Armstrong murder case: யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்? திருவேங்கடம் மரணம்! சந்தேகம் கிளப்பும் ஈபிஎஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Armstrong Murder Case: யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்? திருவேங்கடம் மரணம்! சந்தேகம் கிளப்பும் ஈபிஎஸ்!

Armstrong murder case: யாரை காப்பாற்ற இந்த என்கவுண்டர்? திருவேங்கடம் மரணம்! சந்தேகம் கிளப்பும் ஈபிஎஸ்!

Kathiravan V HT Tamil
Jul 15, 2024 02:20 PM IST

Thiruvenkadam encounter: சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது என எடப்பாடி பழனிசாமி கருத்து

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர்? திருவேங்கடம் மரணம்! சந்தேகம் கிளப்பும் ஈபிஎஸ்!
யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர்? திருவேங்கடம் மரணம்! சந்தேகம் கிளப்பும் ஈபிஎஸ்!

எடப்பாடி பழனிசாமி ட்வீட் 

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?

கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா?

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!

இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை CBI-க்கு மாற்றவேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் பேசுபொருள் ஆனது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 

குற்றவாளிகள் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

மேலும் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோ மாற்றப்பட்டு புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அருண் ஐபிஎஸ், ரவுடிசத்தை கடுப்படுத்துவதே முதல் வேலை. ரவுடிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்தான் எங்கள் முன்னுரிமை அளிப்பேன் என கூறினார்.

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை

போதை பொருட்கள் பரவல் அதிகரித்துவிட்டதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ”தினமும் ஒரு திட்டம் கொடுப்பதால் பிரயோஜனம் கிடையாது. காவல் அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து செய்தாலே குற்றங்கள் குறையும்” என கூறி இருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.