தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  புதிய வசதிகளுடன் வருகிறது ‘Maruti Suzuki Alto K10 2022’

புதிய வசதிகளுடன் வருகிறது ‘Maruti Suzuki Alto K10 2022’

Aug 14, 2022, 02:25 PM IST

மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட உள்ள ஆல்டோ கே10 காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட உள்ள ஆல்டோ கே10 காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.

மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட உள்ள ஆல்டோ கே10 காரின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கே காண்போம்.

இந்தியாவில் இருக்கும் முக்கியமான பிரபல கார் நிறுவனங்களில் மாருதி சுசுகி நிறுவனமும் ஒன்று. பல கார்களை நிறுவனம் சிறப்பான முறையில் வெளியிட்டு வருகின்றன. அதிலும் ஹாட்ச் பேக் கார்களில் மிகவும் பிரபலமாக இருப்பது மாருதி சுசுகி ஆல்டோ கே10 கார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Thinai Puttu : தித்திக்கும் திணை புட்டு! வறுத்த முந்திரி சேர்த்து சாப்பிட குழந்தைகள் குதூகலிப்பார்கள்!

Oil Pulling Benefits: ’வெண்மை பற்களும்! அழகிய சிரிப்பும் வேண்டுமா! ஆயில் புல்லிங் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?’

Benefits of Masturbation : செக்ஸ்வல் ஆர்கஸம் மட்டுமல்ல; சுயஇன்பத்தால் உடலுக்கு எத்தனை நன்மைகள் பாருங்கள்!

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

இந்த கார் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது அதே சமயம் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இந்த காருக்கு 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கார் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.

சிறப்பம்சங்கள்

  • இந்த கார் STD(0), LXi, VXi, VXi+ உள்ளிட்ட 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. டாப் இரண்டு வேரியண்ட்களில் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
  • இதன் எக்ஸ் ஷோரூம் விலையானது 3.50 லட்சம் ரூபாய் முதல் தொடங்கி 3.75 லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த கார் சாலிட் ஒயிட் வண்ணங்கள் உள்பட பிரீமியம் எர்த் கோல்ட் மெட்டாலிக் ரெட், மெட்டாலிக் ப்ளூ, மெட்டாலிக் சில்கி சில்வர் மற்றும் மெட்டாலிக் கிராண்டி கிரே ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது. ஆனால் டூயல் டோன் கலர் ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை
  • இதில் K10C சீரிஸ் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 6 BHP பவர் மற்றும் 89NM டார்க் வசதி கொண்டதாகும்.
  • இந்த ஏற்கனவே அதிக மைலேஜ் தரும் கார்களில் ஒன்றாக இருந்தது. அதனால் இந்த கார் 25 KMPL மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இதில் 5 ஸ்பீட் கியர் பாக்ஸ் வசதி, ஆட்டோமேட்டிக் கியர் மாடல் 4 கியர் வசதி, மாற்றியமைக்கப்பட்ட இன்டீரியர் போன்ற பல வசதிகள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளன.
  • இதில் பாதுகாப்புக்காக ABS, EBD, ஸ்பீட் அலெர்ட், சீட் பெல்ட் வார்னிங், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், 2 ஏர் பேக் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.