாதுகாக்கிறது. இதனால் சருமம் பளபளக்கிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
இதில் உள்ள வாயுக்களை நீக்கி வயிறு வலியை போக்கக்கூடிய தன்மை, வாயு, செரிமானக்கோளாறு, உப்புசம் போன்ற வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது. இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகுவதால், வயிற்றில் கோளாறுகளை நீக்கி, வயிற்றில் உள்ள அசவுகர்யங்களை குறைக்கிறது. மேலும் செரிமான பிரச்னைகளை சரிசெய்கிறது.
நோய் எதிர்ப்பை பலப்படுத்துகிறது
இந்த குடிநீரை நீங்கள் பருகும்போது, நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள், தொற்றுகளுக்கும், நோய்களுக்கும் எதிராக கவசம்போல் செயல்படுகிறது. உடலில் உள்ள நோய்கிருமிகளுக்கு எதிராக திரண்டு எழுந்து உடலை காக்கிறது.
மூச்சுப்பிரச்னைகளுக்கு நன்மை கொடுக்கிறது
இது நோய் எதிர்ப்பு கொடுப்பது, செரிமானத்தை தூண்டுவதுடன், பல்வேறு நன்மைகளை கொண்டது. சுவாச மண்டலத்தை வலுப்படுத்தி, சுவாச கோளாறுகளை தடுக்கிறது. சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றை கொடுக்கிறது. சுத்தமான சுவாசத்தை வழங்குகிறது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது
இந்த இரண்டு பொருட்களுமே இன்சுலீன் சென்சிட்விட்டி நிறைந்தது. இதை நாம் தினமும் எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது.
கொழுப்பை குறைக்கிறது
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள், கொழுப்பை குறைக்க உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் அன்றாட உணவில் இதை சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு நல்லது. உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு இது மிகவும் நல்லது. இதை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
டாபிக்ஸ்