Chettinadu Chicken Masala : மணமணக்கும் மசாலா தோய்த்த செட்டிநாடு சிக்கன் – இதோ இப்டி செஞ்சு பாருங்க!-chettinadu chicken masala chettinadu chiken masala check out ipti senju - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chettinadu Chicken Masala : மணமணக்கும் மசாலா தோய்த்த செட்டிநாடு சிக்கன் – இதோ இப்டி செஞ்சு பாருங்க!

Chettinadu Chicken Masala : மணமணக்கும் மசாலா தோய்த்த செட்டிநாடு சிக்கன் – இதோ இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Oct 21, 2023 04:52 PM IST

Chettinadu Chicken Masala : மணமணக்கும் மசாலா தோய்த்த செட்டிநாடு சிக்கன், இதோ இப்டி செஞ்சு பாருங்க.

Chettinadu Chiken Masala : மணமணக்கும் மசாலா தோய்த்த செட்டிநாடு சிக்கன் – இதோ இப்டி செஞ்சு பாருங்க!
Chettinadu Chiken Masala : மணமணக்கும் மசாலா தோய்த்த செட்டிநாடு சிக்கன் – இதோ இப்டி செஞ்சு பாருங்க!

கசகசா – 1 ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

பட்டை – 3

கிராம்பு – 6

ஸ்டார் சோம்பு – 2

பிரியாணி இலை – 3 சிறியது

வர மிளகாய் – 10

வர கொத்தமல்லி – 2 ஸ்பூன்

ஏலக்காய் – 1

தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)

செட்டிநாடு சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்

சிக்கன் – ஒன்றரை கிலோ

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 4

தக்காளி – 4

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – 4 கொத்து

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்

கசூரி மேத்தி – 2 ஸ்பூன்

சோம்பு – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கொடுத்துள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் நன்றாக ட்ரை ரோஸ்ட் செய்துகொள்ள வேண்டும். மல்லி நீண்ட நேரம் வறுத்தால் கசப்பு சுவை ஏறிவிடும்.

அதனால் நன்றாக வறுத்தவுடனே, இதில் தேங்காயைப்போட்டு தேங்காய் பொன்னிறமாக வறுத்தவுடனே, ஆறியபின் இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் வாசம் வருவது பதம். ட்ரையாகவே மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்தவுடன், அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன், அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

இப்போது சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து மூடி வைத்துவிடவேண்டும். அதிலிருந்து வரும் தண்ணீரிலேயே சிக்கன் நன்றாக வெந்து வரும்.

சிக்கன் வெந்துகொண்டிருக்கும்போதே, பொடியாக வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக மூடிவைத்து கொதிக்க விடவேண்டும். கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும்.

வெந்தவுடன் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது 2 ஸ்பூன் கசூரி மேத்தியை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு கிளறு கிளறி இறக்கிவிட்டால், சுவையான மணமணக்கும் செட்நாடு சிக்கன் சாப்பிட தயாராக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.