Spicy Chicken Gravy : பார்த்தாலோ நாவில் எச்சில் ஊறும்.. இப்படி ஒரு முறை காட்டசாட்டமா சிக்கன் கிரேவி செய்து பாருங்க!
Aug 31, 2024, 01:17 PM IST
Spicy Chicken Gravy : சூடான சாதத்தில் சிக்கன் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் இந்த மாதிரி காட்ட சாட்டமா கிரேவி செய்து பாருங்க. அதன் ருசி அட்டகாசமா இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு அட்டகாசமான காமினேஷன் இது.
Spicy Chicken Gravy : பொதுவான இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிக்கன் என்றால் விரும்ப சாப்பிடுகின்றனர். சிக்கனில் விவத விதமான எத்தனை சமையல் செய்தாலும் சிக்கன் கிரேவிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. சூடான சாதத்தில் சிக்கன் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான். உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் இந்த மாதிரி காட்ட சாட்டமா கிரேவி செய்து பாருங்க. அதன் ருசி அட்டகாசமா இருக்கும். இட்லி, தோசை சப்பாத்திக்கு அட்டகாசமான காமினேஷன் இது.
சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சோம்பு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 2
அன்னாச்சி பூ - 1
ஏலக்காய் - 4
பட்டை - 3
கிராம்பு - 4
ஏலக்காய் - 4
தேங்காய் - அரை கப்
கறிவேப்பிலை
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை
வெங்காயம் - 2
தக்காளி- 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
மல்லித்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
சிக்கன் கிரேவி செய்முறை
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் சீரகம், 2 வர மிளகாய், ஒரு அன்னாச்சி பூ, 4 கிராம்பு, 4 ஏலக்காய், இலவங்கப்பட்டடை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடைசியாக அதில் ஒரு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். தேங்காய் துருவல் சிவந்து வரும் வரை வதக்க வேண்டும். அதில் ஒரு கைபிடி சின்ன வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இந்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். கடைசியாக அதில் 2 ஸ்பூன் மிளகாய் தூள், 3 ஸ்பூன் மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து பொரிய விட வேண்டும். சோம்பு பொரிந்த பிறகு 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்றாக சிவந்த பின்னர் அதில் ஒரு தக்காளி பழத்தையும் நன்றாக சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் 2 பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்க வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பின் அதில் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து கலந்து விட வேண்டும். அதில் ஒரு கொத்து கறிவேப்பிலையையும் சேர்க்க வேண்டும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சுத்தம் செய்து வைத்த கோழி துண்டுகளை சேர்க்க வேண்டும். நன்றாக வதங்கிய பின் அதில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். சிக்கன் நன்றாக வெந்த பிறகு கிரேவி கெட்டியாக வரும் போது பச்சை கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கலந்து விட வேண்டும்.
அவ்வளவு தான் ருசியான சிக்கன் கிரேவி ரெடி. இப்படி ஒரு முறை செய்தால் பின்னர் எப்போது வீட்டில் சிக்கன் வாங்கினாலும் இதே மாதிரி செய்து தர சொல்லி கேட்பார்கள்.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.