தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Social Media Giving Day 2024 : சமூக ஊடகங்கள் வழங்கும் நாள்; வரலாறு, முக்கியத்துவம், கருப்பொருள் என்ன தெரியுமா?

Social Media Giving Day 2024 : சமூக ஊடகங்கள் வழங்கும் நாள்; வரலாறு, முக்கியத்துவம், கருப்பொருள் என்ன தெரியுமா?

Priyadarshini R HT Tamil

Jul 15, 2024, 05:59 AM IST

google News
Social Media Giving Day 2024 : சமூக ஊடகங்கள் வழங்கும் நாளின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
Social Media Giving Day 2024 : சமூக ஊடகங்கள் வழங்கும் நாளின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Social Media Giving Day 2024 : சமூக ஊடகங்கள் வழங்கும் நாளின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கருப்பொருள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்கள் தினம், ஆண்டுதோறும் ஜூலை 15ம் தேதி, சமூக ஊடகங்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்திய ஆழமான பாதிப்புகள் குறித்து நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படுகிறது. இந்த டிஜிட்டல் ஊடகங்கள், எப்படி உலகத்துடன் தொடர்புகொள்வதில் புரட்சியை ஏற்படுத்தின என்பதை கொண்டாடவும், அதை அங்கீகரிப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.

தொலைவுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது முதல், சமூகங்களை வளர்ப்பது வரை நவீன சமுதாயத்தை வடிவமைப்பதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கலாச்சாரங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து இவை எதிர்பாராத தொடர்புகள் மற்றும் பகிர்தல் என செய்கின்றன.

சமூக வலைதளம் தனிநபர்கள், பலரின் ஒருமித்த குரல், கலாச்சார பரிமாற்றத்துக்கு நேர்மறையான பங்களிப்பு, புதுமையை புகுத்துதல் மற்றும் சமூக வளர்ச்சியில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன என்பதை உயர்த்தி காட்ட வேண்டிய தினமாக இந்த நாள் உள்ளது.

தினம்

சமூக ஊடகங்கள் தினம், ஜூலை 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளவில் தொடர்புகளை அதிகரித்தது மற்றும் கலாச்சார பகிர்வு என அதன் சாதனைகள் குறித்து நாம் நினைவுகூறவேண்டும்.

கருப்பொருள்

சமூக ஊடக தினம், இந்தாண்டுக்கு என குறிப்பிட்ட கருப்பொருள் ஒன்றும் இல்லை. தனிப்பட்ட எவ்வித கவனமும் இன்றி சமூக ஊடகங்கள் உலகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள வளர்ச்சி மற்றும் பாதிப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் கலாச்சாரத்தை தொடரவேண்டும் என்பது பொதுவான கருப்பொருள் ஆகும்.

முக்கியத்துவம்

நமது வாழ்வில் சமூக ஊடகங்களின் தனிப்பட்ட பாதிப்புக்களை வெளிப்படுத்த இந்த நாள் ஊக்குகிவிக்கிறது.

சமூகத்தில் சமூக ஊடகங்களில் நேர்மறையான பாதிப்புகளை நினைவூட்ட இந்த நாள் உதவுகிறது.

தொண்டு நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த இந்த நாள் ஊக்குவிக்கிறது.

கோவிட் – 19 தொற்று காலங்களில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்தன. தேவைப்படும் நிறுவனங்களுக்காக நிதி திரட்டவும், பயனளிக்கவும் அது உதவியது.

தொற்று காலத்தில் பணியிழந்தவர்கள், சில நன்மைகளை இந்த நாளில் பங்களிப்பதன் மூலம் பெற்றனர்.

சமூக ஊடகங்கள் தினம், சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் மற்றும் ஆதரவு திரட்டுவது மற்றும் சமூகமாக வளர்வதற்கு உதவுகிறது.

வரலாறு

2010ம் ஆண்டு சமூக ஊடகங்கள் தினம், மாஷேபிள்ஸ் முன்னெடுப்பில் அதன் பாதிப்புகளை குறித்து பேசுவதற்காக கொண்டாடப்பட்டது. பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இதற்கான புகழ் அதிகரித்து வந்தது. பலர் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காக இந்த நாள் மேடை அமைத்துக்கொடுத்தது. செய்திகளை பகிர்வது, நட்பு பாராட்டுவது என இந்த நாள் இருந்தது.

2013ம் ஆண்டு, கிவ்வர்.காம் என்ற தன்னார்வ தொழில்நுட்ப நிறுவனம், இந்த நாளை முன்னெடுத்தது. இந்த புதுமையான தினம், சமூக ஊடக பயனாளர்களை தொண்டு காரணங்களுக்காக இந்த நாளை பயன்படுத்த அறிவுறுத்தியது. நன்கொடைகளை வழங்குவதற்கு டிவிட்டர் போன்ற வலைதளங்களை பயன்படுத்த அறிவுறுத்தியது. 

கிவ்வர்.காம், அந்த ஆண்டில் 5 மாதங்கள் எடுத்து இந்த நாளை ஊக்குவித்தது. நிகழ்வுகள், அரசியல் தலைவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் அமெரிக்கா முழுவதும் இந்த நாளின் முக்கியத்தும் மற்றும் சமூக நலனுக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து வலியுறுத்தினார்கள்.

இதனால், அமெரிக்கா முழுவதிலும் உள்ள கவர்னர்கள் மற்றும் மேயர்கள் இந்த நாளை அங்கீகரித்தனர். டிஜிட்டல் வழியாக சமூகங்களை இணைத்து, மக்களை நேசிக்க தூண்டுகோலாய் இருக்க அறிவுறுத்தினர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி