Benefits of Tomato : ஆரோக்கியமான விந்தணுக்களை அளிப்பது முதல் எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த தக்காளி பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Tomato : ஆரோக்கியமான விந்தணுக்களை அளிப்பது முதல் எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த தக்காளி பாருங்கள்!

Benefits of Tomato : ஆரோக்கியமான விந்தணுக்களை அளிப்பது முதல் எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த தக்காளி பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jul 27, 2024 07:00 AM IST

Benefits of Tomato : ஆரோக்கியமான விந்தணுக்களை அளிப்பது முதல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது வரை எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த தக்காளி பாருங்கள்.

Benefits of Tomato : ஆரோக்கியமான விந்தணுக்களை அளிப்பது முதல் எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த தக்காளி பாருங்கள்!
Benefits of Tomato : ஆரோக்கியமான விந்தணுக்களை அளிப்பது முதல் எத்தனை நன்மைகள் நிறைந்தது இந்த தக்காளி பாருங்கள்!

தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

தக்காளி அதன் பன்முக குணங்களுக்காக சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்து நிறங்களிலும் உள்ளது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பாற்றலை அகிகரிக்கிறது

தக்காளியின் சாறில், வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின்கள் உள்ளது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு உறுதுணையாக உள்ளது. தக்காளியின் சாறு நோய் எதிர்ப்பு செல்களின் அளவை அதிகரிக்கிறது.

புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது

தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின், லைக்கோபென் மற்றும் மற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் என அனைத்திலும் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களில் டிஎன்ஏ சேதத்தை குறைக்கிறது. இது புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை இறக்கச் செய்கிறது.

ஆண்கள் சமைத்த தக்காளிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது அவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. மார்பில் கட்டிகள் வராமல் தடுக்கிறது. வயிறு, நுரையீரல் செரிமான மண்டலம் மற்றும் மலக்குடலில் புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

தக்காளி அதிகம் நிறைந்த உணவு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. அதிகளவில் லைக்கோபென் சாப்பிடும்போது, உங்கள் ரத்த அளவை அதிகரித்து இதய நோய் ஆபத்தை 14 சதவீதம் குறைக்கிறது.

ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது

தினமும் தக்காளியை ஆண்கள் அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளும்போது, அது அவர்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. இதனால் அவர்களால் 12 வாரத்தில் பயன்பெறுகிறார்கள். லைக்கோபென்க்ள அளவை ரத்தத்தில் தக்காளிச்சாறு அதிகரிக்கச் செய்கிறது. ஆண்களின் விந்தணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

மலச்சிக்கலைத் தடுக்கிறது

போதிய அளவு தண்ணீர் பருகாமல் இருந்தாலோ அல்லது நார்ச்சத்துக்கள் எடுத்துக்கொள்ளாமல் போனாலோ அது மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒரு தக்காளியில் 1.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத இரண்டு வகை நார்ச்சத்துக்களும் உள்ளன. கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், செரிமானத்தின்போது ஜெல்போன்ற திரவத்தை உருவாக்குகிறது.

கரையாத நார்ச்சத்துக்கள் மலத்தை அதிகரிக்கிறது. இதனால் அதை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ் மற்றும் பெக்டின் நார்ச்சத்துக்கள் பெருங்குடலில் செரிமானத்தை அதிகரித்து, ஆரோக்கியமாக மலம் கழிக்க உதவுகின்றன.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது

தக்காளியில் உள்ள லைக்கோபென்தான் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. வீக்கத்தை குறைத்து, செல்களின் சேதத்தை தடுத்து இவை சர்க்கரையை குறைக்கின்றன. நார்ச்சத்துக்களும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகின்றன.

வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கின்றன

வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்பது, இதய நோய்கள், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இந்த கோளாறுகள் உள்ளவர்களுக்கு தொப்பை ஏற்படும், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை, அதிக ட்ரைகிளிசரைட்ககள், நல்ல கொழுப்பை குறைக்கிறது. ரத்தத்தில் உள்ள லைக்கோபென், வளர்சிதை மாற்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது.

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் லைக்கோபென் ஆகியவை மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது நினைவாற்றல் இழப்பை குறைக்கிறது.

உடற்பயிற்சியில் இழக்கும் ஆற்றலை மீட்கிறது 

நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது அது உங்கள் உடலில் உள்ள புரதச்சத்துக்களில் சேதத்தை ஏற்படுத்தும். தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விளையாட்டு வீரர்களுக்கு உதவுகிறது. அவர்கள் தக்காளி சாறு பருகினாலே பலன் கிட்டும்.

தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கலோரிகள் 22.5, கொழுப்பு 0.25 கிராம்கள், சோடியம் 6.25 மில்லி கிராம்கள், கார்போஹைட்ரேட்கள் 4.86 கிராம்கள், நார்ச்சத்துக்கள் 1.5 கிராம்கள், 0 சர்க்கரை, புரதச்சத்துக்கள் 1.1 கிராம் உள்ளது.

Whats_app_banner
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.