தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? இந்த எளிய வீட்டு தீர்வுகளே போதும்! உங்களுக்கு நிவாரணம் தரும்!

Priyadarshini R HT Tamil

May 04, 2024, 03:45 PM IST

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
Sensitive Teeth : பற்களில் கூச்சமா? வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

Sensitive Teeth : பற்களில் கூச்சமா? வீட்டிலிருந்தே செய்யக்கூடிய தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

பல் கூச்சத்துக்கான தீர்வுகள்

பல் கூச்சத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பல் சொத்தை, நோய், மரபணு, பற்சிதைவு மற்றும் பல்வேறு காரணங்கள் உள்ளன. நீங்கள் அதிகளவில் சூடாகவோ அல்லது ஜில்லென்ற உணவை உட்கொள்ளும்போதோ அல்லது ஆசிட் உணவுகளை உட்கொள்ளும்போதோ பற்களின் வேர்களில் உள்ள நரம்புகள் தூண்டப்படும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

அது உங்கள் பற்களில் கூச்சத்தை ஏற்படுத்தும். பல் வலியை கடக்கவேண்டுமெனில், அதை குறைப்பதற்கு வீட்டில் பல்வேறு தீர்வுகள் உள்ளன. பற்கூச்சம் மற்றும் பல் வலியை போக்க நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

டூத்பேஸ்ட்

கூச்ச சுபாவம் உள்ள பற்களுக்கென்று பிரத்யேகமான பற்பசைகள் உள்ளன. அவற்றில் பொட்டாசியம் நைட்ரேட் அல்லது ஃப்ளுரைட் இருக்கும். இவை நரம்பின் குழாய்களை அடைத்து வலியை குறைக்கும். எனினும், இதைப் பயன்படுத்துவதால், எரிச்சல் மற்றும் ருசியில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறது. நீங்கள் இயற்கை தீர்வுகளை தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாக இருக்கும்.

ஈறுகளில் மசாஜ்

கிராம்பு, கொய்யா இலைகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு வைத்தியங்களை நீங்கள் கடைபிடிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இவை பாதுகாப்பாக பற்கூச்சத்தை போக்கும்.

கிராம்பில் உள்ள ஆன்டி செப்டிக் மருத்துவ குணங்கள், இயற்கையில் தயாரிக்கப்படும் பற்பொடிகளில் கலக்கப்படுகிறது. இது பற்கூச்சத்தை போக்கும் சிறந்த மருந்தாக கடைபிடிக்கப்படுகிறது.

ஃபிரஷ் செய்வதில் கவனம்

நீங்கள் கடினமாகவும், நீண்ட நேரமும் பற்களை ஃபிரஷ் செய்யும்போது, உங்கள் பற்களின் ஈறுகள் பாதிக்கப்படும். பற்களின் எனாமலை குறைக்கும். இதனால் ஈறுகளில் தேய்மானம் ஏற்படும். மேலும் பல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

எனவே, மிருதுவான ஃபிரிசில்களை கொண்ட ஃபிரஷ்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பற்களில் பிரச்னைகள் உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டம். வட்ட வடிமாக பல் துலக்குவதை உறுதிப்படுத்துங்கள். பற்கள் முழுவதையும் சுத்தம் செய்வதை உறுதிப்படுத்தவேண்டும்.

தரமான ஃபிரஷ்களை பயன்படுத்துங்கள். உங்களுக்கு பற்கூச்சம் இருந்தால் அதை பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது. வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வேண்டும்.

பல் இடுக்குகளில் ஒளிந்துள்ள அழுக்குகளை அகற்றுவது

பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவு துகள்களை முறையாக நீக்குவது மிகவும் முக்கியம்.

நீங்கள் பற்களில் உள்ள ப்ளேக் மற்றும் பற்களுக்கு இடையில் உள்ள இடங்களில் உள்ள சிதைவுகளை அகற்றவேண்டும். ஃபிரஷ் சென்று சுத்தம் செய்ய முடியாத இடத்தில் கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். வீங்கிய ஈறுகளை சரிசெய்வது மிகவும் முக்கியம்.

டூத் பிக்

நூல்களை வைத்து பற்களை சுத்தம் செய்வது பழைய முறை என்றாலும், டூத் பிக் வைத்து சுத்தம் செய்துகொள்ளுங்கள். அது பற்களை சுத்தம் செய்வதற்கு உரிய எளிய வழியாகும். பற்களை நன்றாக சுத்தம் செய்ய உதவுகிறது. பற்களில் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது சிறந்த பலனைக்கொடுக்கிறது.

பற்களில் கூச்சத்தை தடுப்பதற்கு டூத் பிக்கை வைத்து சுத்தம் செய்வது மிகவும் உதவுகிறது. இது ஈறுகளின் பிரச்னைகளைத் தடுக்கிறது. எனவே உங்கள் பற்கள் ஆரோக்கியத்துக்கு இதை நன்றாக பயன்படுத்துங்கள்.

உணவில் மாற்றம்

அதிக சர்க்கரை, ஆசிட் உணவுகள், பானங்கள் உங்கள் பற்களின் எனாமலுக்கு சேதத்தை ஏற்படுத்தி, உங்கள் பற்களில் கூச்சத்தை ஏற்படுத்தும். எனவே ஃபிரஷ் காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் பருகுங்கள். காஃபைன் உள்ள பானங்களை எடுத்துக்கொள்வதை நிறுத்துங்கள். ஆசிட் பானங்கள் மற்றும் காபியை தவிர்ப்பது உங்கள் பற் கூச்சத்தை சரிசெய்ய உதவும்.

வழக்கமான பல் பாதுகாப்பு முறைகள்

உங்கள் பற்களை அவ்வப்போது மருத்துவரிடம் சென்று, தேவையான அளவு சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஈறுகளின் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை கூறி நிவாரணம் பெறுங்கள். தேவையற்ற இடங்களில் உள்ள துவாரங்களை அடைத்துவிடுங்கள்.

இல்லாவிட்டால் அந்த இடத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் சிக்கிக்கொண்டு உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். பல் மருத்துவர்களின அறிவுரையை பெற்று பற்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுக்கு தேவைப்பட்டால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் குறிப்பு

கூச்சமுள்ள பற்கள் உங்கள் வாழ்க்கை தரத்தை பாதிக்கும். ஆனால், பற்களை பாதுகாப்பது மற்றும் சிறு கோளாறுகளுக்கு வீட்டில் தீர்வுகள் எடுத்துக்கொள்வது உங்கள் பற்களுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்வதன் மூலம், உங்கள் பல் பிரச்னைகளை கையாள உதவும். தேவைப்பட்டால் மருத்துவரின் அறிவுரையைப் பெறுங்கள். சிகிச்சைகளும் எடுத்துக்கொள்ளுங்கள். வலியில்லாத புன்னகைக்கு உங்கள் பற்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி