தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Shankar: ‘சாதி சான்றிதழ் வாங்க காக்க வைத்த சமூகம்.. கேமராவை எடுத்த ஷங்கர் ’ - தாத்தா உருவான கதை!

Director shankar: ‘சாதி சான்றிதழ் வாங்க காக்க வைத்த சமூகம்.. கேமராவை எடுத்த ஷங்கர் ’ - தாத்தா உருவான கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 11, 2024 05:36 PM IST

Director shankar: “சாதரண மனிதர்களின் மனதில் இருக்கக்கூடிய மொத்த கோபத்தின் உருவம்தான், இந்தியன் தாத்தா கேரக்டர். சரி, அந்த கேரக்டர் கோபப்படக்கூடிய ஆள் என்று முடிவு செய்து விட்டோம்.” - ஷங்கர்

Director shankar: ‘சாதி சான்றிதழ் வாங்க காக்க வைத்த சமூகம்.. கேமராவை எடுத்த எடுத்த ஷங்கர் ’ - தாத்தா உருவான கதை!
Director shankar: ‘சாதி சான்றிதழ் வாங்க காக்க வைத்த சமூகம்.. கேமராவை எடுத்த எடுத்த ஷங்கர் ’ - தாத்தா உருவான கதை!

இயக்குநர் ஷங்கர் இந்தியன் தாத்தா உருவான கதையை ‘தி இந்து’ (ஆங்கிலம்) யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். 

தாத்தா உருவானது எப்படி? 

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “ என்னுடைய கோபத்தினுடைய உருவம் தான் இந்தியன் தாத்தா. நான் சிறுவயதாக இருந்த பொழுது, ஜாதி சான்றிதழ் வாங்குவதற்கு, வருமான வரி சான்றிதழ் வாங்குவதற்கு, நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். அதை நான் ஒரு ஃபிலிம் மேக்கராக மாறும்பொழுது, திரைப்படமாக மாற்றினேன். இப்படி, எல்லா சாதரண மனிதர்களின் மனதில் இருக்கக்கூடிய மொத்த கோபத்தின் உருவம்தான், இந்தியன் தாத்தா கேரக்டர். சரி, அந்த கேரக்டர் கோபப்படக்கூடிய ஆள் என்று முடிவு செய்து விட்டோம். 

யார் அப்படி இருப்பார் என்று யோசிக்கும் பொழுது, அவருக்கு இப்படி கோபப்படுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது, அந்த கேரக்டர் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருக்கலாம் என்று முடிவு செய்தோம். காரணம், வெளிநாட்டவர்களிடமிருந்து கடுமையாக போராடி மீட்ட சுதந்திரத்தை, உள்நாட்டவர்கள் நாசம் செய்வதற்கு நான் விடமாட்டேன்; அதை பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அந்த கேரக்டர் நினைப்பதற்கு அது சரியாக இருக்கும். அப்படித்தான் அந்த கேரக்டரை நாங்கள் வடிவமைத்தோம். 

வாழ்க்கையில் இருந்துதான் கதை எடுக்கிறோம்

அதன்பின்னர் அந்த கேரக்டருக்கு ஒரு குடும்பத்தை கொண்டு வந்தோம். அப்படியே அந்தக் கதை விரிந்தது. எல்லா கதைகளையுமே நாம் வாழ்க்கையில் இருந்து தான் எடுக்கிறோம். அதை அப்படி இருந்தால் எப்படி இருக்கும், இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறோம். அப்படித்தான் கதையை உருவாக்குகிறோம். வாழ்க்கையின் அன்றாட பிரச்சினைகளில் இருந்து கதை எடுக்கும் போது, அது நமக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது. நமக்கு நெருக்கமான கதையாக மாறும் போது அது மக்களுக்கு நெருக்கமான கதையாக மாறுகிறது.” என்று பேசினார். 

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன் 2 ட்ரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் கமல் ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசுகையில், " இந்த படத்தில் நிறைய குடும்பங்கள் வந்து போகும். படம் முடியும் போதும் அனைவரையும் யோசிக்க வைக்கும் என நம்புகிறேன். இந்த படம் சிறப்பாக அமைய கமல் ஹாசன் தான் காரணம்.

சாப்பிட முடியாது

அந்த மேக்கப் போட்டால் சரியாக சாப்பிட முடியாது. தண்ணீர், ஜூஸ் மாதிரி குடிக்க தான் முடியும். எல்லாருக்கும் முன்பு அவர் தான் வருவார். அவர் தான் கடைசியாக செல்வார். அவரின் உழைப்பை சொல்லவே முடியாது.

இன்றைய காலகட்ட இந்தியன் தாத்தா

பகுதி 1 விட கமலை இரண்டாம் பகுதியில் நன்றாக பார்க்க முடியும். இன்றைய காலகட்டத்தில் இந்தியன் தாத்தா இருந்தால் என்னென்ன செய்வார் என்பதை வைத்து தான் இந்தியன் 2 படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

முதல் பாகம் தமிழ்நாட்டை சார்ந்து மட்டும் இருந்தது. இரண்டாம் பாகம் எல்லைகளை கடந்து உருவாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் நடிக்கும் போது 20 நாட்கள் மேக்கப் போட்டு நடித்தார் கமல். ஆனால் இரண்டாம் பாகத்திற்கு 70 நாட்கள் அந்த மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். நான் எதிர்பார்த்தை விட அனிருத் சிறப்பாக பாடல் அமைத்து கொடுத்து இருக்கிறார்.

இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் வருவார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவரை திரையில் பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகா்வால், சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளனா். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 வரும் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: